மகா விசுவாச துரோகம்

அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப்பின் கிறிஸ்தவத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற வேதாகமத்தின் கணிப்பு சுவாரஸ்யமாக இருந்தது. விசுவாசிகளுக்குள்ளிருந்தே கொடிதான ஓநாய்கள் எழும்பி, சீஷர்களை திசைதிருப்பும்படி மாறுபாடானவைகளைப் போதிக்கும் ஒரு மகத்தான விசுவாச துரோகம் நேரும் என்று அப்போஸ்தலர் பவுல் முன்னறிவித்தார். இந்த தீர்க்கதரிசனம் எங்ஙனம் நிறைவேறியது? இந்த விசுவாச துரோகம் கொண்டுவந்த தவறான கோட்பாடுகள் என்ன? அவை கிறிஸ்தவத்தை எப்படி பாதித்தன?

மேலும் படிக்க: மகா விசுவாச துரோகம்

கேட்டின் மகன்

வேதாகம தீர்க்கதரிசனங்கள் ஒரு "கேட்டின் மகனாகிய பாவமனுஷன்", அதாவது ஒரு அந்திக்கிறிஸ்துவை முன்னறிவித்தன. பலர் அந்த தீர்க்கதரிசனங்கள் உரைப்பது எதிர்காலத்தில் எழப்போகும் ஒரு உலகத் தலைவரை என்று எதிர்பார்க்கின்றனர். வேறு சிலர் அந்த நபர் ரோம பேரரசனாக இருந்த நீரோ என்றும் அந்தத் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் கி.பி.70-இலேயே நிறைவேறிவிட்டன என்றும் கருதுகின்றனர். இந்த இரண்டு  கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்று உண்மையாக இருந்தால் - அதாவது, அந்திக்கிறிஸ்து கி.பி.70-இல் ஒரு குறுகியகால ஆட்சி செய்தான் என்றாலோ (அல்லது) அவன் வெகுதொலைவில் உள்ள எதிர்காலத்தில்தான்  எழவிருக்கிறான் என்றாலோ - அது திருச்சபை வரலாற்றின் பெரும்பகுதியை (2000-சொச்சம் ஆண்டுகளை) அர்த்தமற்றதாக்கிவிடும். அது நிச்சயம் சரியாக தோன்றவில்லை. வேதாகமம் உண்மையில் அப்படியா சொல்கிறது?

மேலும் படிக்க: கேட்டின் மகன்

பாபிலோனின் குமாரத்திகள்

மெய் திருச்சபையானது எப்பொழுதுமே வனாந்தரத்தில் (சமூகத்திலிருந்து ஓரம் கட்டப்பட்ட நிலையில்) கேட்டின் மகனின் (அந்திக்கிறிஸ்துவின்) 1,260 வருட ஆட்சியின்கீழ் போப்பாண்டத்துவதால்  துன்புறுத்தப்பட்டிருந்து வந்திருந்ததுதான் உண்மை என்றால், சீர்திருத்த (Reformation) சகாப்தத்தின் பிரபலமான புராட்டஸ்டன்ட் சீர்திருத்த திருச்சபைகள் எப்படிப்பட்டவை? அவை நல்ல சபைகள் இல்லையா? அவைகள் போப்பாண்டத்துவத்தின் வேதாகமம் சாராத போதனைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து அந்த அமைப்பிலிருந்து வெளிவந்தன, அல்லவா? பைபிளில் திருச்சபை வரலாற்றில் அந்தவொரு காலப்பகுதி பற்றி எந்தவொரு தீர்க்கதரிசனங்களும் உள்ளனவா? அவை எவ்வாறு நிறைவேறின?

