அழுகையும் பற்கடிப்பும்
- விவரங்கள்
- பிரிவு: நரக புராணம்
கருப்பொருள் வசனம்: "இதோ, உன்னைப் புடமிட்டேன், ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் சூளையிலே உன்னை சோதித்தேன்" (ஏசாயா48:10).
"நரகம்" என தமிழ் வேதாகமங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள - "ஷியோல்"/”ஹேடீஸ்", "கெஹன்னா" மற்றும் "டார்டரூ" - என்ற மூல வார்த்தைகளின் மெய்யான அர்த்தத்தை ஆராய்ந்தோம். ஆனால், அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் இடம் பற்றி இயேசு பேசினாரே, அது என்ன?
மொத்தம் ஏழு வசனங்களிலே இந்த "அழுகையும், பற்கடிப்பும்" வாசகத்தை காண்கிறோம் - மத்தேயு 8:12; 13:42,50; 22:13; 24:51; 25:30; லூக்கா 13:28.
- இந்த ஏழு வசனங்களிலுமே இயேசு இந்த சொற்றொடரை உவமைகளிலும், அடையாள கூற்றுகளிலும் மட்டுமே பயன்படுத்துகிறார்; எனவே இது ஒரு அடையாளமே என்பது தெளிவாகிறது.
- சந்தர்ப்ப சூழலை பொறுத்து அதன் அர்த்தம் மாறுபடுகிறது. எனினும் எல்லா இடங்களிலும் அதன் பொதுவான அர்த்தமானது என்னவெனில் தேவனின் பார்வையில் தவறு செய்த ஒரு மக்கள் கூட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட காலம்வரை நீடிக்கும் ஒரு குறிப்பிட்ட தண்டனை/சோதனைக்காலம் என்பதே ஆகும்.
- மத்தேயு 13:42, 50 வசனங்களில் அழுகையும், பற்கடிப்பும் அக்கினிச்சூளைக்கு ஒப்பிடப்படுகிறது. சூளைக்குகையானது திருமறையின் பல்வேறு பகுதிகளில் சோதிக்கப்படுவதற்கும், புடமிடப்படுவதற்குமான ஒரு இடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது (ஏசாயா 48:10, நீதிமொழிகள் 17:3).
- மற்ற வசனங்களில் அழுகையும், பற்கடிப்பும் என்பது புறம்பான இருளாக (தேவனின் தயவற்ற நிலையாக) வர்ணிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மத்தேயு 8:12-இல் புறஜாதியினர் பலர் தேவனின் இராஜ்யத்தில் உயர்பதவிகளுக்கு வருவார்கள் என்பதையும், அது எங்ஙனம் கிறிஸ்துவை நிராகரித்த இஸ்ரவேலருக்கு மன வேதனையை உண்டாக்கும் என்பதையும் விளக்குவதற்கு, அடிப்படையில் ஒரு தண்டனை என்ற அர்த்தத்தில் இயேசு "அழுகையும், பற்கடிப்பும்" என்ற பதங்களை பயன்படுத்துகிறார்.