- விவரங்கள்
-
பிரிவு: எவரை வணங்குகிறோம்?
யோவான் 1:1 கூறுகிறது, 'ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனுடன் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது'. இவ்வசனம் வார்த்தை கடவுளுடன் இருந்ததாகவும், அதே சமயத்தில் அதுவே கடவுளாகவும் இருந்ததாகவும் சொல்கிற மாதிரி தெரிகிறது. கூட பரிசுத்த ஆவிபற்றி குறிப்பிடாத பற்றாக்குறை இருப்பினும், இவ்வசனம் திரித்துவத்தை நிரூபிக்க மேற்கோள் காட்டப்படுவது வழக்கம். யோவானின் மூல வார்த்தைகளை கிரேக்க மொழியில் படித்துப் பார்ப்போம். வார்த்தை (லோகாஸ்) பற்றியும் தேவன் பற்றியும் அவர் உண்மையில் என்ன சொல்கிறார் என்பது பற்றி தெளிவான புரிதல் கிடைக்கும்.
மேலும் படிக்க: யோவான் 1:1 - வார்த்தையும் தேவனும்
- விவரங்கள்
-
பிரிவு: எவரை வணங்குகிறோம்?
இயேசு, 'என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்,' என்கிறார் (யோவான் 14:9). இன்னொரு இடத்தில் அவர், 'நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்,' என்கிறார் (யோவான் 10:30). மேலும், 'ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்' எனவும் கூறுகிறார் (யோவான் 8:58). இவற்றால் அவர் என்னதான் சொல்ல முனைகிறார்? சரியாக புரிந்து கொள்ள இந்த கூற்றுகளின் பின்னணியைப் பார்ப்போம். மேலும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் (மத்தேயு 28:19) கொடுப்பதன் அர்த்தம் பற்றியும் கற்றுக்கொள்வோம்.
மேலும் படிக்க: வினோதமான வழக்குகள் - பதினாலுத்துவம், நான் இருக்கிறேன்..
- விவரங்கள்
-
பிரிவு: எவரை வணங்குகிறோம்?
மறையியல் ஞானமார்க்க தத்துவங்கள் (Gnosticism) பரவ ஆரம்பித்தபோது அப்போஸ்தலர் யோவான் இயேசு தேவகுமாரன் என்பதையும், வல்லமை வாய்ந்த வார்த்தையானவர் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்தி பதிலளிக்கிறார். அந்த வரலாற்று சூழலின் வெளிச்சத்தில் பார்த்தால் யோவானின் புத்தகங்கள் ஒரு புது அர்த்தம் கொள்கின்றன. அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு, ஞானமார்க்கத்திற்கு எதிர்ப்பாக சில கிறிஸ்தவர்கள் இயேசுவைப் படிப்படியாக தேவனுடைய குமாரன் என்ற ஸ்தானத்திலிருந்து தேவனுக்கே இணையாக உயர்த்துவதை வரலாறு காட்டுகிறது. பிறகு 4-ம் நூற்றாண்டில், இயேசுவை கடவுள் என்று அறிவிக்கும் ஒரு பிரமாணத்தை (Creed) நிறுவவதில் அரசியல் ஆற்றும் பங்கைக் காண்கிறோம். திரித்துவம் என்ற கோட்பாடு - அதாவது, பரிசுத்த ஆவியும் கடவுள் எனும் தத்துவம், 5-ம் நூற்றாண்டில் நுழைகிறது.
மேலும் படிக்க: திரித்துவம் கிறிஸ்தவத்துள் நுழைந்த கதை
- விவரங்கள்
-
பிரிவு: எவரை வணங்குகிறோம்?
'பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்' எனவும் (1கொரிந்தியர் 8:6), அந்த தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்' எனவும் (யோவான் 3:16) வேதவாக்கியங்கள் அறிவிக்கின்றன. நம் கர்த்தராகிய (எஜமானாகிய) இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை (எபேசியர் 1:17) நாம் தொழுதுகொண்டு, பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தர் (எஜமான்) என்று அறிக்கைபண்ண வேண்டும் (பிலிப்பியர் 2:11). ஆனால் இதன் முக்கியத்துவம் என்ன?
மேலும் படிக்க: இது அவ்வளவு முக்கியமா?