நம் அனைவரின் கடவுள் யார்?
- விவரங்கள்
- பிரிவு: வேதம் ஏன்?
இன்றைய மனித மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு கிறிஸ்தவர். உலகத்திலேயே மிகவேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். ஆயிரக்கணக்கான தேவர்களை வழிபடும் பல கோடி இந்துக்களும் உண்டு. கடவுள் என்று யாருமே கிடையாது என நம்பும் நாத்திகர்களும் நம் மத்தியில் உண்டு. இப்படிப்பட்ட பல வகையான நம்பிக்கைகளில் எதுதான் சரி? மனிதர் வணங்கும் எல்லா தேவர்களும் தங்கள் சொந்த 'புனித நூல்கள்' மூலமே வரையறுக்கப்படுவதால், நாம் வேதாகமத்தையும், மத புத்தகங்களையும் சில சோதனைகளுக்கு உட்படுத்திப் பார்ப்போம். அறிவியலும், மனித வரலாறும் இரண்டு முக்கிய சோதனைகள்.