mei kristhavam

  • பரிசுத்த ஆவி

    திரித்துவத்தின் மூன்றாம் பங்கு - பரிசுத்த ஆவி - வேதாகமத்தில் எங்குமே தேவன் என சொல்லப்படவில்லை. 5-ஆம் நூற்றாண்டில்தான் அது தேவன் என்று ஒரு கோட்பாடு (Creed) மூலம் அறிவிக்கப்பட்டது (அதன் முழு வரலாறு பின்னர் படிப்போம்) . பரிசுத்த ஆவி பற்றி வேத வசனங்கள் மூலம் நாம் என்ன அறிகிறோம்? முதலில் ஆவி என்றால் என்ன? அது ஏன் பரிசுத்தமாக அழைக்கப்படுகிறது? பரிசுத்த ஆவியின் தாக்கம் என்ன? ஆவி பற்றி இயேசு என்ன சொன்னார்? இந்த கேள்விகளுக்கான பதில்களுடன் சேர்த்து, சிறிது கிரேக்க இலக்கணமும் கற்போம்!

  • அசல் "நரகங்கள்"

    "ஷியோல்", "ஹேடீஸ்", "கெஹன்னா", "டார்டரூ" என்ற நான்கு மூல வார்த்தைகளும் தமிழ் பைபிளில் "நரகம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "ஷியோல்" என்ற சொல் பழைய ஏற்பாட்டு எபிரேய பதமாகும். மற்ற மூன்றும் புதிய ஏற்பாட்டு கிரேக்க பதங்களாகும். தமிழ் பைபிள் மொழிபெயர்ப்புகள் கூறுவது போல் இந்த மூல வார்த்தைகள் அனைத்திற்கும் ஒரே அர்த்தம்தானா? அல்லது அச்சொற்கள் ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உண்டா? எபிரேய, கிரேக்க அகராதிகளை எடுத்துப்பார்க்கும்போதும், இந்த வார்த்தைகளைக் குறித்த திருமறையின் சுய விவரிப்புகளையும் கவனித்துப்பார்க்கும்போதும், அச்சொற்களின் அர்த்தங்களைக் குறித்த ஆழமான நுண்ணறிவை நாம் கண்டறிகிறோம். தமிழ் வேதாகமங்களில் மேலோட்டமாக படிக்கும்போது ஒன்றுக்கொன்று முரணாக தோன்றுகிற வசனங்களை பற்றிய தெளிவையும் கண்டடைகிறோம்.

  • அடிப்படைவாதம் - பூமி அழியுமோ?

    அடிப்படைவாதிகள் பூமி அழிந்துபோகும் என்கிறார்கள். அது வேதாகமப்படி சரியா? பின் இயேசு ஏன் "சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்," என்கிறார்? "பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது", என்று வசனம் ஏன் உரைக்கிறது? உலகத்தின் முடிவிற்கும் யுகத்தின் முடிவிற்கும் ஏதும் வித்தியாசம் உண்டா? தேவனின் "எரிச்சலின் அக்கினி" பூமியை துவம்சம் செய்தபின் சுவாரஸ்யமான விசயங்கள் பூமியில் நடக்கவிருப்பதை ஏன் வேதாகமம் முன்னறிவிக்கிறது?

  • அன்பின் பிரதான கட்டளைகள்

    Christ suffering for mankind

    கட்டளைகளிலேயே பிரதானமான கட்டளை எது என்று கேட்கப்பட்டபோது, இயேசு பதிலளிக்கிறார் – “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு (கிரேக்கம்: அகாப்பே “agape”) கூருவாயாக, இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு ("அகாப்பே”) கூருவாயாக என்பதே”. மத்தேயு 22:37-39. புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க மொழியில் அன்பை குறிக்க பல வார்த்தைகள் உள்ளன. இங்கே மத்தேயு "அகாப்பே" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். அதன் அர்த்தம் என்ன? நாம் எப்படி தேவனிடமும், மனிதரிடமும் "அகாப்பே" காட்ட முடியும்?

  • அறிவியலின் கடவுள் யார்?