மேலும் படிக்க: பாபிலோனின் குமாரத்திகள்

பெந்தெகொஸ்தே இயக்கம்

பெந்தெகொஸ்தே இயக்கம் 20-ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஓர் இயக்கம். அதன் சபைகளின் முக்கிய கவனம் அந்நிய பாஷைகளில் பேசுவது போன்ற பரிசுத்த ஆவியின் அதிசய வரங்களை அனுபவிப்பதாகும். இன்று பலர் அந்நிய பாஷை வரம் என்றால் யாருக்கும் புரிய மாட்டாத சொற்களை பேசுவது என்று நினைக்கிறார்கள், ஏனென்றால் பெந்தெகொஸ்தே சபைகளில் மக்கள் அதைத்தான் காண்கிறார்கள். ஆனால் ஆதித்திருச்சபை இந்த வரத்தை பெற்றபோது என்ன நிகழ்ந்தது? முதலாவதாக, தேவன் இந்த வரங்களை ஆதித்திருச்சபைக்கு ஏன் கொடுத்தார்? சுகமளித்தல், தனிநபர் தீர்க்கதரிசனங்கள் போன்ற அற்புத வரங்களின் நோக்கம் என்னவாக இருந்தது?

மேலும் படிக்க: பெந்தெகொஸ்தே இயக்கம்

கலாச்சார சட்டம் பேசுவோர்

இன்றைய கிறிஸ்தவ சபைகளில், எந்தவொரு பிரிவை சார்ந்த சபையாக இருந்தாலும் சரி, பெரும்பாலான இளைஞர்கள் ஏமாற்றமடைந்த நிலையில் ஈடுபாடில்லாமல் உள்ளனர். ஏனெனில் அவர்கள் சபை மக்கள் மத்தியில் பரவலாக "நான் உன்னை விட புனிதம்!" என்ற கர்வ நடத்தையையும், அடுத்தவரை குறைசொல்லி குற்றம்தீர்க்கும் மனப்பான்மையையும் அதிகமாக காண்கிறார்கள். கிறிஸ்துவின் போதனைகள் அத்தகைய மனப்பான்மையை ஆதரிக்கின்றனவா? அவரை பின்பற்றுபவர்கள் அவர்வழி செயல்படுவதா, அல்லது இயேசுவை பாவிகளோடு அடிக்கடி உணவருந்தினார் என்பதால் போஜனப்பிரியன் என்றும், குடிகாரன் என்றும் பழிசொல்லி குற்றம் சாட்டின பரிசேயர்கள் போல செயல்படவேண்டுமா?

மேலும் படிக்க: கலாச்சார சட்டம் பேசுவோர்

வாக்குத்தத்த வியாபாரிகள்

ஆசீர்வாத நற்செய்தி சபைகள் நடத்துபவர்கள் தங்கள் சபையாரிடம், "தேவன் நீங்கள் உலக வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ச்சியையும், செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் அனுபவிக்க விரும்புகிறார். வியாதி தீரும்! வறுமை ஒழியும்! அதுதான் உன் பரிசு. இந்த வாக்குத்தத்தத்தை உங்களுக்குரியதாக்கிக் கொள்ளுங்கள். என்னோடு சேர்ந்து இதை சொல்லுங்கள்!" என்று பிரகடனம் செய்கிறார்கள். அவர்கள் தம்வசப்பட்ட சபை மக்களை பழைய ஏற்பாட்டு வேதவசனங்களை வாய்மொழியால் மந்திரம்போல மறுபடி மறுபடி ஆமென் போட்டு ஓதவைக்க உற்சாகப்படுத்துவது வழக்கம். மேலும் அவர்கள் சபையாரின் மாதாந்திர ஊதியத்தில் தசமபாகமாக பத்தில் ஒரு பங்கை தேவாலயத்திற்கென  கோருகின்றனர். இவை எல்லாம் வேதாகாமப்பூர்வமானவையா? உலகப்பிரகாரமனான வெற்றிகளையும்,  செல்வச்செழிப்பையும் தேடுவதைப்பற்றி இயேசு என்ன சொன்னார்?

மேலும் படிக்க: வாக்குத்தத்த வியாபாரிகள்

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.