பரிசுத்த ஆவியின் அபிஷேகம்
- விவரங்கள்
- பிரிவு: திருச்சபை: பரம அழைப்பு
கருப்பொருள் வசனம்: "கர்த்தருடைய ஆவி என்மேலிருக்கிறது; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்." (லூக்கா 4:18)
1) 'நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.' 1 கொரிந்தியர் 12:13. இதன் அர்த்தம் என்ன?
இயேசுவிற்கும், ஆதித்திருச்சபை அங்கத்தினர்க்கும் நடந்ததைப் போல, கிறிஸ்துவின் ஞானஸ்நானம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் முடிகிறது. தேவனின் இராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்கிற வேலையை அச்சமின்றி செய்ய திருச்சபைக்கு பரிசுத்த ஆவி தெம்பு அளிக்கிறது.
பெந்தெகொஸ்தே நாளன்று திருச்சபையார் பரிசுத்த ஆவியின் வல்லமையைப் பெற்று, தேவனின் செய்தியை பரப்பத் தொடங்கினர் - "அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்." அப்போஸ்தலர் 4:31.
குறிப்பு: பரிசுத்த ஆவியின் மற்ற அதிசய வரங்களையும், அவை இன்று நடைமுறையில் உள்ளனவா, இல்லையா என்பதையும் தெரிந்துகொள்ள இந்த கட்டுரையை பார்க்கவும்.
2) 'அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.' மத்தேயு 3:11. அக்கினியினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானம் என்றால் என்ன?
பரிசுத்த ஆவியானாலான ஞானஸ்நானம் கட்டியெழுப்புகிறது, அக்கினியின் ஞானஸ்நானமோ அழிக்கிறது. துரதிருஷ்டவசமாக, அநேக கிறிஸ்தவர்கள், வேதாகமத்தில் அக்கினி அழிவுக்கான அடையாளமாக பயன்படுத்தப்படுவது தெரியாமல், அக்கினியின் ஞானஸ்நானத்திற்காக ஜெபிக்கிறார்கள்.
யூதரின் சகாப்தம் முடிவடைந்தபோது, கி.மு.70-இன் அழிவில், இஸ்ரவேலின் களைகள் அக்கினியின் ஞானஸ்நானம் பெற்றன. அதேபோல இராஜ்யம் நிறுவப்படுவதற்கு முன்பாக, புறஜாதியாரின் சகாப்த முடிவில், பெயரளவிலான கிறிஸ்தவமண்டலம் மற்றும் உலகத்தின் களைகளும் அக்கினியின் ஞானஸ்நானம் பெறுவர்.
குறிப்பு: அக்கினியின் ஞானஸ்நானத்தை பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய "அக்கினிமயமான" (fire-likeness) நாவுகளோடு குழப்பப்படக்கூடாது.
3) தேவனின் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் நோக்கம் குறித்து இயேசு என்ன குறிப்பிட்டார்?
"கர்த்தருடைய ஆவி என்மேலிருக்கிறது; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்."லூக்கா 4:18-19.
ஆம், மனிதகுலத்திற்கு நற்செய்தியை அறிவிக்கவே தேவன் தம்முடைய ஆவியால் தன்னை அபிஷேகம் செய்ததாக இயேசு கூறுகிறார். இயேசுவின் சீடர்களாக, அவருடைய பெயரிலே ஞானஸ்நானம் எடுத்தவர்களான நாமும், உலகத்திற்கு மெய் நற்செய்தியை அறிவிக்கும்பொருட்டு, அதே ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறோம்.
பவுல் கூறுவது போல: 'உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும் உண்டு." எபேசியர் 4:4-6.
ஞானஸ்நானத்தில், நாம் பரிசுத்த ஆவியைப் பெற்று, நமக்கென்று முன்குறிக்கப்பட்ட ஆன்மீக ஓட்டத்தை ஓடிட கிறிஸ்துவின் மெய் சுவிசேஷத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட நமது புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.
அப்போஸ்தலர் சொல்லுகிறபடியே, இந்த ஓட்டமானது ஒருவரோடொருவர் ஒன்றாக இணைந்து ஓடுகிறதான ஓட்டம் என்பதால், நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கமாகிறோம்.
மேலுமான ஆராய்ச்சிக்குரிய கேள்விகள்
- பாவத்தை எதிர்த்து போராடுவது நமக்கு விதிக்கப்பட்ட போராட்டம் அல்ல. அப்படியிருக்க, அப்போஸ்தலர்கள் ஏன் பாலியல் ஒழுக்கக்கேடு போன்ற சில காரியங்களை தவிர்க்கும்படி அறிவுறுத்துகிறார்கள்?
- நம்முடைய சக மனிதர்களிடம் கிறிஸ்தவ அன்பை காட்ட சிறந்த வழி எது?
- இராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவிக்கும் இந்த ஓட்டத்தை ஓடும்படி தேவன் ஏன் நம்மை அழைக்கிறார்?
- பெரும்பாலான மக்கள் நற்செய்தியை தற்போதைய காலங்களில் நிராகரிக்கப் போகிறார்கள் என்பது நமக்குத் தெரியும். அப்படியிருக்க, அதனை அறிவிப்பதன் நோக்கம்தான் என்ன?
- ஒருவர் கிறிஸ்துவின் சரீரத்தில் (திருச்சபையில்) அங்கமா, இல்லையா என்பதை நாம் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளலாம்?