பயனற்ற விசயங்கள்
- விவரங்கள்
- பிரிவு: திருச்சபை: பரம அழைப்பு
திருச்சபை பாவத்தை எதிர்த்து போராட அழைக்கப்படவில்லை என்றால், அப்போஸ்தலர்கள் ஏன் சில காரியங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்கள்? கொரிந்தியர்களுக்கு பவுல் எழுதுகிறார் - 'எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பயனாயிராது.' 1கொரிந்தியர் 6:12 . முதலாவதாக, கடுகளவும் குழப்பமில்லாத என்ன ஒரு துணிகர அறிவிப்பு இது! -- எல்லாவற்றையும் அநுபவிக்க திருச்சபைக்கு அதிகாரமுண்டு! ஆம், நாம் கிறிஸ்துவினால் நியாயபடுத்தப்பட்டு நீதிமான் என்று "கருதப்படுகிறோம்", அதனால் நாம் மாம்சத்தில் செய்யும் பாவத்தை தேவன் கணக்கில் கொள்வதில்லை. அதனால் எல்லாவற்றையும், எதை வேண்டுமானாலும் செய்ய நமக்கு நிச்சயம் அதிகாரம் உண்டு. ஆனால் எல்லாமும் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் நாம் ஓடுவதற்கு பயனாயிருமா?