தேர்ந்தெடுக்கப்பட்டோரின் அழைப்பு
- விவரங்கள்
- பிரிவு: பரவலான வஞ்சனை
அப்போஸ்தலனாகிய பவுல் முன்னறிவித்ததைப் போல, கிறிஸ்தவர்களுக்குள்ளிருந்தே கொடிதான ஓநாய்கள் எழும்பி, வேதாகம சத்தியங்களை திரித்து, பெரும்பாலான விசுவாசிகளை ஏமாற்றினர். இந்த பரவலான வஞ்சனையானது அந்திக்கிறிஸ்துவின் 1260 வருட போப்பாண்டத்துவ ஆட்சிக்காலம் முழுவதும் நீடித்து, புராட்டஸ்டன்ட் சீர்திருத்த திருச்சபைகளிலும்கூட பல வடிவங்களில் தொடர்ந்து, பல நூற்றாண்டுகளாக நிலைத்து, இன்றும்கூட பரவலாக உள்ளது. அதனால்தான் இன்று காணப்படும் அனைத்து ஜனரஞ்சகமான கிறிஸ்தவ பிரிவுகளும் ஆதியிலிருந்த மெய் கிறிஸ்தவத்தின் அஸ்திபார நம்பிக்கைகளுக்கு எதிராகச் செல்லும் பல்வேறு கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. அப்படியானால், ஒரு மெய்யான வேதாகாமப்பூர்வமான விசுவாசி இந்த காலத்தில் என்னதான் செய்ய வேண்டும்?