    அறிவியல் என்பது முறையான ஆய்வு, கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் மூலம் திரட்டப்பட்ட பிரபஞ்சத்தின் அறிவு. தொன்மையான புனித நூல்கள் அறிவியல் சம்பந்தப்பட்ட கூற்றுகளை சொல்லவே செய்கின்றன. ஓர் புனித நூல் கூறும் பிரபஞ்சம் குறித்த கூற்றுகள் அது எழுதப்பட்ட காலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மூடநம்பிக்கைகளாக இருப்பின், அந்த புத்தகம் சிறந்த அறநெறிகளை கொண்டிருந்தாலும் தனது நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. ஆனால் ஒரு தொன்மையான மத புத்தகம் சொல்லிய பிரபஞ்ச கூற்றுகள் நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு உடன்பட்டால், அந்த நூல் உண்மையிலேயே தெய்வீக உந்துதலில் எழுதப்பட்டது என வாதிட முடியும்!

  • அழுகையும் பற்கடிப்பும்

    அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் இடம் பற்றி இயேசு பேசினாரே, அது என்ன? மொத்தம் ஏழு வசனங்களிலே இந்த "அழுகையும், பற்கடிப்பும்" வாசகத்தை காண்கிறோம் - மத்தேயு 8:12; 13:42,50; 22:13; 24:51; 25:30; லூக்கா 13:28. இந்த ஏழு வசனங்களிலுமே இயேசு இந்த சொற்றொடரை உவமைகளிலும், அடையாள கூற்றுகளிலும் மட்டுமே பயன்படுத்துகிறார்; எனவே இது ஒரு அடையாளமே என்பது தெளிவாகிறது. சந்தர்ப்ப சூழலை பொறுத்து அதன் அர்த்தம் மாறுபடுகிறது. எனினும் எல்லா இடங்களிலும் அதன் பொதுவான அர்த்தமானது என்னவெனில் தேவனின் பார்வையில் தவறு செய்த ஒரு மக்கள் கூட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட காலம்வரை நீடிக்கும் ஒரு குறிப்பிட்ட தண்டனை/சோதனைக்காலம் என்பதே ஆகும்.

  • ஆதாம் உட்பட கெட்டவரின் கதி

    மரித்தவர்கள் தற்போது எங்கேதான் உள்ளனர்? அவர்கள் மறுபடியும் உயிர்பெற வாய்ப்பு உண்டா? முதல் மனிதனான ஆதாம் ஏதேன் தோட்டத்தில் கீழ்ப்படியாமல் வீழ்ச்சியடைந்தபோது அவன் வம்சாவழி வந்த நமது ஆத்துமாக்கள் அனைத்தும் "ஷியோல்/ஹேடீஸ்" என்றொரு பாதாளத்திற்கு கண்டனம் செய்யப்பட்டன. அதுதான் கல்லறை. ஆனாலும் நம் எல்லோருக்கும் எதிர்கால நம்பிக்கை உண்டு! (ஷியோல் என்னும்) கல்லறையின் பிடியிலிருந்து நம்மை மீட்கும் பொருள் (ransom) கொடுத்து மீட்டு விடுவிப்பேன் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்தார் (ஓசியா 13:14). அவர் இயேசுவை ஆதாமிற்குப் பதிலாக மரிப்பதற்கு அனுப்பிவைத்தார் (யோவான் 3:16). ஆதாமிற்குரிய மீட்பின் கிரயத்தை (விலையை) இயேசு கொடுத்து ஆதாமின் வம்சம் அனைவரையும் (எல்லா மனிதரையும்) உயிர்த்தெழ வைப்பதற்கான வழியை ஏற்படுத்தினார் (ரோமர் 5:12,18). இயேசுவே அனைவருக்குமாகக் கொடுக்கப்பட்ட மீட்கும் பொருள் (1தீமோத்தேயு 2:6). "ஆதாமிற்குள் எல்லாரும் மரிக்கிறது போல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்" (1கொரி 15:22).

