எவரை வணங்குவது?
- விவரங்கள்
- பிரிவு: எவரை வணங்குகிறோம்?
கருப்பொருள் வசனம் – இயேசு அவளிடம், "நீங்கள் புரிந்துகொள்ள முடியாததை வணங்கி வருகிறீர்கள். நாங்கள் வணங்கப்படுபவரைப் புரிந்துகொண்டிருக்கிறோம்," என்றார். (யோவான் 4:22)
1) இன்று பரவலாக கிறிஸ்தவ தேவாலயங்கள் யாரை வழிபடுகின்றன?
கத்தோலிக்க தலைமை வாடிகன் (Vatican) அமைப்பும், பரவலாக ப்ராட்டஸ்டண்ட் (Protestant) திருச்சபைகளும் ஏற்றுக்கொள்ளும் அதநாசியின் பிரமாணம் (Athanasian Creed) இவ்வாறு உரைக்கிறது:
"தேவத்துவமுள்ளவர்களை கலவாமலும், தேவத்துவத்தைப் பிரியாமலும், ஏகதேவனை திரித்துவமாகவும்: திரித்துவத்தை ஏகத்துவமாகவும் வணங்கவேண்டுமென்பதே. பிதாவானவர் ஒருவர், குமாரனானவர் ஒருவர், பரிசுத்த ஆவியானவர் ஒருவர்.
பிதா நித்தியர் நித்தியர், குமாரனும் நித்தியர்: பரிசுத்த ஆவியும் நித்தியர். ஆகிலும் மூன்று நித்திய வஸ்துக்களில்லை. நித்திய வஸ்து ஒன்றே. அப்படியே பிதா சர்வ வல்லவர், குமாரனும் சர்வ வல்லவர்: பரிசுத்த ஆவியும் சர்வ வல்லவர். ஆகிலும் மூன்று சர்வ வல்ல வஸ்துக்களில்லை. சர்வ வல்ல வஸ்து ஒன்றே. அப்படியே பிதா தேவன், குமாரனும் தேவன்: பரிசுத்த ஆவியும் தேவன். ஆகிலும் மூன்று தேவர்களில்லை: தேவன் ஒருவரே. அப்படியே பிதா கர்த்தர், குமாரனும் கர்த்தர்: பரிசுத்த ஆவியும் கர்த்தர். ஆகிலும் மூன்று கர்த்தர்களில்லை: கர்த்தர் ஒருவரே. அம்மூவரில் ஒவ்வொருவரும் தனித்தனியாக தேவனென்றும் கர்த்தரென்றும் அறிக்கையிடவேண்டும்.. மூன்று தேவர்கள் உண்டென்றும், மூன்று கர்த்தர்கள் உண்டென்றும் சொல்லக் கூடாது.. பிதா ஒருவராலும் உண்டாக்கப்பட்டவருமல்ல. குமாரன் பிதாவினாலேயே இருக்கிறவர்: உண்டாக்கப்பட்டவருமல்ல, ஜெனிப்பிக்கப்பட்டவரே.. அன்றியும் இந்த திரித்துவத்தில் ஒருவரும் முந்தினவருமல்ல, பிந்தினவருமல்ல: ஒருவரில் ஒருவர் பெரியவருமல்ல, சிறியவருமல்ல. மூவரும் சம நித்தியரும்: சரிசமானருமாம். ஆதலால் மேற்சொல்லியபடி, எல்லாவற்றிலும்: ஏகத்துவத்தை திரித்துவமாகவும், திரித்துவத்தை ஏகத்துவமாகவும் வணங்க வேண்டும்."
இந்த விசுவாச அறிக்கையானது நாம் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி - என மூன்று நபர்களை வணங்க வேண்டும் எனச் சொல்லி, ஆனால் அந்த மூன்று பேரும் ஒரே தேவன் எனவும் கூறுகிறது. நிச்சயமாக, புரிந்து கொள்ள கடினமான ஓர் விசயம் தான்!
2) சிலர் கேட்கலாம் - 'நாம் இதைப் புரிந்து கொள்வது அவசியமா, என்ன? புரிந்துகொள்ளமுடியாத மறைபொருளாய் அது இருக்கலாம் இல்லையா?'
ஆனால், பொருத்தமான கேள்வி என்னவெனில் - அது போன்ற ஒரு மனப்போக்கு வேதப்பூர்வமாக சரியா? இயேசுவானவர் சமாரியப் பெண்ணை வணங்குவது என்னவென்று புரிந்துகொள்ளாததற்காக கடிந்துகொண்டது உண்மை தானே! ஆம், அவர், "நீங்கள் புரிந்துகொள்ள முடியாததை வணங்கி வருகிறீர்கள். நாங்கள் வணங்கப்படுபவரைப் புரிந்துகொண்டிருக்கிறோம்' என்றார்! (யோவான் 4:22)
3) சரி, வேதாகமத்தின்படி, யாரை நாம் வணங்கி வழிபட வேண்டும்?
- இயேசு தனக்கு தான் வழிபடுவது யார் எனத் தெரியும் என்றார்(யோவான் 4:22). அவர் தான் வழிபடுவது பிதாவை என்று தெளிவுபடுத்தினார் (யோவான் 4:23). எனவே நாம் பிதாவாகிய தேவனை வழிபட வேண்டும் என்று இயேசுவானவரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்.
- வேதம் மற்றொருவரையும் வழிபட சொல்கிறது - ஆம், இயேசு கிறிஸ்துவை.
"தேவன், தமது முதற்பேறானவரை [இயேசுவை] உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்." எபிரேயர் 1:6.
தேவன் அனைவரும் தன் குமாரன் இயேசு கிறிஸ்துவிற்கு அடிபணிந்து வணங்கிட வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
"குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்." (யோவான் 5:23)
"படவில் உள்ளவர்கள் வந்து, "மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன்," என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்." (மத்தேயு 14:33)
வேதாகம வசனங்கள் மனிதகுலம் யாரை வழிபடலாம் என்பதில் மிகுந்த கண்டிப்பு காண்பிக்கின்றன. தேவதூதர்கள், ஆவிகள், சக மனிதர்கள், விலங்குகள், சிலைகள் அல்லது படங்கள் - இவற்றை எல்லாம் வழிபட கூடாது என நம்மை தடுக்கின்றன.
வெளிப்படுத்தின விசேஷம் 4 & 5ஆம் அதிகாரங்கள் இதை உறுதி செய்கின்றன. தேவனையும், (தேவனின் ஆட்டுக்குட்டியான) இயேசுவையும் வணங்குவதற்கு தகுதியானவர்களாக சித்தரிக்கின்றன. சரி, தேவன் பற்றியும் இயேசு பற்றியும் மேலும் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். பரிசுத்த ஆவி குறித்தும் படிப்போம்.
மேலும் படிக்க: சர்வ வல்ல தேவன் - யார் அவர்?