mei kristhavam

  • விசுவாசத்தை நிரூபிப்பது

    திருச்சபையின் அழைப்பு பாவத்திற்கு எதிராக போராடுவது அல்ல என்றால், கிறிஸ்துவின்மீது வைக்கும் விசுவாசமே நமக்கு நீதியாக எண்ணப்படுகிறது என்றால், நம் விசுவாசத்தை நிரூபிக்க எதுவும் செய்யவேண்டியதில்லை என்று அர்த்தமா, என்ன? ஒரு நபர் கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்தை எவ்வாறு நிரூபிக்க முடியும்? நாம் கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் என்று அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் அதன் பொருள்தான் என்ன? இயேசு தன்னை பின்பற்றுபவர்களை என்ன செய்யும்படி கட்டளையிட்டார்?

  • விசுவாசமும், புனிதமும்

    சுவிசேஷ ஓட்டத்தை நாம் ஓடும்போது நாம் சாதிக்கின்ற அதிமுக்கியமான ஒரு காரியம் என்னவெனில் நம் விசுவாசத்தை நிரூபிக்கிறோம்! பவுல் எழுதிய நிருபங்களின்படி சுவிசேஷத்தை அறிவிப்பது என்பது ஒரு விசுவாசிக்கான அடிப்படைத் தேவையாகும். அதுவே விசுவாசத்தின் சோதனை. நற்செய்திப் பணியின் மற்றொரு முக்கிய நோக்கம் நமது ஆசாரிய கடமையை நிறைவேற்றுவதாகும். ஆம், ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனும் ஓர் ஆசாரியன் என்கிறது வேதாகமம். மேலும், இந்த ஆசாரிய கடமையை செய்வதே பரிசுத்தம் அடைவதற்கான வழியாகும்.

  • விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

    Welcome to ChristianityOriginal.com. By browsing this website you are agreeing to comply with and be bound by the following terms and conditions of use, which together with our privacy policy govern ChristianityOriginal.com’s relationship with you in relation to this website.

    The use of this website is subject to the following terms of use:

    • The content of the pages of this website is for your general information only. It is subject to change without notice.
    • Neither we nor any third parties provide any warranty or guarantee as to the accuracy, timeliness, performance, completeness or suitability of the information and materials found or offered on this website for any particular purpose. You acknowledge that such information and materials may contain inaccuracies or errors and we expressly exclude liability for any such inaccuracies or errors to the fullest extent permitted by law.
    • Your use of any information or materials on this website is entirely at your own risk, for which we shall not be liable. It shall be your own responsibility to ensure that any products, services or information available through this website meet your specific requirements.
      This website contains material which is owned by or licensed to us. This material includes, but is not limited to, the design, layout, look, appearance and graphics. Reproduction is prohibited other than in accordance with the copyright notice, which forms part of these terms and conditions.
    • All trademarks reproduced in this website which are not the property of, or licensed to, the operator are acknowledged on the website.
    • Unauthorized use of this website may give rise to a claim for damages and/or be a criminal offence.
    • From time to time this website may also include links to other websites. These links are provided for your convenience to provide further information. They do not signify that we endorse the website(s). We have no responsibility for the content of the linked website(s).
    • You may not create a link to this website from another website or document without ChristianityOriginal.com's prior written consent.
  • வினோதமான வழக்குகள் - பதினாலுத்துவம், நான் இருக்கிறேன்..

    இயேசு, 'என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்,' என்கிறார் (யோவான் 14:9). இன்னொரு இடத்தில் அவர், 'நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்,' என்கிறார் (யோவான் 10:30). மேலும், 'ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்' எனவும்  கூறுகிறார் (யோவான் 8:58). இவற்றால் அவர் என்னதான் சொல்ல முனைகிறார்? சரியாக புரிந்து கொள்ள இந்த கூற்றுகளின் பின்னணியைப் பார்ப்போம். மேலும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் (மத்தேயு 28:19) கொடுப்பதன் அர்த்தம் பற்றியும் கற்றுக்கொள்வோம்.

