விசுவாசத்தை நிரூபிப்பது

 கருப்பொருள் வசனம்: நாம் இருதயத்திலே விசுவாசித்து நீதிமானாகிறோம், விசுவாசிப்பதை வாயினால் அறிக்கைபண்ணினால் இரட்சிக்கப்படுகிறோம். (ரோமர் 10:10)

விசுவாசத்தின் கிரியைகள்

1) திருச்சபையின் அழைப்பு பாவத்திற்கு எதிராக போராடுவது அல்ல என்றால், கிறிஸ்துவின்மீது வைக்கும் விசுவாசமே நமக்கு நீதியாக எண்ணப்படுகிறது என்றால், நம் விசுவாசத்தை நிரூபிக்க எதுவும் செய்யவேண்டியதில்லை என்று அர்த்தமா, என்ன?
யாக்கோபு பதிலளிக்கிறார்: "விசுவாசம் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?" (யாக்கோபு 2:17-20).
ஆக, நம்முடைய விசுவாசத்தை நிரூபிப்பதற்கு நாம் கிரியைகள் செய்ய வேண்டும் என்று யாக்கோபு கூறுகிறார். ஆனால்... கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லை என்று பவுல் கூறினாரே (கலாத்தியர் 2:16)? இருவரும் ஒரேவித கிரியைகளைப் பற்றி பேசுகிறார்கள் என்றால், வேதாகமம் அடிப்படையில் சுய-முரண்பாடு கொண்டதாக இருக்கும்! சொல்லப்போனால், பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ பண்டிதர்கள் இதனை விவாதித்திருக்கிறார்கள்.

2) யாக்கோபும் பவுலும் ஒருவருக்கொருவர் முரண்படவில்லை என்பதை நாம் எப்படி அறிகிறோம்?

  • நம்மை நீதிமானாக்கமுடியாத கிரியைகள் பற்றி பேசும்பொழுது எவ்விதமான கிரியைகளைக் குறித்து பவுல் பேசிக்கொண்டிருந்தார்? -- 'நியாயப்பிரமாணத்தின் கிரியைகள்', அதாவது பாவ-எதிர்ப்பு வேலைகள்.
  • யாக்கோபு 'நியாயப்பிரமாணம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறாரா? இல்லை, அவர் 'விசுவாசம்' என்ற சொல்லை பயன்படுத்துகிறார். ஆக, அவர் என்ன கிரியைகளைப் பற்றி பேசுகிறார்? - 'விசுவாசத்தின் கிரியைகள்'.

விசுவாசத்தால்தான் நாம் நீதிமான் என்று எண்ணப்படுகிறோம் என்று பவுலும் கூறினார். எனவே யாக்கோபு பவுலுக்கு முரணாகப் பேசவில்லை, மாறாக அவர் பவுலின் கூற்றை ஆதரித்து அதனை மேலும் விரிவுபடுத்துகிறார்.

3) ஆனால் அடிப்படையில் விசுவாசத்தின் கிரியைகள் என்றால் என்ன?

  • பவுல் பதில் கூறுகிறார் - "என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். அதாவது, நாம் இருதயத்திலே விசுவாசித்து நீதிமானாகிறோம், விசுவாசிப்பதை வாயினால் அறிக்கைபண்ணினால் இரட்சிக்கப்படுகிறோம்." ரோமர் 10:9-10.
  • பேதுரு உறுதிப்படுத்துகிறார் - "நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்". 1பேதுரு 4:13-16, 1:6-7.

ஆம், கடும் எதிர்ப்பு காண்பிக்கும் இந்த உலகிற்கு இயேசு கிறிஸ்துமீதும், வரவிருக்கும் அவருடைய இராஜ்யம் மீதும் நாம் கொண்ட விசுவாசத்தை பிரகடனம் செய்வது மூலமும், உண்மையான அந்த நற்செய்தியின் நிமித்தம் பாடு அனுபவிப்பது மூலமுமே, அடிப்படையில் நம் விசுவாசத்தை நாம் நிரூபிக்கிறோம்!

