நியாயத்தீர்ப்பு நாள்

 கருப்பொருள் வசனம்: "உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும் போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்." ஏசாயா 26:9.

1) நியாயத்தீர்ப்பு நாள் என்றால் என்ன?
பவுல் கூறுகிறார், ‘உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்க கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, மறுபடி பிரசன்னமாகி அவருடைய இராஜ்யத்தை நிறுவுவார்." 2தீமோத்தேயு 4:1. ஆக, இயேசு பூமி திரும்பி தனது இராஜ்யத்தை அமைக்கையில் நியாயத்தீர்ப்பு ஆரம்பமாகும். ‘தேவன் மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தின் குடிகளை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.' அப்போஸ்தலர் 17:31.
பூலோகத்தின் குடிகளை நியாயந்தீர்க்கும்போது என்னதான் நடக்கும்?
     "உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும் போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்." ஏசாயா 26:9.

  • ஆம், 'நியாயத்தீர்ப்பு' என்பது பரவலாக தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. அதில் தண்டனை மட்டும் அடக்கம் அல்ல, மாறாக ஒரு சோதனையும், கற்றுக்கொள்ளும் காலமும் அடக்கம்!
  • மேலும், "கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறது," என்பதை நாம் அறிந்திருக்கிறோம். 2பேதுரு 3:8.

எனவே உயிர்த்தெழுப்பப்பட்ட மனித இனம் நீதியை கற்றுக்கொள்ளவிருக்கும் 'ஆயிரவருட அரசாட்சிக்காலமே' 'நியாயத்தீர்ப்பு நாள்' ஆகும்.

2) சரி, யார் அவர்களுக்கு நீதி கற்றுக்கொடுப்பார்?
"எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை இராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர், நாங்கள் [கிறிஸ்துவின் தெரிந்துகொள்ளப்பட்ட விசுவாசிகள்] பூமியிலே அரசாளுவோம்," என்று புதிய பாட்டைப் பாடினார்கள். வெளி 5:10. ஆம், கிறிஸ்துவின் விசுவாசிகள் அவரோடு உடன் சுதந்தரராக ஆட்சிசெய்து பூமியில் உயிர்த்தெழுந்த மனுக்குலத்திற்கு நீதி கற்றுக்கொடுப்பார்கள்.
பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்த்து (1கொரி 6:2), மனந்திரும்புவோர்க்கு நல்வாழ்விற்குரிய வாய்ப்பை வழங்குவார்கள் (வெளி 22:17). அதுமட்டுமல்லாமல், நோவா காலத்தில் பாவஞ்செய்த தேவதூதர்களையும் கூட அவர்கள் நியாயந்தீர்ப்பார்கள் (1கொரி 6:3, 2பேதுரு 2:4).

3) நீதி கற்றுக்கொள்வது என்பது மனிதருக்கு எப்போதுமே ஒரு கஷ்டமான விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. இராஜ்யத்தில் மட்டும் என்னதான் வித்தியாசமாக இருக்கப்போகிறது?

  • இன்று போலல்லாமல், இராஜ்யத்தில் மனிதர் குறைவற்ற (மரபுவழி பாவமற்ற) சரீரம் கொண்டிருப்பார்கள். எனவே தன்னுள்ளேயே எதிர்த்து போராட வேண்டிய எந்த மனப்பிசாசுகளும் மனிதர்க்கு இருக்காது.
  • சாத்தான் அந்த ஆயிரவருடமளவும் கட்டப்பட்டிருப்பான். இன்று அவன் பரவலாக செய்வது போல அன்று அவனால் யாரையும் ஏமாற்ற முடியாது (வெளி 20:2-3).

இன்று மனிதரின் எதிராளியாகிய சாத்தான் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று நெடுஞ்சாலையில் வகைதேடிச் சுற்றித்திரிவதால் (1பேதுரு 5:8), ஒரு இடுக்கமும், நெருக்கமுமான வழி மட்டுமே உள்ளது (மத்தேயு 7:14). ஆனால் அன்று பூமியில் நெடுஞ்சாலையான பரிசுத்த வழி இருக்கும் (ஏசாயா 35:8) என தீர்க்கதரிசனம் உரைக்கிறது.
மனுக்குலம் நீதி கற்றுக்கொண்டு, கிறிஸ்துவிற்கு அவர்கள் கொடுக்கும் மறுமொழியிலும், தங்கள் நடத்தையில் காண்பிக்கும் முன்னேற்றத்திலும் நியாயந்தீர்க்கப்படுவார்கள் (மத்தேயு 16:27, 25:31-46, லூக்கா 12:48, மீகா 4:1-3).

மேலும் படிக்க: மறுசீரமைப்பின் யுகம்

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.