எரிநரக கோட்பாடு

 

கருப்பொருள் வசனம்: “அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது." ஏசாயா 29:13

1) பெரும்பாலான தற்கால திருச்சபைகள் பாவத்திற்கான தண்டனை எதுவென போதிக்கின்றன?
பிரசங்க பீடத்திலிருந்து போதகர்கள், "கிறிஸ்துவை உங்கள் மீட்பராய் ஏற்றுக்கொள்ளுங்கள்! இல்லையெனில், உங்கள் பாவங்களுக்காக கண்டனம் செய்யப்படுவீர்கள். இறந்ததும் பற்றியெரிகிற அக்கினியில் நித்தியத்திற்கும் சித்திரவதை செய்யப்பட உயிருடன் நரகத்திற்கு கொண்டு செல்லப்படுவீர்கள்," என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
நித்திய ஆக்கினையே அவர்கள் விடுக்கும் பயங்கரமான எச்சரிப்பாகும். இந்த பாதாள உலகினை, நெருப்பு தீண்ட இயலாத சாத்தான் ஆட்சி செய்வதாக பலர் கூறுகிறார்கள். அங்கே தள்ளப்பட்ட மக்களை அவனது பிசாசுகள் சித்திரவதை செய்வதாகவும் சொல்கிறார்கள்.

2) எதன் அடிப்படையில் இவ்வாறு போதிக்கப்படுகிறது?
ஆத்துமா அழிவற்றது (மரணத்திற்கு பின்னும் நித்தியமாய் வாழ்கிறது) என கருதுவதே இந்த ஆக்கினைக் கோட்பாட்டிற்கான அடிப்படை. ஆயினும் இந்த கோட்பாட்டிற்கு வேதாகம ஆதாரம் ஏதும் உண்டா?
ஆதாரம் ஏதும் புலப்படவில்லை. இறந்தவர்கள் உண்மையில் இறந்தே போனார்கள் - உயிருடன் இல்லை - என்றுதான் வேதாகமம் சொல்வதாக தெரிகிறது.
வாக்களிக்கப்பட்ட உயிர்தெழுதலுக்காக அவர்கள் நித்திரையில் காத்திருக்கிறார்கள் (1இராஜாக்கள் 2:10, அப்போஸ்தலர் 7:60, 1தெசலோனிக்கேயர் 4:4, 1கொரிந்தியர் 15:6). கல்லறையிலே விழிப்புணர்வோ, வேதனையோ, வேறு எந்தவிதமான உணர்வோ இருப்பதாக திருமறை கூறவில்லை (சங்கீதம் 146:4, பிரசங்கி 9:5,10).

3) பாவத்திற்கென ஆத்துமாவிற்குரிய தண்டனையாக பைபிள் கூறுவது யாது?
பாவத்திற்கான தண்டனை என்னவென்று தேவன் கூறுகிறார் - "பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்" (எசேக்கியேல் 18:20). ஆம், "பாவத்தின் சம்பளம் மரணம்." ரோமர் 6:23. கீழ்ப்படியாமைக்காக அவர் ஆதாமிற்கு மரண தண்டனை விதித்தார். ஆதாம் அழியாத ஆத்துமா கொண்டவர் எனவும் சொல்லப்படவில்லை. அந்த ஆத்துமா நித்தியத்திற்கும் எரிய நேரிடும் என்ற மிரட்டலும் இல்லை. ஆதாம் ஒரு ஜீவாத்துமா (ஆதி 2:7). அவன் மரித்துப்போனான்.
"இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று." ரோமர் 5:12.
ஆம், மரணமே நமக்குரிய தண்டனை.

4) எனினும் திருமறையில் நரக அக்கினி பற்றி பல இடங்களில் சொல்லப்படுகிறதே?
நான்கு வார்த்தைகள் வேதாகமத்தில் "நரகம்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளன – “ஷியோல்”, “ஹேடீஸ்”, “கெஹன்னா” மற்றும் “டார்டரூ”.
அவை என்னவென்று புரிய நாம் அவற்றைப்பற்றி படிப்போம். அக்கினிக்கடல் குறித்தும் படிப்போம். மேலும் படிக்க.

மேலும் படிக்க: ஷியோல் / ஹேடீஸ்