  • ஆதியில்லா கேள்வி

    திரித்துவக் குழுக்கள் கடவுளும், இயேசுவும் ஆதி (தொடக்கம்) இல்லா ஒரு நித்திய தன்மை (அநாதித்தன்மை) கொண்டவர்கள் என்ற ஒரு கோட்பாட்டை ஊக்குவிக்க முயல்கின்றன. இயேசுவும், சர்வ வல்ல தேவனும் (கடவுளும்) இனி நித்தியத்திற்கும் நிலைத்திருப்பார்களா என்பதுதான் கேள்வி என்றால், வேதாகமத்தின்படி அதன் பதில் ஆம், நிச்சயமாக! ஆனால் கடவுள், இயேசு இருவரும் ஆதியில்லாதவர்களா (அநாதியானவர்களா) என்பது பற்றி கேள்வி எழுந்தால், அதற்குரிய பதில் வேதாகமத்திலிருந்து ஒழுங்காக ஆராயப்பட வேண்டும். இந்த தலைப்பில் சில வசனங்களை பார்க்கலாம். மேலும், 'பிதா', 'குமாரன்' என்ற சொற்பதங்களே இந்த விசயத்தை எளிதாக புரிந்து கொள்ள உதவுகின்றன.

  • ஆன்மீகம்: எல்லாம் மனதில் மட்டும்தானோ?

    ஆன்மீகவாதிகள் இராஜ்யம் என்பது ஒரு ஆன்மீக காரியம் மட்டும்தான் என கருதுகின்றனர். வழக்கமாக, லூக்கா 17:21 வசனத்தை மேற்கோள் காட்டி இராஜ்யம் "மக்களுக்குள்" இருப்பதாக கூறுவார்கள். உண்மையிலேயே இயேசு பரிசேயரிடம் இராஜ்யம் அவர்களுக்குள் இருதயத்தில் இருப்பதாக கூறினாரா, என்ன?  அவர் சொல்லவந்த விசயம்தான் என்ன? அவருடைய கூற்று பைபிளின் மற்ற பகுதிகளுடன் எவ்வாறு பொருந்துகிறது?

  • ஆவிக்குரியனவும், மாம்சத்திற்குரியனவும்

    Jesus in Gethsemane

    “அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள், ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்”. ரோமர் 8:5-6.மாம்ச சிந்தனை என்பது பாவத்தை குறிக்கிறது என்று பலர் நினைக்கின்றனர். மாம்சத்தின் செயல்கள் பாவம் மட்டுந்தானா? இல்லை, நாம் உலக வாழ்வில் செய்யும் அனைத்து விசயங்களுமே மாம்சத்திற்குரியவைதான்.

  • இது அவ்வளவு முக்கியமா?

    'பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்' எனவும் (1கொரிந்தியர் 8:6), அந்த தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்' எனவும் (யோவான் 3:16) வேதவாக்கியங்கள் அறிவிக்கின்றன. நம் கர்த்தராகிய (எஜமானாகிய) இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை (எபேசியர் 1:17) நாம் தொழுதுகொண்டு, பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தர் (எஜமான்) என்று அறிக்கைபண்ண வேண்டும் (பிலிப்பியர் 2:11).ஆனால் இதன் முக்கியத்துவம் என்ன?

  • இயேசு கிறிஸ்து யார்?

    'அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் (ஆண்டவரும்) நமக்குண்டு' (1 கொரி 8:5-6). பிதாவை நம் தேவனாக (கடவுளாக) உறுதிப்படுத்திய அப்போஸ்தலன், நமக்கு இயேசு கிறிஸ்து என்ற ஒரு கர்த்தரும் (ஆண்டவரும்) உண்டு என்கிறார். நாம் முன்னர் பார்த்தபடி, இந்த கர்த்தர் (Lord) வார்த்தையானது யாவே தேவனைக் குறிக்கும் தடித்த எழுத்து கர்த்தர் (LORD) இல்லை. இந்த வார்த்தை (கிரேக்கம்: Kurios) எஜமான்/ஆண்டவன் என்ற பொருள்படும். ஆக, பவுல் நமக்கு பிதாவாகிய ஒரே கடவுளும், இயேசு கிறிஸ்துவாகிய ஒரே எஜமானும் உண்டு என்கிறார். இயேசு ஏன் நம்முடைய எஜமானராக (ஆண்டவராக) இருக்கிறார்?

  • இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசம்

    நியாயப்பிரமாண உடன்படிக்கையின் காலமானது, மனுக்குலம் சுயமாய் தம்மைதாமே நியாயப்படுத்திக்கொள்ள முனையும் முயற்சிகளிலிருந்து தம் மனப்போக்கை மாற்றி ஒரு இரட்சகரின் (கிறிஸ்துவின்) தேவையை புரிந்து கொள்ளவேண்டும் என்பதைக் காட்டியது. ஆனால், நாம் இன்னும் வீழ்ச்சியுற்ற மாம்சத்தில் இருக்கும்போது, கிறிஸ்து எவ்வாறு நம்மை நியாயப்படுத்த முடியும்? பாவமன்னிப்புக்காக ஜெபிக்கும்படி கிறிஸ்து நமக்குக் கற்றுக் கொடுத்தபோது, அந்த ஜெபம் எவ்வளவுதரம் நமக்குத் தேவைப்படும் என்று சொன்னாரா? நியாயப்பிரமாணம் கிறிஸ்துவின் அவசியத்தை நமக்குக் காட்டினதென்றால், அவருடைய வருகையைத் தொடர்ந்து அதன் நிலை என்ன ஆனது? அது இன்னும் நடைமுறையில் உள்ளதா?

  • உங்கள் பரம அழைப்பு - நீங்கள் செய்ய வேண்டியது

    இயேசு ஆதாமிற்காக சிலுவையில் செலுத்திய மீட்பின் கிரயம் பற்றின உண்மையான நற்செய்தியை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? மனுக்குலம் அனைத்தும் மறுபடி பூமியில் உயிரோடு எழும்பி கிறிஸ்துவின் ஆட்சியின்கீழ் நீதி கற்றுக்கொள்ளவிருக்கும் தேவனின் மகிமையான இராஜ்யம் குறித்து நீங்கள் உற்சாகமடைகிறீர்களா? நீங்கள் அப்பொழுது கிறிஸ்துவுடன் ஆட்சி செய்ய விரும்புகிறீர்களா? மெய் கிறிஸ்தவத்தின் வேதாகம அஸ்திபாரங்களை நீங்கள் தெரிந்துகொண்டீர்களா? நீங்கள் தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பின்பற்ற விரும்புகிறீர்களா? சரி, அப்படியென்றால் நீங்கள் இப்போது செய்ய வேண்டியது என்ன?

  • உண்மை சொல்லி நன்மை செய்!

    தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். 1பேதுரு 4:19. நாம் நன்மை செய்ய வேண்டும் என்று பேதுரு கூறுகிறார். ஆனால் இவ்வுலகத்தின் நன்மைகள் என அழைக்கப்படுபவை எல்லாம் மாயை, அர்த்தமற்றவை என வேதாகமம் கருதுகிறது (பிரசங்கி 1:14; 2:1). அப்படியிருக்க ஒருவருக்கு நாம் உண்மையிலேயே என்ன நன்மைதான் செய்ய முடியும்? மேலும் சிலர் கேட்கலாம் – ஏன் நாம் உலகிற்கு இப்போதே சொல்ல வேண்டும்? எப்படியும் இராஜ்யத்தில் கேட்கத்தானே போகிறார்கள்? பெரும்பாலோர் தற்போது நற்செய்தியை நிராகரிக்கத்தான் செய்கிறார்கள், இல்லையா?

  • எரிநரக கோட்பாடு

    பிரசங்க பீடத்திலிருந்து போதகர்கள், "கிறிஸ்துவை உங்கள் மீட்பராய் ஏற்றுக்கொள்ளுங்கள்! இல்லையெனில், உங்கள் பாவங்களுக்காக கண்டனம் செய்யப்படுவீர்கள். இறந்ததும் பற்றியெரிகிற அக்கினியில் நித்தியத்திற்கும் சித்திரவதை செய்யப்பட உயிருடன் நரகத்திற்கு கொண்டு செல்லப்படுவீர்கள்," என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். நித்திய ஆக்கினையே அவர்கள் விடுக்கும் பயங்கரமான எச்சரிப்பாகும். இந்த பாதாள உலகினை, நெருப்பு தீண்ட இயலாத சாத்தான் ஆட்சி செய்வதாக பலர் கூறுகிறார்கள். அங்கே தள்ளப்பட்ட மக்களை அவனது பிசாசுகள் சித்திரவதை செய்வதாகவும் சொல்கிறார்கள். எதன் அடிப்படையில் இவ்வாறு போதிக்கப்படுகிறது? பாவத்திற்கென ஆத்துமாவிற்குரிய தண்டனையாக பைபிள் கூறுவது யாது? அது நித்திய வேதனையை போதிக்கிறதா?

