அசல் "நரகங்கள்"
- விவரங்கள்
- பிரிவு: நரக புராணம்
"நரக" வார்த்தைகள் - ஒரு கண்ணோட்டம்
"ஷியோல்", "ஹேடீஸ்", "கெஹன்னா", "டார்டரூ" என்ற நான்கு மூல வார்த்தைகளும் தமிழ் பைபிளில் "நரகம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "ஷியோல்" என்ற சொல் பழைய ஏற்பாட்டு எபிரேய பதமாகும். மற்ற மூன்றும் புதிய ஏற்பாட்டு கிரேக்க பதங்களாகும். தமிழ் பைபிள் மொழிபெயர்ப்புகள் கூறுவது போல் இந்த மூல வார்த்தைகள் அனைத்திற்கும் ஒரே அர்த்தம்தானா? அல்லது அச்சொற்கள் ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உண்டா?
எபிரேய, கிரேக்க அகராதிகளை எடுத்துப்பார்க்கும்போதும், இந்த வார்த்தைகளைக் குறித்த திருமறையின் சுய விவரிப்புகளையும் கவனித்துப்பார்க்கும்போதும், அச்சொற்களின் அர்த்தங்களைக் குறித்த ஆழமான நுண்ணறிவை நாம் கண்டறிகிறோம். தமிழ் வேதாகமங்களில் மேலோட்டமாக படிக்கும்போது ஒன்றுக்கொன்று முரணாக தோன்றுகிற வசனங்களை பற்றிய தெளிவையும் கண்டடைகிறோம்.
"நரகம்" என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நான்கு மூல வார்த்தைகளை குறித்த ஆழ்ந்த கண்ணோட்டம் கீழ்க்கண்டவாறு:
- இந்த மூல வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மையில் சுட்டிக்காட்டுகிற இடங்கள் யாவை?
- அந்த இடங்கள் ஒவ்வொன்றிற்கும் யார் யார் செல்லவிருக்கிறார்கள்?
- இவ்விடங்களுக்கு செல்வோரின் நிலவரம் யாது?
- இவ்விடங்களுக்கு சென்றபின் அவர்களுக்கு ஏதேனும் எதிர்காலம்தான் உண்டா?
கீழ்க்கண்ட குறிப்பு அட்டவணை எபிரேய, கிரேக்க அகராதிகளையும், பரிசுத்த வேதாகமத்தையும் ஆதாரமாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.
நரகங்கள் | ஷியோல்/ஹேடீஸ் | கெஹன்னா | டார்டரூ |
---|---|---|---|
என்ன? | கல்லறை | எருசலேமின் குப்பை எரிக்கும் பேட்டை; அடையாள அக்கினிக்கடல்; நிர்மூலமாகுதல்/இரண்டாம் மரணம் |
அடையாளப்பூர்வ இருட்டின் சங்கிலிகள் |
யார்? | மரித்துப் போன மனிதர் | இயேசுவின் இராஜ்யத்தின் இறுதிச்சோதனையில் அவருக்கு கீழ்ப்படியாது, சாத்தான் பக்கம் திரும்புகிறவர்கள்; இன்றைய அரசியல், சமய அமைப்பு முறைகள்; சாத்தான்; (இறுதியில்) மரணமும், ஹேடீஸும் (கல்லறையும்) |
வீழ்ந்து போன தேவ தூதர்கள் |
நிலை | உணர்விலா நித்திரை | நிர்மூலமாகுதல் / முற்றிலும் அழிக்கப்படுதல் | கண்ணுக்கு புலப்படாதவாறு தடுக்கப்பட்டு கட்டப்படுதல் |
எதிர்காலம் | உயிர்த்தெழுதல் | திரும்ப வர முடியாது! அழிவு நிரந்தரமானது / நித்தியமானது. |
திருச்சபையினால் நியாயந்தீர்க்கப்படுதல் |
மேலுமான ஆராய்ச்சிக்குரிய கேள்வி
நரக வேதனையைப் போல, வேதாகமத்தில் இல்லாத "இருண்ட கால" (Dark Age) கோட்பாடுகள் வேறேதும் கிறிஸ்தவத்திற்குள் புகுந்துள்ளனவா? - மேலும் படிக்க.