இயேசுவை பின்பற்ற: ஆன்மீக ஓட்டம் | விசுவாசத்தின் நல்ல போராட்டம்

4) நம் விசுவாசத்தை நிரூபிக்க நாம் இயேசு கிறிஸ்துவை பின்பற்ற வேண்டும் அல்லவா?
ஆம், நிச்சயமாக. ஆனால் உண்மையில் அவரை எப்படிப் பின்பற்றுவது? இயேசுவே பதிலளிக்கிறார்:

  • வேறொருவனை அவர் நோக்கி, "என்னைப் பின்பற்றிவா," என்றார். அதற்கு அவன், "ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும்," என்றான். அதற்கு இயேசு, "மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய இராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி," என்றார். லூக்கா 9:59-60.

ஆக, இயேசுவைப் பின்பற்றுவதற்கு எனில், நாம் இராஜ்யத்தைப் பிரசங்கிக்க வேண்டும் என்று நாம் புரிந்துகொள்கிறோம்.
வேறொரு இடத்தில பவுல் நம்மை ஒரு ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கும்படி கேட்கிறார் - "சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை." ரோமர் 12:1.
ஆனால் ... நாம் எப்படி அதை செய்ய முடியும்? இயேசு எப்படியென விளக்குகிறார் -

  • "ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்." மாற்கு 8:34-35.

இயேசுவை நாம் பின்பற்ற விரும்பினால் அவருடைய இராஜ்யத்தின் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் பொருட்டு நம் வாழ்வையே இழக்க வேண்டுமென, அதாவது அர்பணிக்கவேண்டுமென இயேசு நமக்குக் கட்டளையிடுகிறார்.
நித்திய ஜீவனுக்கான பரலோக வாக்குத்தத்தத்தில் விசுவாசம்கொண்டு, நம்முடைய நியாயப்பூர்வமான உலக ஆசைகள்/உறவுகளைக்கூட - அதாவது நமது பூமிக்குரிய வாழ்க்கையை - ஒதுக்கிவைத்து, சுவிசேஷ/திருச்சபைக்குரிய வேலைகளை செய்யும்படியாக நாம் வாழ்க்கையை கடவுளுக்கென ஜீவபலியாக அர்ப்பணம் செய்யவேண்டுமென என நாம் அழைக்கப்படுகிறோம்.
இதுவே திருச்சபையின் பரம அழைப்பு! இந்த செயல்களே நம்முடைய விசுவாசத்தை நிரூபிக்க தேவையான கிரியைகள், மாறாக பாவத்திற்கு எதிரான போராட்டம் அல்ல.
சுவிசேஷத்திற்காக நம் வாழ்க்கையை அர்ப்பணித்தல் என்பதில் கீழ்க்கண்ட இரண்டும் அடங்கும் –

  1. சுவிசேஷத்தை/நற்செய்தியை பரப்புவதற்கான வேலைகளை செய்தல்,
  2. கிறிஸ்துவின் சரீரத்தில் இருக்கும் சக கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைப் பலப்படுத்தவும், அவர்கள் நித்திய ஜீவனை அடைவதற்கு அவர்களுக்கு உதவி செய்யவும் சேவை புரிதல்.

5) எபிரெயர் 12:1-ல் பவுல் நம்மை நோக்கி, 'நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்,' என்கிறார். இந்த ஓட்டம் என்ன?

  • அந்த ஓட்டத்தை பவுல் வரையறுக்கிறார் - "ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்." அப்போஸ்தலர் 20:24.
  • வேறொரு இடத்தில் அவர் விளக்குகிறார் - 'நான் தேவ அறிவிப்பினாலே போய், புறஜாதிகளிடத்தில் நான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தேன்; ஆயினும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகாதபடிக்கு தலைவர்களிடம் தனிமையாய் விவரித்துக் காண்பித்தேன்.' கலாத்தியர் 2:2.
  • பேதுரு அதனை உறுதிப்படுத்துகிறார் - 'அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், இயேசு எங்களுக்குக் கட்டளையிட்டார்.' அப்போஸ்தலர் 10:42.

ஆம், 'தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும் ஊழியமே' நமக்கு நியமித்திருக்கிற ஓட்டமாகும். அதுதான் நாம் போராடவேண்டிய நல்ல போராட்டமாகும்!
பவுல் நமக்குச் சொல்கிறார், "நீயோ பாடனுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்." 2தீமோ 4:5-8.
ஆம், சுவிசேஷத்திற்காக வாழ்வதே நம் ஆன்மீக ஓட்டம்! அதற்கென பாடனுபவிப்பதே நாம் போராடவேண்டிய விசுவாசத்தின் நல்ல போராட்டம்!