  • எவரை வணங்குவது?

    கத்தோலிக்க தலைமை வாடிகன் (Vatican) அமைப்பும், பரவலாக ப்ராட்டஸ்டண்ட் (Protestant) திருச்சபைகளும் ஏற்றுக்கொள்ளும் அதநாசியின் பிரமாணம் (Athanasian Creed) திரித்துவத்தை வணங்க வேண்டும் என்கிறது. பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி - என மூன்று நபர்களை  வணங்க வேண்டும் எனச் சொல்லி, ஆனால் அந்த மூன்று பேரும் ஒரே தேவன் எனவும் கூறுகிறது. இயேசு நாம் வணங்குவது என்னவென்று புரிதல் அவசியம் என்கிறார் (யோவான் 4:22). சரி, நாம் வேதாகமம் படித்து புரிந்து கொள்ளலாமா?

  • கலாச்சார சட்டம் பேசுவோர்

    இன்றைய கிறிஸ்தவ சபைகளில், எந்தவொரு பிரிவை சார்ந்த சபையாக இருந்தாலும் சரி, பெரும்பாலான இளைஞர்கள் ஏமாற்றமடைந்த நிலையில் ஈடுபாடில்லாமல் உள்ளனர். ஏனெனில் அவர்கள் சபை மக்கள் மத்தியில் பரவலாக "நான் உன்னை விட புனிதம்!" என்ற கர்வ நடத்தையையும், அடுத்தவரை குறைசொல்லி குற்றம்தீர்க்கும் மனப்பான்மையையும் அதிகமாக காண்கிறார்கள். கிறிஸ்துவின் போதனைகள் அத்தகைய மனப்பான்மையை ஆதரிக்கின்றனவா? அவரை பின்பற்றுபவர்கள் அவர்வழி செயல்படுவதா, அல்லது இயேசுவை பாவிகளோடு அடிக்கடி உணவருந்தினார் என்பதால் போஜனப்பிரியன் என்றும், குடிகாரன் என்றும் பழிசொல்லி குற்றம் சாட்டின பரிசேயர்கள் போல செயல்படவேண்டுமா?

  • கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

    தானியேலின் தீர்க்கதரிசனங்கள் உலகம் கட்டியாளும் பேரரசுகளையும், அரசாங்கங்களையும் பற்றி என்ன முன்னறிவிக்கின்றன? கடைசி பேரரசான ரோமாபுரியின் வீழ்ச்சிக்குப் பின் என்ன நடக்கிறது? தேவனிடத்தில்  இராஜ்யத்தையும், அரசாங்க உரிமையையும் பெறவிருக்கும் மனுஷகுமாரன் யார்?

  • கிறிஸ்துவின் திருச்சபை

    கிறிஸ்துவின் சரீரம் என கருதப்படும் மெய் திருச்சபையில் ஒருவர் அங்கமாய் இருக்கிறாரா என்பதை நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும்? தேவனின் இராஜ்ய நற்செய்தியின் வேதப்பூர்வமான அடிப்படைக் கோட்பாடுகளை புரிந்து கொண்டு  கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதற்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர்களே கிறிஸ்துவின் மெய் திருச்சபையின் அங்கமாவார்கள். ஆனால், வேதாகமம் மிகப்பெரியது. அதில் கிறிஸ்துவின் நற்செய்தியின் இன்றியமையாத அஸ்திபார கோட்பாடுகளை நாம் உண்மையில் அடையாளம் கண்டுகொள்ள முடியுமா? மேலும், அந்த அஸ்திபாரக் கோட்பாடுகளில் ஒருவர் கருத்து வேறுபட்டால், கிறிஸ்துவின் மெய் திருச்சபையில் அவர் அங்கமாக இருப்பது சாத்தியம் ஆகுமா?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.