- விவரங்கள்
-
பிரிவு: எவரை வணங்குகிறோம்?
கத்தோலிக்க தலைமை வாடிகன் (Vatican) அமைப்பும், பரவலாக ப்ராட்டஸ்டண்ட் (Protestant) திருச்சபைகளும் ஏற்றுக்கொள்ளும் அதநாசியின் பிரமாணம் (Athanasian Creed) திரித்துவத்தை வணங்க வேண்டும் என்கிறது. பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி - என மூன்று நபர்களை வணங்க வேண்டும் எனச் சொல்லி, ஆனால் அந்த மூன்று பேரும் ஒரே தேவன் எனவும் கூறுகிறது. இயேசு நாம் வணங்குவது என்னவென்று புரிதல் அவசியம் என்கிறார் (யோவான் 4:22). சரி, நாம் வேதாகமம் படித்து புரிந்து கொள்ளலாமா?
மேலும் படிக்க: எவரை வணங்குவது?
- விவரங்கள்
-
பிரிவு: எவரை வணங்குகிறோம்?
திரித்துவம், திரித்துவ தெய்வம் என்ற வார்த்தைகள் வேதாகமத்தில் காணப்படவில்லை. திரித்துவக் கோட்பாடில் பயன்படுத்தப்படுகிற தலைப்புகள் - 'பிதாவாகிய தேவன்', 'குமாரனாகிய தேவன்', 'பரிசுத்த ஆவியானவராகிய தேவன்' - நாம் பைபிளில் தேடும்போது, இவற்றில் ஒன்றை மட்டுமே காணலாம் - 'பிதாவாகிய தேவன்'. வேதாகமத்தில் 'தேவன்' என்ற வார்த்தை 3500+ தரம் நிகழ்கிறது. கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் சர்வ வல்ல தேவனை (கடவுளை) குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் சில இடங்களில் 'தேவன்' என்ற வார்த்தை வேறுவிதமாக பயன்படுத்தப்படுவதையும் காண்கிறோம். அதனால்தான் பவுல் கூறுகிறார் - 'வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டு.' (1 கொரிந்தியர் 8:5). வேதாகமத்தில் வேறே தேவர்களை எங்கு காண்கிறோம்?
மேலும் படிக்க: சர்வ வல்ல தேவன் யார்?
- விவரங்கள்
-
பிரிவு: எவரை வணங்குகிறோம்?
'அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் (ஆண்டவரும்) நமக்குண்டு' (1 கொரி 8:5-6). பிதாவை நம் தேவனாக (கடவுளாக) உறுதிப்படுத்திய அப்போஸ்தலன், நமக்கு இயேசு கிறிஸ்து என்ற ஒரு கர்த்தரும் (ஆண்டவரும்) உண்டு என்கிறார். நாம் முன்னர் பார்த்தபடி, இந்த கர்த்தர் (Lord) வார்த்தையானது யாவே தேவனைக் குறிக்கும் தடித்த எழுத்து கர்த்தர் (LORD) இல்லை. இந்த வார்த்தை (கிரேக்கம்: Kurios) எஜமான்/ஆண்டவன் என்ற பொருள்படும். ஆக, பவுல் நமக்கு பிதாவாகிய ஒரே கடவுளும், இயேசு கிறிஸ்துவாகிய ஒரே எஜமானும் உண்டு என்கிறார். இயேசு ஏன் நம்முடைய எஜமானராக (ஆண்டவராக) இருக்கிறார்?
மேலும் படிக்க: இயேசு கிறிஸ்து யார்?
- விவரங்கள்
-
பிரிவு: எவரை வணங்குகிறோம்?
இயேசு அவர்களை நோக்கி, "என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்துவருகிறேன்," என்றார். அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள் (யோவான் 5:17-18). இந்த வசனத்தில் பரிசுத்த ஆவி பற்றி எந்தவிதமான குறிப்பும் இல்லை. எனினும் சிலர் அந்த ஓட்டையை மறந்து, “சரிசமானத்துவ” திரித்துவத்தை ஆதரிக்க இந்த வசனத்தை மேற்கோள் காட்டுவது உண்டு. இந்த வசனத்தின் சூழலையும், மேலும் இயேசு பிதாவுடன் தனக்குள்ள உறவின் தன்மை பற்றி நேரடியாகவே குறிப்பிடும் மற்ற வசனங்களையும் படிப்போம்.
மேலும் படிக்க: சரிசமானத்துவ கேள்வி
- விவரங்கள்
-
பிரிவு: எவரை வணங்குகிறோம்?
திரித்துவக் குழுக்கள் கடவுளும், இயேசுவும் ஆதி (தொடக்கம்) இல்லா ஒரு நித்திய தன்மை (அநாதித்தன்மை) கொண்டவர்கள் என்ற ஒரு கோட்பாட்டை ஊக்குவிக்க முயல்கின்றன. இயேசுவும், சர்வ வல்ல தேவனும் (கடவுளும்) இனி நித்தியத்திற்கும் நிலைத்திருப்பார்களா என்பதுதான் கேள்வி என்றால், வேதாகமத்தின்படி அதன் பதில் ஆம், நிச்சயமாக! ஆனால் கடவுள், இயேசு இருவரும் ஆதியில்லாதவர்களா (அநாதியானவர்களா) என்பது பற்றி கேள்வி எழுந்தால், அதற்குரிய பதில் வேதாகமத்திலிருந்து ஒழுங்காக ஆராயப்பட வேண்டும். இந்த தலைப்பில் சில வசனங்களை பார்க்கலாம். மேலும், 'பிதா', 'குமாரன்' என்ற சொற்பதங்களே இந்த விசயத்தை எளிதாக புரிந்து கொள்ள உதவுகின்றன.
மேலும் படிக்க: ஆதியில்லா கேள்வி
- விவரங்கள்
-
பிரிவு: எவரை வணங்குகிறோம்?
திரித்துவத்தின் மூன்றாம் பங்கு - பரிசுத்த ஆவி - வேதாகமத்தில் எங்குமே தேவன் என சொல்லப்படவில்லை. 5-ஆம் நூற்றாண்டில்தான் அது தேவன் என்று ஒரு கோட்பாடு (Creed) மூலம் அறிவிக்கப்பட்டது (அதன் முழு வரலாறு பின்னர் படிப்போம்) . பரிசுத்த ஆவி பற்றி வேத வசனங்கள் மூலம் நாம் என்ன அறிகிறோம்? முதலில் ஆவி என்றால் என்ன? அது ஏன் பரிசுத்தமாக அழைக்கப்படுகிறது? பரிசுத்த ஆவியின் தாக்கம் என்ன? ஆவி பற்றி இயேசு என்ன சொன்னார்? இந்த கேள்விகளுக்கான பதில்களுடன் சேர்த்து, சிறிது கிரேக்க இலக்கணமும் கற்போம்!
மேலும் படிக்க: பரிசுத்த ஆவி