  • வேத ஆய்வு - சிறந்த நடைமுறைகள்

    அடிப்படை விதிகள்

    1. சூழல் (context) முக்கியம்.
    2. வசனம் வசனத்தை விளக்கும்.
      • அப்போஸ்தலர் 17:11, ஏசாயா 28:9-10, 2பேதுரு 1:20
    3. ஒரு கோட்பாட்டை நிறுவிட குறைந்தது இரு சாட்சிகள் தேவை.
      • 2கொரிந்தியர் 13:1, வெளி 11:3
    4. பூரண வேத ஒத்திசைவு தேடு.
      • மத்தேயு 4:4, 2தீமோத்தேயு 3:16-17
    5. எழுதப்பட்டதைத் தாண்டி செல்லாதே.
      • 1கொரிந்தியர் 4:6, வெளி 22:18

    விரிவான விதிகள்

    1. மூல வேதம் எபிரேயு (பழைய ஏற்பாடு) / கிரேக்க (புதிய ஏற்பாடு) மொழிகளில் உள்ளது. தமிழில் படிக்கும்பொழுது பல்வேறு வேதாகம மொழிபெயர்ப்புப்பதிப்புகளை படித்துப் பார்க்கவும்:
      எந்த ஒரு குறிப்பிட்ட மொழிபெயர்ப்புப்பதிப்பும் முற்றிலும் சரியானது என சொல்ல முடியாது. அதனால் எந்தவொரு வசனத்தையும் பலவகைப்பட்ட மொழிபெயர்ப்புப் பதிப்புகளில் படித்து ஒப்பிட்டுப் பார்த்து, எந்த மொழிபெயர்ப்பில் அவ்வசனம் வேதாகமத்தின் பிற வசனங்களுடன் ஒத்திசைவாக உள்ளதோ, அதன் மூலம் சரியான அர்த்தம் புரிந்து கொள்ளவும். (அடிப்படை விதி#4 பார்க்கவும்).

