ஆதியில்லா கேள்வி

சர்வ வல்ல தேவன் (கடவுள்) பற்றியும், இயேசு கிறிஸ்து பற்றியும் நாம் படித்தோம். சரிசமானத்துவ கேள்வி குறித்தும் ஆராய்ந்தோம். ஆனால் திரித்துவ அதநாசியின் பிரமாணம் (Athanasian Creed) கூறும் "சம நித்தியர்" கூற்று வேதப்படி உண்மையா?
இயேசுவும், சர்வ வல்ல தேவனும் (கடவுளும்) இனி நித்தியத்திற்கும் நிலைத்திருப்பார்களா என்பதுதான் கேள்வி என்றால், வேதாகமத்தின்படி அதன் பதில் ஆம், நிச்சயமாக!
ஆனால், திரித்துவக் குழுக்கள் கடவுளும், இயேசுவும் ஆதி (தொடக்கம்) இல்லா ஒரு நித்திய தன்மை (அநாதித்தன்மை) கொண்டவர்கள் என்ற ஒரு கோட்பாட்டை ஊக்குவிக்க முயல்கின்றன.

  1. நாம் வேதாகம வசனங்களில் தேடும்போது, இந்த ஆதி இல்லாத நித்தியத்தன்மை (அநாதித்தன்மை) கடவுளைப் பொறுத்தவரையில் உண்மையாக இருப்பது உறுதிப்படுத்துகிறது. ஆனால் இயேசுவுக்கு அது பொருந்தவில்லை.
  2. இயேசு 'தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறவர்' என்றும் (வெளிப்படுத்துதல் 3:14), 'சர்வ சிருஷ்டிக்கும் முந்தின முதற்பேறுமானவர்' (கொலோசெயர் 1:15) என்றும் வேதவாக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன.
    ஆக, இயேசுவிற்கு ஓர் ஆரம்பம் (ஆதி) இருந்தது. அதனால் அவர் அநாதியானவர் இல்லை.
  3. மேலும், இயேசு தேவனுடைய குமாரனென்று நாம் அறிந்திருக்கிறோம். 'குமாரன்' என்ற சொற்பதமே அவர் பிதாவானவரால் ஒரு காலக்கட்டத்தில் படைக்கப்பட்டு வெளிக்கொண்டுவந்திருக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது அல்லவா?
    எனவே, கடவுள் (பிதா) மட்டும் தனியாக இருந்த ஒரு முந்தின காலம் இருந்திருக்க வேண்டும்.

ஆக, கடவுளும் (பிதாவும்), இயேசுவும் சமநித்தியர் அல்ல.

மேலும் படிக்க: பரிசுத்த ஆவி