பரலோகத்தின் இராஜ்யம்

கருப்பொருள் வசனம்"உம்முடைய இராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யபடுவதாக." (மத்தேயு 6:10)

1) பரலோகத்தின் இராஜ்யத்தை பற்றி எந்தவொரு கிறிஸ்தவரும் ஏன் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும்?
ஏனென்றால் இயேசு கிறிஸ்து பரலோக இராஜ்யத்தை பற்றின விசயங்களில் மிகத்தீவிரமாய் இருந்தார். மதத்தலைவர்கள் பொதுவாக புதுப்புது தத்துவங்களையோ அல்லது சடங்குகளையோ கற்றுக்கொடுப்பார்கள். ஆனால் இயேசு சாதாரண மதத்தலைவர் அல்ல, அவருடைய போதனைகள் பெரும்பாலும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களிலிருந்து ஒரு விசயத்தைப்பற்றியே அதிகம் இருந்தன: அதுதான் தேவனின் இராஜ்யம் அதாவது பரலோகத்தின் இராஜ்யம்.

  • அவர் சொன்ன உவமைகளில் பெரும்பாலானவை (சுமார் 30 உவமைகள்) இராஜ்யத்தை பற்றியே அதிகம் இருந்தன.
  • அவருடைய ஊழியத்தின் முக்கிய செய்தி: பூமியில் வரவிருக்கும் தேவனின் இராஜ்யமே மனுக்குலத்தின் விடிவுகாலம்.
  • தன் சீடர்கள் ஜெபம் செய்ய கற்றுக்கொடுக்கும்படி தன்னிடம் கேட்டபோது, இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தில் தேவனை துதித்தவுடன் அவர் சொல்லச்சொன்ன வரிகளாவன: "உம்முடைய இராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யபடுவதாக." (மத்தேயு 6:10). ஆம், தேவனின் இராஜ்யம் பூமியில் வரவிருக்கிறது! அப்பொழுது அவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யபடுவதை போல பூமிலேயும் செய்யப்படும்!

2) ஆனால் பரலோகத்தின் இராஜ்யம் பரலோகத்தில் அல்லவா இருக்கும்?
வேதாகமத்தின் புதிய ஏற்பாடு புத்தகங்களில் மத்தேயு மட்டும் தான் ‘பரலோக இராஜ்யம்’ என்ற சொற்றொடரை பயன்படுத்துகிறார். மற்ற புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அதனை ‘தேவனின் இராஜ்யம்’ என்று கூறுகின்றனர். மத்தேயு மட்டும் ‘தேவனின் இராஜ்யம்’ என்பதற்கு பதிலாக ‘பரலோகத்தின் இராஜ்யம்’ என்று மாற்றி அழைப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. மத்தேயு தன் புத்தகத்தைக் குறிப்பாக யுத மக்களுக்காகவே எழுதினார். யூதர்கள் பெரும் மதிப்பிற்குரிய தேவனின் பெயரை அடிக்கடி பயன்படுத்துவதை எதிர்த்தனர். 'தேவன்' என்பதற்கு பதிலாக 'பரலோகம்' என்று வார்த்தையை மரியாதை நிமித்தம் பயன்படுத்தினர் (எடுத்துக்காட்டுகள்: லூக்கா 15:21, தானியேல் 4:26). மத்தேயு அந்த பழக்கத்தைத்தான் பின்பற்றினார்.
இன்றும்கூட, மக்கள் வரலாற்று ரீதியாக "பிரிட்டனின் சாம்ராஜ்யம்" என்று கூறுகையில், அவர்கள் பிரிட்டன் நாட்டைக் குறிக்கவில்லை. மாறாக பிரிட்டனில் இருந்த அரசாங்கத்தால் அரசாளப்பட்டு வந்த உலகளாவிய நாடுகளைத்தான் குறிக்கிறார்கள். இதுபோலவே தான் பரலோக(த்தின்) இராஜ்யம் என்பது தேவனின் இராஜ்யத்தையே குறிக்கும்.

3) இன்றைய சபைகளில் இராஜ்யத்தைப் பற்றி காணப்படும் பரவலான போதனைதான் என்ன?
வரலாற்றாசிரியரான எச்.ஜி.வெல்ஸ் (வரலாற்றின் சுருக்கம் The Outline of History) இவ்வாறு குறிப்பிடுகிறார்:
"பரலோக இராஜ்யம் என்று தான் விவரித்த போதனைக்கு இயேசு வழங்கிய மகத்தான முக்கியத்துவமும், அதனோடு ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுது, பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளின் நடைமுறைகளிலும், போதனைகளிலும் அவ்விசயம் அற்பமாக எண்ணப்படும் ஆச்சர்யமும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது."
'இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, இராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்' (மத்தேயு 9:35) என்றால், ஏன் இன்றைய சபைகள் இராஜ்யத்தின் சுவிசேஷத்தை புறக்கணிக்கிறார்கள்? ‘தேவனின் இராஜ்யம்’ பற்றின இயேசுவின் பிரசங்கம் தவறானதா? வேதாகமத்தின் பிற பகுதிகள் அவருடைய கருத்துக்களை ஆதரிக்கின்றனவா? கேள்விகள்...!

மேலும் படிக்க: திருச்சபை நம்பிக்கைகள் - ஒரு வரலாறு

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.