நம் அனைவரின் கடவுள் யார்?

இன்றைய மனித மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு கிறிஸ்தவர். உலகத்திலேயே மிகவேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். ஆயிரக்கணக்கான தேவர்களை வழிபடும் பல கோடி இந்துக்களும் உண்டு. கடவுள் என்று யாருமே கிடையாது என நம்பும் நாத்திகர்களும் நம் மத்தியில் உண்டு. இப்படிப்பட்ட பல வகையான நம்பிக்கைகளில் எதுதான் சரி? மனிதர் வணங்கும் எல்லா தேவர்களும் தங்கள் சொந்த 'புனித நூல்கள்' மூலமே வரையறுக்கப்படுவதால், நாம் வேதாகமத்தையும், மத புத்தகங்களையும் சில சோதனைகளுக்கு உட்படுத்திப் பார்ப்போம். அறிவியலும், மனித வரலாறும் இரண்டு முக்கிய சோதனைகள்.

மேலும் படிக்க: நம் அனைவரின் கடவுள் யார்?

அறிவியலின் கடவுள் யார்?

அறிவியல் என்பது முறையான ஆய்வு, கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் மூலம் திரட்டப்பட்ட பிரபஞ்சத்தின் அறிவு. தொன்மையான புனித நூல்கள் அறிவியல் சம்பந்தப்பட்ட கூற்றுகளை சொல்லவே செய்கின்றன. ஓர் புனித நூல் கூறும் பிரபஞ்சம் குறித்த கூற்றுகள் அது எழுதப்பட்ட காலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மூடநம்பிக்கைகளாக இருப்பின், அந்த புத்தகம் சிறந்த அறநெறிகளை கொண்டிருந்தாலும் தனது நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. ஆனால் ஒரு தொன்மையான மத புத்தகம் சொல்லிய பிரபஞ்ச கூற்றுகள் நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு உடன்பட்டால், அந்த நூல் உண்மையிலேயே தெய்வீக உந்துதலில் எழுதப்பட்டது என வாதிட முடியும்!

மேலும் படிக்க: அறிவியலின் கடவுள் யார்?

வரலாற்றின் கடவுள் யார்?

"பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன். அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன.. நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து, அவைகள் வராததற்குமுன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்." ஏசாயா 48:3-5. சரிதான். மனிதனின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மெய்யான கடவுளால் மட்டுமே மனிதகுல வரலாற்று நிகழ்வுகளை முன்னறிவிக்க முடியும். எங்கெல்லாம் இந்த தேவன் தனது தீர்க்கதரிசனங்களை முன்னறிவிக்கிறார்? அவை எதுவும் நிறைவேறியிருக்கின்றனவா?

மேலும் படிக்க: வரலாற்றின் கடவுள் யார்?