நம் அனைவரின் கடவுள் யார்?

1) மனித இனம் யாரைத் தன் கடவுளாகவும், சிருஷ்டிகர்த்தாவாகவும் வணங்கிட வேண்டும்?
இன்றைய மனித மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு கிறிஸ்தவர். உலகத்திலேயே மிகவேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். ஆயிரக்கணக்கான தேவர்களை வழிபடும் பல கோடி இந்துக்களும் உண்டு. கடவுள் என்று யாருமே கிடையாது என நம்பும் நாத்திகர்களும் நம் மத்தியில் உண்டு. இப்படிப்பட்ட பல வகையான நம்பிக்கைகளில் எதுதான் சரி?

2) ஒரு மதம் எப்படி வரையறுக்கப்படுகிறது? எந்தவொரு மதத்தாரும் தன் கடவுள் அல்லது கடவுள்களைப் பற்றி எப்படி அறிந்து கொள்கின்றனர்?
ஒவ்வொரு மதமும் தன் கடவுள் அல்லது கடவுள்களை விளக்கி ஓர் நம்பிக்கைக் கட்டமைப்பை எடுத்துரைக்க தனக்கென ஒரு 'புனித நூல்'தனை கொண்டுள்ளது. யூதர்களுக்கு அது யூத வேதாகமம், கிறிஸ்தவருக்கு வேதாகமம் (அதன் பழைய ஏற்பாட்டில் யூத வேதாகமமும் அடங்கும்), இந்துக்களுக்கு வேதங்களும், பகவத் கீதையும், இஸ்லாமியர்க்கு திருக்குர்ஆன்... என்று இந்த புனித நூல் வரிசை வெகு நீளம்!

3) வேதாகமத்தின் கடவுள் எந்த வகையிலும் தனிச்சிறப்பு வாய்ந்தவரோ?
வேதாகமத்தின் தேவன் மிகவும் பிரத்தியேகமானவர். அவர் வேதாகமத்தில் அறிவிக்கிறார் - 'முந்தினவரும் நானே, பிந்தினவரும் நானே; என்னைத்தவிர தேவன் இல்லை. நான் ஒருவரே தேவன்!' (ஏசாயா 44:6).
மெய்யாகவே, இந்த கடவுள் மற்ற அனைத்து தெய்வீக உரிமைக்கோரல்களுக்கு எதிராகவும் சவால் விடுகிறார். அவர் மற்ற 'கடவுள்'கள் எல்லாம் மக்களின் கற்பனைப் படைப்புகள் என்கிறார் (ஏசாயா 43:9-12, 44:11-20).

4) இந்த துணிவான சவால் சரியா, தவறா என்று கணிக்க முடியுமா? அனைத்து மனிதகுலத்தையும் படைத்த மெய் கடவுள் தான் யார்?
மனிதர் வணங்கும் எல்லா தேவர்களும் தங்கள் சொந்த 'புனித நூல்கள்' மூலமே வரையறுக்கப்படுவதால், நாம் வேதாகமத்தையும் மற்றும் பிற மத புத்தகங்களையும் சில சோதனைகளுக்கு உட்படுத்திப் பார்ப்போம். இரண்டு முக்கிய சோதனைகள் –

  • பிரபஞ்சத்தின் அறிவியல்
    • சோதனைக்குட்படுத்தப்படும் புனித நூல் நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்குத் தாக்குப்பிடிக்குமா?
    • ஒரு மத புத்தகத்தின் கடவுள் உண்மையில் பிரபஞ்சத்தின் படைப்பாளர் என்றால், அவரது புத்தகம் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?
  • மனித வரலாறு
    • எந்த மதப் புத்தகம் மனிதகுலத்தின் வரலாற்றைக் காலத்திற்கு முன்னதாகவே கணித்துள்ளது?
    • ஒரு புனித நூல் துல்லியமாக வரலாற்று நிகழ்வுகளை முன்னறிவித்துள்ளது என்றால், அந்த புத்தகத்தின் கடவுள்தான் உண்மையில் மனிதனின் விதியைக் கட்டுப்படுத்தும் இறைவன் என்பது நிச்சயம் அல்லவா?

வேதாகமத்தில், “விவாதிப்போம், வாருங்கள்!" என்கிறார் கர்த்தர் (ஏசாயா 1:18). பல்வேறு உலக மதங்கள் மத்தியில், பகுத்தறிவுடன் நடக்கும் ஓர் விவாதத்திற்கு மனிதனை அழைக்கும் கடவுளைக் காண்பது அரிது! அந்த அழைப்பை ஏற்று, பகுத்தறிந்து சற்று விவாதிக்கலாமா? மனிதகுலத்தின் மகத்தான கேள்விக்கு ஓர் உறுதியான பதில் கண்டுபிடிக்க அது நமக்கு உதவலாம்!

மேலும் படிக்க: அறிவியலின் சோதனை