யுகங்கள்

  • அடிப்படைவாதம் - பூமி அழியுமோ?

    அடிப்படைவாதிகள் பூமி அழிந்துபோகும் என்கிறார்கள். அது வேதாகமப்படி சரியா? பின் இயேசு ஏன் "சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்," என்கிறார்? "பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது", என்று வசனம் ஏன் உரைக்கிறது? உலகத்தின் முடிவிற்கும் யுகத்தின் முடிவிற்கும் ஏதும் வித்தியாசம் உண்டா? தேவனின் "எரிச்சலின் அக்கினி" பூமியை துவம்சம் செய்தபின் சுவாரஸ்யமான விசயங்கள் பூமியில் நடக்கவிருப்பதை ஏன் வேதாகமம் முன்னறிவிக்கிறது?

  • ஆன்மீகம்: எல்லாம் மனதில் மட்டும்தானோ?

    ஆன்மீகவாதிகள் இராஜ்யம் என்பது ஒரு ஆன்மீக காரியம் மட்டும்தான் என கருதுகின்றனர். வழக்கமாக, லூக்கா 17:21 வசனத்தை மேற்கோள் காட்டி இராஜ்யம் "மக்களுக்குள்" இருப்பதாக கூறுவார்கள். உண்மையிலேயே இயேசு பரிசேயரிடம் இராஜ்யம் அவர்களுக்குள் இருதயத்தில் இருப்பதாக கூறினாரா, என்ன?  அவர் சொல்லவந்த விசயம்தான் என்ன? அவருடைய கூற்று பைபிளின் மற்ற பகுதிகளுடன் எவ்வாறு பொருந்துகிறது?

  • கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

    தானியேலின் தீர்க்கதரிசனங்கள் உலகம் கட்டியாளும் பேரரசுகளையும், அரசாங்கங்களையும் பற்றி என்ன முன்னறிவிக்கின்றன? கடைசி பேரரசான ரோமாபுரியின் வீழ்ச்சிக்குப் பின் என்ன நடக்கிறது? தேவனிடத்தில்  இராஜ்யத்தையும், அரசாங்க உரிமையையும் பெறவிருக்கும் மனுஷகுமாரன் யார்?

  • நியாயத்தீர்ப்பு நாள்

    இரண்டாம் உயிர்த்தெழுதலில் எழுபவர்கள் ஒரு நியாயத்தீர்ப்புச்சோதனைக்காக ("க்ரைசீஸ்") எழுகிறார்கள். ஆம், இது அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு நாளாகும். ஆனால் நியாயத்தீர்ப்பு நாள் என்றால் என்னதான் அர்த்தம்? வேதவாக்கியங்கள் கடவுளுடைய இராஜ்யத்துடன் ஏன் அதனை இணைகின்றன? அது எவ்வளவு காலம் நீடிக்கும்? அது ஒரு 24 மணிநேர நாளா? கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் பூமியில் வரும்போது உலகின் குடிமக்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள் என்று வேதாகமம் ஏன் சொல்கிறது?

  • மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பு

    மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பு என்றால் என்ன? அதில் இயேசுவுடன் சிம்மாசனத்தில் அமரவிருப்பவர்கள் யார்? சிம்மாசனத்தின் முன் நிற்கும் வெள்ளாடுகளுக்கு, செம்மறியாடுகளும் யாரை சித்தரிக்கின்றன? ஆயிரம் வருடங்கள் ஆட்சி நடக்குமென்றால், அதன் முடிவில் என்ன நடக்கும்? சாத்தானின் கதி என்ன? 'மரணமும் கல்லறையும் அக்கினி கடலுக்குள் தள்ளப்படும்' என்று வேதாகமம் ஏன் சொல்கிறது? வரவிருக்கும் யுகங்கள் எப்படி இருக்கும்? அப்போது பூமியில் மனிதனின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? ஆயிரம் வருட ஆட்சிக்குப் பின்னர் இயேசு மற்றும் அவரது திருச்சபையின் பதவி என்னவாக மாறும்?

  • மரித்தோர் உயிர்த்தெழுதல்

    இயேசு கிறிஸ்து பூமி திரும்பும்பொழுது, மரித்த அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று வேதவாக்கியங்கள் கூறுகின்றன. அப்படியெனில், எல்லா மனிதரும் ஒரே நொடிப்பொழுதில் உயிரோடு எழுவார்களா, என்ன? இரண்டுவித உயிர்த்தெழுதல்கள் உள்ளன என்று வேதாகமம் சொல்கிறது. மேலும் அது, 'முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவான்' என்று கூறுவதன் காரணம் என்ன?

  • யுக மாற்றம்

    முதலாம் உயிர்த்தெழுதலுடன் சம்பந்தப்பட்டதாக வேதாகமம் விவரிக்கிற நிகழ்வுகள் யாவை? இரண்டு உயிர்த்தெழுதல்கள் இருப்பது போல, இரண்டு நியாயத்தீர்ப்புகளும் உள்ளன. பேமா ஆசன நியாயத்தீர்ப்பிற்கும், மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பிற்கும் என்ன வேறுபாடு? அடுத்த யுகத்தின்  ஆரம்பத்தில் சாத்தானுக்கு என்ன நடக்கும்? இரண்டாவது உயிர்த்தெழுதலில் எழுகிறவர்கள் ஒரு நியாயத்தீர்ப்புச்சோதனையை (கிரேக்கம்: 'க்ரைசீஸ்') எதிர்கொள்வார்கள் என வேதாகமம் ஏன் சொல்கிறது?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.