இயேசு கிறிஸ்து

  • ஆதியில்லா கேள்வி

    திரித்துவக் குழுக்கள் கடவுளும், இயேசுவும் ஆதி (தொடக்கம்) இல்லா ஒரு நித்திய தன்மை (அநாதித்தன்மை) கொண்டவர்கள் என்ற ஒரு கோட்பாட்டை ஊக்குவிக்க முயல்கின்றன. இயேசுவும், சர்வ வல்ல தேவனும் (கடவுளும்) இனி நித்தியத்திற்கும் நிலைத்திருப்பார்களா என்பதுதான் கேள்வி என்றால், வேதாகமத்தின்படி அதன் பதில் ஆம், நிச்சயமாக! ஆனால் கடவுள், இயேசு இருவரும் ஆதியில்லாதவர்களா (அநாதியானவர்களா) என்பது பற்றி கேள்வி எழுந்தால், அதற்குரிய பதில் வேதாகமத்திலிருந்து ஒழுங்காக ஆராயப்பட வேண்டும். இந்த தலைப்பில் சில வசனங்களை பார்க்கலாம். மேலும், 'பிதா', 'குமாரன்' என்ற சொற்பதங்களே இந்த விசயத்தை எளிதாக புரிந்து கொள்ள உதவுகின்றன.

  • இது அவ்வளவு முக்கியமா?

    'பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்' எனவும் (1கொரிந்தியர் 8:6), அந்த தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்' எனவும் (யோவான் 3:16) வேதவாக்கியங்கள் அறிவிக்கின்றன. நம் கர்த்தராகிய (எஜமானாகிய) இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை (எபேசியர் 1:17) நாம் தொழுதுகொண்டு, பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தர் (எஜமான்) என்று அறிக்கைபண்ண வேண்டும் (பிலிப்பியர் 2:11).ஆனால் இதன் முக்கியத்துவம் என்ன?

  • இயேசு கிறிஸ்து யார்?

    'அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் (ஆண்டவரும்) நமக்குண்டு' (1 கொரி 8:5-6). பிதாவை நம் தேவனாக (கடவுளாக) உறுதிப்படுத்திய அப்போஸ்தலன், நமக்கு இயேசு கிறிஸ்து என்ற ஒரு கர்த்தரும் (ஆண்டவரும்) உண்டு என்கிறார். நாம் முன்னர் பார்த்தபடி, இந்த கர்த்தர் (Lord) வார்த்தையானது யாவே தேவனைக் குறிக்கும் தடித்த எழுத்து கர்த்தர் (LORD) இல்லை. இந்த வார்த்தை (கிரேக்கம்: Kurios) எஜமான்/ஆண்டவன் என்ற பொருள்படும். ஆக, பவுல் நமக்கு பிதாவாகிய ஒரே கடவுளும், இயேசு கிறிஸ்துவாகிய ஒரே எஜமானும் உண்டு என்கிறார். இயேசு ஏன் நம்முடைய எஜமானராக (ஆண்டவராக) இருக்கிறார்?

  • இரட்சிப்பு

  • எவரை வணங்குகிறோம்?

  • எவரை வணங்குவது?

    கத்தோலிக்க தலைமை வாடிகன் (Vatican) அமைப்பும், பரவலாக ப்ராட்டஸ்டண்ட் (Protestant) திருச்சபைகளும் ஏற்றுக்கொள்ளும் அதநாசியின் பிரமாணம் (Athanasian Creed) திரித்துவத்தை வணங்க வேண்டும் என்கிறது. பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி - என மூன்று நபர்களை  வணங்க வேண்டும் எனச் சொல்லி, ஆனால் அந்த மூன்று பேரும் ஒரே தேவன் எனவும் கூறுகிறது. இயேசு நாம் வணங்குவது என்னவென்று புரிதல் அவசியம் என்கிறார் (யோவான் 4:22). சரி, நாம் வேதாகமம் படித்து புரிந்து கொள்ளலாமா?

  • சரிசமானத்துவ கேள்வி

    இயேசு அவர்களை நோக்கி, "என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்துவருகிறேன்," என்றார். அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள் (யோவான் 5:17-18).இந்த வசனத்தில் பரிசுத்த ஆவி பற்றி எந்தவிதமான குறிப்பும் இல்லை. எனினும் சிலர் அந்த ஓட்டையை மறந்து, “சரிசமானத்துவ” திரித்துவத்தை ஆதரிக்க இந்த வசனத்தை மேற்கோள் காட்டுவது உண்டு. இந்த வசனத்தின் சூழலையும், மேலும் இயேசு பிதாவுடன் தனக்குள்ள உறவின் தன்மை பற்றி நேரடியாகவே  குறிப்பிடும் மற்ற வசனங்களையும் படிப்போம்.

