வேத ஆய்வு - சிறந்த நடைமுறைகள்
- விவரங்கள்
- பிரிவு: எங்களை பற்றி
அடிப்படை விதிகள்
- சூழல் (context) முக்கியம்.
- வசனம் வசனத்தை விளக்கும்.
- அப்போஸ்தலர் 17:11, ஏசாயா 28:9-10, 2பேதுரு 1:20
- ஒரு கோட்பாட்டை நிறுவிட குறைந்தது இரு சாட்சிகள் தேவை.
- 2கொரிந்தியர் 13:1, வெளி 11:3
- பூரண வேத ஒத்திசைவு தேடு.
- மத்தேயு 4:4, 2தீமோத்தேயு 3:16-17
- எழுதப்பட்டதைத் தாண்டி செல்லாதே.
- 1கொரிந்தியர் 4:6, வெளி 22:18
விரிவான விதிகள்
- மூல வேதம் எபிரேயு (பழைய ஏற்பாடு) / கிரேக்க (புதிய ஏற்பாடு) மொழிகளில் உள்ளது. தமிழில் படிக்கும்பொழுது பல்வேறு வேதாகம மொழிபெயர்ப்புப்பதிப்புகளை படித்துப் பார்க்கவும்:
எந்த ஒரு குறிப்பிட்ட மொழிபெயர்ப்புப்பதிப்பும் முற்றிலும் சரியானது என சொல்ல முடியாது. அதனால் எந்தவொரு வசனத்தையும் பலவகைப்பட்ட மொழிபெயர்ப்புப் பதிப்புகளில் படித்து ஒப்பிட்டுப் பார்த்து, எந்த மொழிபெயர்ப்பில் அவ்வசனம் வேதாகமத்தின் பிற வசனங்களுடன் ஒத்திசைவாக உள்ளதோ, அதன் மூலம் சரியான அர்த்தம் புரிந்து கொள்ளவும். (அடிப்படை விதி #4 பார்க்கவும்).
குறிப்பு: தமிழில் பல பொழிபெயர்ப்புப் பதிப்புகள் இருந்தாலும், ஆங்கிலம் அளவு நிறைய வகைகள் இல்லை. அதனால் ஆங்கிலம் தெரியுமெனில், இந்த மூன்று வகையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு வகைகளை கலந்து பார்ப்பது நல்லது:- செயல்பாட்டு சமன்பாடு மொழிபெயர்ப்பு - உதாரணம்: NIV New International Version.
- முறை சமன்பாடு மொழிபெயர்ப்பு - உதாரணம்: NASB New American Standard Bible.
- கட்டற்ற மொழிபெயர்ப்பு - உதாரணம்: The Message Bible.
- முக்கியமான எபிரேய/கிரேக்க வேதாகம வார்த்தைகளை புரிந்து கொள்ளவும்: இடைவரி மொழிபெயர்ப்பு (interlinear) மற்றும் சொற்பிறப்பியல் (etymology) தெரிந்துகொள்ள வைன்'ஸ் (Vine's) மற்றும் ஸ்டராங்'ஸ் (Strong's) குறிப்புகள் பார்த்து, விளக்கவுரை செய்யவும்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஓர் வார்த்தையின் சரியான விளக்கத்தை வசனங்களே அருளும். (அடிப்படை விதி #2 பார்க்கவும்). - முரண்பாடாகத் தென்படும் வசனங்களை சரிதீர்க்க வேதாகமத்தின் ஆரம்பகால ஆதி மூலப்பிரதிகளில் (earliest manuscripts) சரிபார்க்கவும். (அடிப்படை விதி #4 பார்க்கவும்).
- எந்த ஒரு கோட்பாட்டையும் ஒன்றிற்கு மேலான வசனங்களின் ஆதரவுடன் நிறுவவும். (அடிப்படை விதி #3 பார்க்கவும்).
- வசனங்களை சூழல் பொருத்தம் (context) பார்த்து படிக்கவும். வசனத்தின் நுண்சூழலும் (micro context), பெருஞ்சூழலும் (macro context) கருத்தில் கொள்ளவும். ஓர் மூல வாக்கியத்தை முறையாக விளக்கவுரை (exegesis) செய்ய, அந்த வாக்கியம், அதன் ஆசிரியர் மற்றும் அவரின் வாசகர்கள் ஆகிய அம்மூன்றின் இலக்கியச் சூழலை மட்டுமல்லாது அவற்றின் சமூக, பொருளாதார, வரலாற்று, அரசியல் மற்றும் கலாச்சார சூழல்களை (context) பற்றி புரிதல் மிக்க அவசியம். (அடிப்படை விதி #1 பார்க்கவும்).
- எந்தவொரு விசயத்திலும், நேரடியாக விசயத்தை சொல்லும் (direct statements) வசனங்கள் பொருள் விளக்கவேண்டிய (interpretative) வசனங்களை விட முன்னுரிமை பெறும். (அடிப்படை விதி #5 பார்க்கவும்).
- வசனங்களில் உள்ள அடையாளங்களையோ, உவமைகளையோ, உருவகங்களையோ நிஜம் எனத் தப்பாக புரிந்து கொள்ளக்கூடாது. மேலும், வேதத்தில் ஒரு பகுதியினை அடையாள பொருள் எனக் கருதினால், சீராக அப்பகுதியில் உள்ள அனைத்தையும் அடையாளமாக கருத வேண்டும். மாறாக, அப்பகுதியில் பாதி விசயங்களை அடையாளங்களாகவும், பாதி விசயங்களை நிஜங்களாகவும் கருதக்கூடாது. (அடிப்படை விதி #1 பார்க்கவும்).
- வேத அடையாளங்கள், உவமைகள், மற்றும் உருவகங்களுக்கு சொந்தமாய் யோசித்து விளக்கம் சொல்லாமல், மற்ற வசனங்களைப் பயன்படுத்தி விளக்கவும். (அடிப்படை விதி #2 பார்க்கவும்).
- புதிய ஏற்பாட்டில் உள்ள நிருபங்களை வழக்கமாக கடிதம் (letter) அல்லது மின்னஞ்சல் (e-mail) படிப்பது போல் ஒரே மூச்சில் படிக்க வேண்டும். (அடிப்படை விதி #1 பார்க்கவும்).
- எபிரேயர் 6:1-2 வசனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மனதில் கொள்ளவும்: "கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேசங்கள்... செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரம்." (அடிப்படை விதி #1 பார்க்கவும்).