மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பு

 கருப்பொருள் வசனம்: “அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன், அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள், நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.. நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்” (வெளி 20: 4,11)

மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பு என்றால் என்ன? ஆயிரம் வருட அரசாட்சியின் முடிவில் என்னதான் நடக்கும்?
ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து சாத்தான் கட்டிவைக்கப்பட்ட நிலையில் இருக்க, கிறிஸ்து மற்றும் அவரது திருச்சபையின் சிம்மாசனத்தின் ஆட்சியின் கீழ், சாதகமான சூழ்நிலைகளில் வெகுஜனங்கள் கடவுளைப் பற்றின அறிவைப் பெற்று, நீதியான வழிகளில் நடக்க கற்றுக்கொள்வார்கள்.
அவர்கள் தொடர்ச்சியான அடிப்படையில் ஒரு நியாயத்தீர்ப்பிற்கு உட்படுத்தப்பட்டு, பிடிவாதமாக கீழ்ப்படியாதவர்கள் வாழ்வதற்கான உரிமையை இழந்துவிடுவார்கள். ஆயிரம் ஆண்டுகளின் முடிவில், மனுக்குலம் சோதிக்கப்பட தயாராக இருக்கும். நீதி கற்றுக்கொண்ட மனுக்குலத்தை சோதிப்பதற்கு சாத்தான் கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும் (வெளி 20:3). இதில்தான் மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பின் இறுதிக்கட்டம் (வெளி 20:4, 11-15, மத்தேயு 25:31-46) நிறைவுக்கு வருகிறது.

இயேசு தம்முடைய பரிசுத்தவான்களோடு (தெரிந்துக்கொள்ளபட்ட திருச்சபையுடன்) சிங்காசனத்தில் அமர்ந்து, மனுக்குலத்தில் செம்மறியாடுகள் போலிருக்கிறவர்களையும், வெள்ளாடுகள் போலிருக்கிறவர்களையும் பிரிப்பார்.
     செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். மத்தேயு 25:33.

  • வெள்ளாடுகளும், சாத்தானும்: கடவுளுடைய நீதியை பின்பற்ற மறுத்து, சாத்தானின் வழிகளில் திரும்புகிறவர்கள் இரண்டாவது மரணத்திற்குச் செல்ல நியாயந்தீர்க்கப்படுவார்கள் (எரேமியா 31:33-34, வெளி 21:8). சாத்தான் அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்படுவான். வெளி 20:10. வேதாகமம் 'அக்கினிக்கடல் என்பது இரண்டாம் மரணம்,' என விளக்குகிறது (வெளி 20:14).
  • செம்மறியாடுகள்: கீழ்படிந்தவர்களோ பூமியில் நித்திய யுகங்களுக்கும் உயிர்வாழ்வர். "இவரே நம்முடைய தேவன்! இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம்!" என்று ஆதாமின் இனம் முழுவதும் தேவனை புகழ்வார்கள் (ஏசாயா 25:9).

செம்மறியாடுகள் நித்திய நித்தியமாய் உயிர்வாழும். வெள்ளாடுகளோ இறந்து போகும்.
     “அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை [அழிவை] அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்”. மத்தேயு 25:46.

1. தேவன் மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பார்

மொத்தத்தில், சாத்தான், மிருகம், கள்ள தீர்க்கதரிசி, ஜீவ புத்தகத்தில் பெயர் எழுதப்படாதிருப்பவர்கள், மரணம், கல்லறை என்று கடவுளுக்குப் பிரியமில்லாத அனைத்து விசயங்களும் முடிவுக்கு வரும்.
"மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அப்பொழுது மரணமும் கல்லறையும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. அக்கினிக்கடல் என்பது இரண்டாம் மரணம். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். வெளி 20:10-15.

மரணமும் கல்லறையும் அக்கினிக்கடலிலே தள்ளப்படுவது,தேவன் மரணத்திற்கும், கல்லறைக்கும் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைப்பதை சித்தரிக்கிறது. ஆம், இனி அங்கே மரணம் இராது!
சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல தேசங்களையும் மூடியிருக்கிற மூடலையும், அகற்றிப்போடுவார். அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார், கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார் (ஏசாயா 25:7-8). இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின (வெளி 21:4).

2. வரவிருக்கும் யுகங்கள்

1) ஆயிர வருடம் இராஜ்யத்திற்குப் பின்னர் பூமியில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தீர்க்கதரிசனங்கள் கூறுகின்றன?
கிறிஸ்து இராஜ்யத்தை தேவனிடம் ஒப்புக்கொடுப்பார். பின்பு தேவனே சகலத்திலும் சகலமாயிருப்பார்.
"அதன்பின்பு முடிவு உண்டாகும். அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு இராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம். சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டவுடன், தேவனே சகலத்திலும் சகலமாயிருப்பதற்கேதுவாக தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்கு குமாரன் தாமும் கீழ்ப்படுவார்." 1கொரிந்தியர் 15:24-28.

2) பூமியில் மனிதனின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
தேவன் பூமியை மனிதனின் கைகளில் திரும்பவும் ஒப்படைப்பார். ஆம், ஏதேன் தோட்ட வீழிச்சிக்கு முன்னர், பூமியை ஆள்வதற்கு மனுக்குலம் தான் ஆதியில் நியமிக்கப்பட்டிருந்தது. அந்த வீழ்ச்சியில் அவ்வாட்சியுரிமையை ஆதாம் சாத்தானிடம் இழந்துபோனான். அந்த உரிமை மீண்டும் மனுக்குலத்திற்கு கொடுக்கப்படும்.
"உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்." சங்கீதம் 8:6-8.
பின்பு தேவன், "நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள்," என்றார். ஆதியாகமம் 1:26.
மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பின்போது, பூமியை ஆட்சியுரிமை அதிகாரத்தை இயேசு மனுக்குலத்தில் கீழ்ப்படிந்தவர்கள் [செம்மறியாடுகள்] கையில் மீட்டுக்கொடுப்பார்:
"அப்பொழுது, இராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களை [செம்மறியாடுகளை] பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற இராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்." மத்தேயு 25:34.

3) கிறிஸ்து மற்றும் அவரது தெரிந்துகொள்ளப்பட்ட திருச்சபையின் பதவி என்னவாக மாறும்?
ஆதாமின் வீழ்ச்சிக்கு முன்னர் தேவனின் பிரதிநிதியாக இயேசு ஆதாமுக்கு எப்படி இருந்தாரோ, அப்படியே இயேசுவும் அவரது திருச்சபையும் தேவனின் பிரதிநிதிகளாக மனுக்குலத்திற்கு தங்கள் சந்நிதானத்தை அருள்வார்கள்.
"புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன், அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன், அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார், அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார், என்றது." வெளி 21:2-3.

மேலும் படிக்க: பரம அழைப்பு

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.