  • திரித்துவம் கிறிஸ்தவத்துள் நுழைந்த கதை

    மறையியல் ஞானமார்க்க தத்துவங்கள் (Gnosticism) பரவ ஆரம்பித்தபோது அப்போஸ்தலர் யோவான் இயேசு தேவகுமாரன் என்பதையும், வல்லமை வாய்ந்த வார்த்தையானவர் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்தி பதிலளிக்கிறார். அந்த வரலாற்று சூழலின் வெளிச்சத்தில் பார்த்தால் யோவானின் புத்தகங்கள் ஒரு புது அர்த்தம்  கொள்கின்றன. அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு, ஞானமார்க்கத்திற்கு எதிர்ப்பாக சில கிறிஸ்தவர்கள் இயேசுவைப் படிப்படியாக தேவனுடைய குமாரன் என்ற ஸ்தானத்திலிருந்து தேவனுக்கே இணையாக உயர்த்துவதை வரலாறு காட்டுகிறது. பிறகு 4-ம் நூற்றாண்டில், இயேசுவை கடவுள் என்று அறிவிக்கும் ஒரு பிரமாணத்தை (Creed) நிறுவவதில் அரசியல் ஆற்றும் பங்கைக் காண்கிறோம். திரித்துவம் என்ற கோட்பாடு - அதாவது, பரிசுத்த ஆவியும் கடவுள் எனும் தத்துவம், 5-ம் நூற்றாண்டில் நுழைகிறது.

  • பரலோகத்தின் இராஜ்யம்

    பரலோகத்தின் இராஜ்யத்தை பற்றி எந்தவொரு கிறிஸ்தவரும் ஏன் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும்? தேவனின் சித்தம் பரலோகத்தில் செய்யபடுவதை போல பூமிலேயும் செய்யப்படும் நாட்களான தேவனின் இராஜ்யம் பூமியில் வரவேண்டுமென ஜெபியுங்கள் என இயேசு ஏன் நமக்கு கற்றுக்கொடுத்தார்? பரலோகத்தின் இராஜ்யம் பரலோகத்தில் அல்லவா இருக்கும்? இயேசு பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, இராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அதனோடு ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுது, இன்றைய சபைகளில் இராஜ்யத்தைப் பற்றி காணப்படும் பரவலான போதனைதான் என்ன?

  • மகா மறுசீரமைப்பின் காலம்

    "தேவன் எல்லோரின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்." 1தீமோத்தேயு 4:10. இந்த வசனம் தேவன் எல்லோரையும் மீட்பார் எனவும், இன்றைய விசுவாசிகளை ஒரு சிறப்பான முறையில் மீட்பார் என்றும் உரைக்கிறது. அப்படியெனில், எல்லா மக்களுக்கும் இலவச சொர்க்க அனுமதி சீட்டு என்று அர்த்தமா? இன்றைய விசுவாசிகளுக்குக் காத்திருக்கும் சிறப்பு மீட்புதான் என்ன? அதுபோக, இயேசு சொல்கிறார், "முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேசங்கள் மேல் அதிகாரம் கொடுப்பேன்.” வெளி. 2:26. யார் இந்த தேசங்கள்? கிறிஸ்துவைப் பின்பற்றுவோரால் அவை எதற்காக ஆளப்படவேண்டும்?

  • மனுக்குலத்தின் கிரய மீட்பு

    ஆதாமின் பாவத்திற்குரிய தண்டனையாக ஆதாமின் இனம் முழுவதும் மரண நித்திரையில் ஆழ்கிறதெனில், கிறிஸ்துவுக்குள் அனைவரும் உயிர்பெறுவர் என்று வேதாகமம் எப்படி வாக்களிக்கக்கூடும்? வேதத்தில் கடவுள் பிரகடனம் செய்கிறார்: “அவர்களை நான் மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்.” ஓசியா 13:14. இந்த தீர்க்கதரிசனத்தைக் கிறிஸ்து எங்ஙனம் நிறைவேற்றினார் என்று அப்போஸ்தலன் பவுல் 1தீமோத்தேயு 2:4-6 வசனங்களில் விவரிக்கிறார். பவுலின் வார்த்தைகளில் இவற்றின் அர்த்தம்தான் என்ன - 'எல்லாரையும் மீட்கும் பொருள்', ‘ஏற்ற கால சாட்சி’, 'இரட்சிக்கப்பட்டு சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்’?

  • மெய்யாகவே நல்ல செய்தி

  • யோவான் 1:1 - வார்த்தையும் தேவனும்

    யோவான் 1:1 கூறுகிறது, 'ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனுடன் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது'. இவ்வசனம் வார்த்தை கடவுளுடன் இருந்ததாகவும், அதே சமயத்தில் அதுவே கடவுளாகவும் இருந்ததாகவும் சொல்கிற மாதிரி தெரிகிறது. கூட பரிசுத்த ஆவிபற்றி  குறிப்பிடாத பற்றாக்குறை இருப்பினும், இவ்வசனம் திரித்துவத்தை நிரூபிக்க மேற்கோள் காட்டப்படுவது வழக்கம். யோவானின் மூல வார்த்தைகளை கிரேக்க மொழியில் படித்துப் பார்ப்போம். வார்த்தை (லோகாஸ்) பற்றியும் தேவன் பற்றியும் அவர் உண்மையில்  என்ன சொல்கிறார் என்பது பற்றி தெளிவான புரிதல் கிடைக்கும்.

  • வினோதமான வழக்குகள் - பதினாலுத்துவம், நான் இருக்கிறேன்..

    இயேசு, 'என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்,' என்கிறார் (யோவான் 14:9). இன்னொரு இடத்தில் அவர், 'நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்,' என்கிறார் (யோவான் 10:30). மேலும், 'ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்' எனவும்  கூறுகிறார் (யோவான் 8:58). இவற்றால் அவர் என்னதான் சொல்ல முனைகிறார்? சரியாக புரிந்து கொள்ள இந்த கூற்றுகளின் பின்னணியைப் பார்ப்போம். மேலும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் (மத்தேயு 28:19) கொடுப்பதன் அர்த்தம் பற்றியும் கற்றுக்கொள்வோம்.

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.