சுவிசேஷ ஓட்டத்தின் நோக்கம்
- விவரங்கள்
- பிரிவு: சுவிசேஷ ஓட்டம்: என்ன சாதிக்கிறோம்?
வேதாகமப்படி, கிறிஸ்துவை பின்பற்றுகிறவருடைய பரம அழைப்பு என்பது, அனைத்து மனுக்குலத்திற்கும் அவரது இராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவிக்க நம் வாழ்க்கையை முழுமையாய் அர்ப்பணிப்பதே ஆகும். மேலோட்டமாக பார்த்தால், இது ஒரு அற்பமான விஷயம் போல தோன்றலாம். ஆனால் வேதவாக்கியங்களை நாம் வாசிக்கும்போது, நற்செய்தியை அறிவிக்கும் இந்த சுவிசேஷ ஓட்டத்தில் ஓட நம்மை நாமே ஜீவபலியாய் ஒப்புக்கொடுக்கும்படி தேவன் ஏன் கேட்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். அவரது நோக்கம் பல்வேறு சாராம்சங்களை கொண்டதாகும். அவற்றை ஒவ்வொன்றாக ஆழமாக படிப்போம்.