மரண தண்டனை

மனிதர்கள் மரித்துப்போவதேன்? இது இயற்கை நியதியா? மிருகங்கள் போல் மடிந்து போவதுதான் நம் விதியா? ஒருவன் மரிக்கும்போது என்ன நேருகிறது? மரணத்தைப்பற்றி இயேசு என்ன சொன்னார்? மரணநிலை பற்றி வேதாகமம் கூறுவதை அறிவியல் ஏற்றுக்கொள்கிறதா? வேதாகமத்தின்படி ஆத்துமா என்பது என்ன? ஆத்துமா மரித்துப் போகக்கூடுமா? மரணத்திற்குப்பின் ‘ஆவி’ வாழுமா?

மேலும் படிக்க: மரண தண்டனை

மனுக்குலத்தின் கிரய மீட்பு

ஆதாமின் பாவத்திற்குரிய தண்டனையாக ஆதாமின் இனம் முழுவதும் மரண நித்திரையில் ஆழ்கிறதெனில், கிறிஸ்துவுக்குள் அனைவரும் உயிர்பெறுவர் என்று வேதாகமம் எப்படி வாக்களிக்கக்கூடும்? வேதத்தில் கடவுள் பிரகடனம் செய்கிறார்: “அவர்களை நான் மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்.” ஓசியா 13:14. இந்த தீர்க்கதரிசனத்தைக் கிறிஸ்து எங்ஙனம் நிறைவேற்றினார் என்று அப்போஸ்தலன் பவுல் 1தீமோத்தேயு 2:4-6 வசனங்களில் விவரிக்கிறார். பவுலின் வார்த்தைகளில் இவற்றின் அர்த்தம்தான் என்ன - 'எல்லாரையும் மீட்கும் பொருள்', ‘ஏற்ற கால சாட்சி’, 'இரட்சிக்கப்பட்டு சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்’?

மேலும் படிக்க: மனுக்குலத்தின் கிரய மீட்பு

மகா மறுசீரமைப்பின் காலம்

"தேவன் எல்லோரின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்." 1தீமோத்தேயு 4:10. இந்த வசனம் தேவன் எல்லோரையும் மீட்பார் எனவும், இன்றைய விசுவாசிகளை ஒரு சிறப்பான முறையில் மீட்பார் என்றும் உரைக்கிறது. அப்படியெனில், எல்லா மக்களுக்கும் இலவச சொர்க்க அனுமதி சீட்டு என்று அர்த்தமா? இன்றைய விசுவாசிகளுக்குக் காத்திருக்கும் சிறப்பு மீட்புதான் என்ன? அதுபோக, இயேசு சொல்கிறார், "முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேசங்கள் மேல் அதிகாரம் கொடுப்பேன்.” வெளி. 2:26. யார் இந்த தேசங்கள்? கிறிஸ்துவைப் பின்பற்றுவோரால் அவை எதற்காக ஆளப்படவேண்டும்?

மேலும் படிக்க: மகா மறுசீரமைப்பின் காலம்