The Race Marked Out For Us

6) விசுவாசத்தின் கிரியைகளை விளக்க யாக்கோபு உதாரணங்களைக் கொடுக்கிறார். அவை நம்மோடு   ஒப்பிடுகையில் எப்படி உகந்ததாக அமைகின்றன?

  • முதலாவது உதாரணம்: ஆபிரகாம் - 'நம் பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று.' யாக்கோபு 2:21-24. பவுல் போலவே யாக்கோபும், ஆபிரகாமின் விசுவாசம் அவர் கிரியையால் நிரூபிக்கப்பட்டபோது அது அவருக்கு நீதியாய் எண்ணப்பட்டது என்கிறார்.
  • அடுத்த உதாரணம்: இராகாப் எனும் ஒரு வேசி - 'அந்தப்படி இராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?' யாக்கோபு 2:25.
  ஆபிரகாம் இராகாப் எனும் வேசி நமக்கு எப்படி ஒப்பாகிறது?

விசுவாச கிரியை

தன் ஒரே வாரிசை பலியாக செலுத்த முன்வந்தான்.

தான் எரிகோவில் வாழ்ந்தாலும், இஸ்ரேல் ஒற்றர்களுக்கு உதவி, அடிப்படையில் தேசத்துரோகம் செய்தாள்.

வரவிருக்கும் கிறிஸ்துவின் இராஜ்யத்தின் நற்செய்தியை கடும் எதிர்ப்பு காண்பிக்கும் உலகத்திற்கு பிரசங்கிப்பதற்காக, நம் தற்போதைய வாழ்க்கையை ஜீவபலியாக அர்ப்பணிக்க வேண்டும்.s

அது ஒரு பாவ-எதிர்ப்பு செயலா?

இல்லை, சொல்லப்போனால் அது ஒரு கொலை முயற்சி!

ஒருவேளை இராகாப் வேசித்தன பாவத்தை விட்டுவிட்டாள் எனவும் அதனால் அவள் நீதி அடைந்தாள் எனவும் யாக்கோபு சொல்லியிருந்தால் கண்டிப்பாக அது பவுலின் கூற்றுகளுக்கு முரணாக இருந்திருக்கும்!

ஆனால் யாக்கோபு அப்படி சொல்லவில்லை.

விசுவாசத்தின் கிரியைகள் என்பவை நியாயப்பிரமாணத்தின் பாவப்போராட்ட செயல்கள் அல்ல என்று புதிய ஏற்பாடு நமக்கு தெளிவாக காட்டுகிறது.

விசுவாசம் என்ன?

ஆபிரகாம் ஒரே மெய்தேவனை அறிந்திருந்தார். தன்னை ஒரு பெரும் தேசமாக பெருகப்பண்ணுவார் என்று தேவனின் வாக்குறுதியை நம்பினார்.

இராகாப் இஸ்ரவேலின் தேவன்தான் கடவுள் எனவும், தன் தேசத்தை இஸ்ரேல் மக்களின் கையில் கொடுப்பதே அவரது திட்டம் எனவும் நம்பினாள்.

நாம் ஒரே மெய்தேவனையும் அவரது குமாரனையும் அறிந்திருக்கிறோம், மேலும் அவர் நமக்கு வரவிருக்கும் இராஜ்யத்தில் நித்திய ஜீவனும் அரசதிகாரமும் கொடுத்து ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறோம்.

அது எப்படி நிரூபிக்கப்பட்டது?

தேவன் ஆபிரகாமின் கைவசம் இருந்த ஒரே வாரிசை பலியாக கோரினார். அடிப்படையில் கண்ணுக்குத்தெரியாத ஒரு வாரிசின்மீது அவன் நம்பிக்கை வைக்கவேண்டும் என எதிர்பார்த்தார்.

எதிரியின் ஊருக்குள் வாழ்ந்த இராகாப், தன் உயிரை பணயம் வைத்து தேசத்துரோகம் செய்து, இஸ்ரவேலருக்கு உதவிபுரிந்து கடவுளுக்கு வேலை செய்யவேண்டியிருந்தது.

கண்ணுக்குத்தெரியாத ஓர் எதிர்கால நித்திய வாழ்வின்மீது நம்பிக்கை வைத்து, நம் கைவசம் இருக்கும் ஒரே வாழ்வான நம் தற்போதைய வாழ்க்கையை ஜீவபலியாக கொடுக்கவேண்டும் என்று நம்மை தேவன் எதிர்பார்க்கிறார்.

