நவீனத்துவம் - சாத்தியமா?

 கருப்பொருள் வசனம்: "மேலும் கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும்.. இருப்பார்கள்" (2தீமோத்தேயு 3:1-5)

இயேசு தனது ஊழியத்தின்போது பிரச்சாரம் செய்த முக்கிய செய்தியானது பூமியில் நிறுவப்படவிருக்கும் பரலோகத்தின் இராஜ்யம் (ஆதாவது பரலோகத்திலிருந்து ஆளப்படுகிற இராஜ்யம்) என்று நாம் காண்கிறோம். மேலும், அந்த இராஜ்யம் பற்றின இறையியல் நம்பிக்கைகள் காலப்போக்கில் எங்ஙனம் மாறிவிட்டன என்பதை திருச்சபை வரலாறு நமக்கு காண்பிக்கிறது.

இராஜ்யத்தைப் பற்றி தற்போது நிலவும் மூன்று பிரதான கோட்பாடுகளில் நவீனத்துவம் ஒன்று. அதற்கு வேதவசன ஆதாரங்கள் உள்ளனவா, இல்லையா என்பதை இப்போது நாம் ஆராயலாம்.

1) நவீனத்துவ கோட்பாட்டின்படி மனிதனால் பூமியில் அமைதியான நீதி செழிக்கும் இராஜ்யத்தை எவ்வாறு நிறுவ முடியும்?
ரிச்சர்ட் க்ரிகோரி ('தேவர்களும் மனிதர்களும் Gods and Men') என்ற நவீனவாதி எழுதுகிறார்:
"இந்த ஆறாயிரம் வருட நாகரீக வாழ்க்கையில் நாம் சாதித்த விசயங்கள் எல்லாம் தார்மீக உணர்வு வளர்ச்சியில் ஆரம்பகட்ட நிலைகளையே குறிக்கின்றன. இந்த வளர்ச்சி நம்மை இட்டுச்செல்லும் நிலையானது தெய்வீகம் எனச் கருத்தப்படக்கூடிய விழுமியதொரு நிலையாகும்.
உயர்ந்த கொள்கைகளின் சேவை மூலம் இந்த ஏறுமுக போக்கைத் தொடர்வதில் நம்பிக்கை வைப்பதே இவ்வுலகத்தை சிறந்ததாகவும், சந்தோசமானதாகவும், மாற்றவிருக்கும் மதமாகும்.
இவைபோன்ற மேன்மைமிகு பெருமுயற்சிகள் மூலமே மனிதனின் இராஜ்யமானது கடவுளின் இராஜ்யம் என்று அழைக்கப்பட தகுதிபெறும்."

2) நவீனவாதிகளின் கூற்று உண்மையில் சாத்தியமா? நாம் சமாதானத்தின் இராஜ்யம் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோமா?
சற்று நம்மை சுற்றி நடக்கும் தினசரி செய்திகளைப் பாருங்கள்! பயங்கரவாதம், குற்றம், கொலை, சுரண்டல், ஊழல், ஒழுக்கக்கேடு, பேராசை, போதை பழக்கம்... என பட்டியல் நீளுகிறது. நவீனமான வளர்ந்த நாடுகளிலும் இதே செய்திகள்தான்!
ஜனநாயக நாடுகளில் கூட நீதி, சமாதானம், பாதுகாப்பு கிடைக்கும் என்பதில் மக்கள் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கிறார்கள்.
சொல்லப்போனால், வேதாகமம் இதை முன்னறிவிக்கிறது –
"மேலும் கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்." (2தீமோத்தேயு 3:1-5).

மேலும் படிக்க: அடிப்படைவாதம் - பூமி அழியுமோ?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.