நம் எதிரி சாத்தானால் ஆளப்படும் உலகத்தில் வாழும் நாம், இந்த யுகத்தின் கடவுளான சாத்தானிற்கு எதிராக, கண்ணுக்குத்தெரியாத மெய்தேவன்மீது விசுவாசம் வைத்து, வரவிருக்கும் அவரது இராஜ்யத்தை பிரசங்கிக்கும் நற்செய்திப்பணியை நாம் செய்யவேண்டும்.

7) யாக்கோபின் கூற்றுப்படி, நம் விசுவாசத்தை கிரியைகள் மூலம் நாம் உறுதிப்படுத்தாவிட்டால் அவ்விசுவாசம் என்னவாகும்?Deeds of Faith
விசுவாசம் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். யாக்கோபு 2:17. விசுவாசம் செத்தது என்றால், நாம் நீதிநிலை இழந்து, வீழ்ந்த நிலைக்கு, அதாவது மரணத்திற்கு வீழ்கிறோம். யாக்கோபு உரக்க கேட்கிறார், "ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; ஆனால் பிசாசுகளும்கூடத்தான் விசுவாசித்து, நடுங்குகின்றன." யாக்கோபு 2:14,19. ஆமாம், பிசாசுகளுக்கும்கூட தேவன் யாரென தெரியும். ஆனால் அந்த அறிவைப் பயன்படுத்தி பிசாசுகள் என்ன கிரியைகள் செய்கின்றன? நாம் என்ன கிரியைகள் செய்திட வேண்டும்?

  • பிசாசுகள் தேவனின் திட்டத்திற்கு எதிராக வேலை செய்கின்றன, சுவிசேஷத்தை தடுக்கின்றன. நாம் அவருடைய திட்டத்தை செயல்படுத்த சுவிசேஷ வேலை செய்ய வேண்டும்.
  • பிசாசுகள் திருச்சபையாரை சோர்வுறச் செய்யும்படி திருச்சபைகளை பிரிக்கவும், சபையார்களை தவறான பாதையில் இட்டுச்செல்லவும் முயல்கின்றன. நாம் திருச்சபைகளை ஐக்கியப்படுத்தவும், உறுப்பினர்களை ஊக்குவிக்கவும், அவர்கள் சத்தியத்தில் வளர உதவுவதற்காகவுமான வேலைகள் செய்திட வேண்டும்.

ஆம், நமக்கும் இந்த பொல்லாத உலகத்தின் சக்திகளுக்கும் இடையில் நம் வாழ்நாள் முழுதும் நடக்கும் போராட்டமானது நம் விசுவாச கிரியைகளில் அடங்கும்.

8) நம் ஆன்மீக ஓட்டம் என்பது சுவிசேஷத்தை பரப்புவதற்கு நம் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாகும். இந்த தியாக வாழ்க்கை எப்போது ஆரம்பிக்கிறது?
அது நம் ஞானஸ்நானத்தில் நம் வாழ்வை அர்ப்பணிக்கும்பொழுது தொடங்குகிறது - இதுவே கிறிஸ்துவின் மெய்திருச்சபையில் ஒருவர் சேருவதற்கான மூன்றாவதும் இறுதியான படிக்கட்டாகும்.

  1. மனந்திரும்பு! - நம் பாவ இயல்பையும் நம்மை நாமே நியாயப்படுத்த முடியாத தன்மையையும் உணர்ந்து, நம் சொந்த நியாயப்படுத்தும் முயற்சிகளில் இருந்து நம் மனதை திருப்பி ஒரு இரட்சகரை வேண்டி தேவனிடம் திரும்புகிறோம்.
  2. விசுவாசி! - கிறிஸ்துவின் பலியால் நாம் இலவசமாக நியாயப்படுத்தப்பட்டு நீதிமானாக எண்ணப்படுவதற்காக இரட்சகராக அவர்மேல் விசுவாசம் வைக்கிறோம். அந்த விசுவாசத்தை கிரியைகளால் நிரூபிக்க ஜீவபலியாக நம் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டிய அவசியத்தை உணர்கிறோம்.
  3. ஞானஸ்நானம் எடு! - ஞானஸ்நானம் அதாவது அர்ப்பணிப்பு/பிரதிஷ்டை என்பதுதான் கடைசி படிக்கட்டு.

மேலும் படிக்க: ஞானஸ்நானம் எடு!

 

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.