      குறிப்பு: தமிழில் பல பொழிபெயர்ப்புப் பதிப்புகள் இருந்தாலும், ஆங்கிலம் அளவு நிறைய வகைகள் இல்லை. அதனால் ஆங்கிலம் தெரியுமெனில், இந்த மூன்று வகையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு வகைகளை கலந்து பார்ப்பது நல்லது:
      • செயல்பாட்டு சமன்பாடு மொழிபெயர்ப்பு - உதாரணம்: NIV New International Version.
      • முறை சமன்பாடு மொழிபெயர்ப்பு - உதாரணம்: NASB New American Standard Bible.
      • கட்டற்ற மொழிபெயர்ப்பு - உதாரணம்: The Message Bible.
    2. முக்கியமான எபிரேய/கிரேக்க வேதாகம வார்த்தைகளை புரிந்து கொள்ளவும்: இடைவரி மொழிபெயர்ப்பு (interlinear) மற்றும் சொற்பிறப்பியல் (etymology) தெரிந்துகொள்ள வைன்'ஸ் (Vine's) மற்றும் ஸ்டராங்'ஸ் (Strong's) குறிப்புகள் பார்த்து, விளக்கவுரை செய்யவும்.
      பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஓர் வார்த்தையின் சரியான விளக்கத்தை வசனங்களே அருளும். (அடிப்படை விதி#2பார்க்கவும்).
    3. முரண்பாடாகத் தென்படும் வசனங்களை சரிதீர்க்க வேதாகமத்தின் ஆரம்பகால ஆதி மூலப்பிரதிகளில் (earliest manuscripts) சரிபார்க்கவும். (அடிப்படை விதி #4 பார்க்கவும்).
    4. எந்த ஒரு கோட்பாட்டையும் ஒன்றிற்கு மேலான வசனங்களின் ஆதரவுடன் நிறுவவும். (அடிப்படை விதி#3பார்க்கவும்).
    5. வசனங்களை சூழல் பொருத்தம் (context) பார்த்து படிக்கவும். வசனத்தின் நுண்சூழலும் (micro context), பெருஞ்சூழலும் (macro context) கருத்தில் கொள்ளவும். ஓர் மூல வாக்கியத்தை முறையாக விளக்கவுரை (exegesis) செய்ய, அந்த வாக்கியம், அதன் ஆசிரியர் மற்றும் அவரின் வாசகர்கள் ஆகிய அம்மூன்றின் இலக்கியச் சூழலை மட்டுமல்லாது அவற்றின் சமூக, பொருளாதார, வரலாற்று, அரசியல் மற்றும் கலாச்சார சூழல்களை (context) பற்றி புரிதல் மிக்க அவசியம். (அடிப்படை விதி #1 பார்க்கவும்).
    6. எந்தவொரு விசயத்திலும், நேரடியாக விசயத்தை சொல்லும் (direct statements) வசனங்கள் பொருள் விளக்கவேண்டிய (interpretative) வசனங்களை விட முன்னுரிமை பெறும். (அடிப்படை விதி#5பார்க்கவும்).
    7. வசனங்களில் உள்ள அடையாளங்களையோ, உவமைகளையோ, உருவகங்களையோ நிஜம் எனத் தப்பாக புரிந்து கொள்ளக்கூடாது. மேலும், வேதத்தில் ஒரு பகுதியினை அடையாள பொருள் எனக் கருதினால், சீராக அப்பகுதியில் உள்ள அனைத்தையும் அடையாளமாக கருத வேண்டும். மாறாக, அப்பகுதியில் பாதி விசயங்களை அடையாளங்களாகவும், பாதி விசயங்களை நிஜங்களாகவும் கருதக்கூடாது. (அடிப்படை விதி #1 பார்க்கவும்).
    8. வேத அடையாளங்கள், உவமைகள், மற்றும் உருவகங்களுக்கு சொந்தமாய் யோசித்து விளக்கம் சொல்லாமல், மற்ற வசனங்களைப் பயன்படுத்தி விளக்கவும். (அடிப்படை விதி#2பார்க்கவும்).
    9. புதிய ஏற்பாட்டில் உள்ள நிருபங்களை வழக்கமாக கடிதம் (letter) அல்லது மின்னஞ்சல் (e-mail) படிப்பது போல் ஒரே மூச்சில் படிக்க வேண்டும். (அடிப்படை விதி #1 பார்க்கவும்).
    10. எபிரேயர் 6:1-2 வசனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மனதில் கொள்ளவும்: "கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேசங்கள்... செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரம்." (அடிப்படை விதி #1 பார்க்கவும்).
  • ஷியோல்/ஹேடீஸ் - மொழிபெயர்ப்பாளர்கள் மோசடி

    தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மூல வேதாகமத்தில் 65 இடங்களில் காணப்படும் "ஷியோல்" என்னும் ஒரே எபிரேய வார்த்தையை தமிழ் வேதாகமத்தில் 59 தடவை பாதாளம் என்றும், 2 தடவை படுகுழி/ஆழம் என்றும், 4 தடவை நரகம் என்றும் மொழிபெயர்த்துள்ளனர். நல்லவர்கள் இறந்தபோது இந்த "ஷியோல்" இளைப்பாறும் இடத்தை "பாதாளம்/கல்லறை/குழி" என்று மொழிபெயர்த்தவர்கள், கெட்டவர்கள் இறந்தபோது அதே மூல வார்த்தையை "நரகம்" என்று மொழியாக்கம் செய்துள்ளனர். யோபு "ஷியோலில்" தன்னை ஒளித்து வைக்கவேண்டுமென தேவனிடம் வேண்டுகிறான் (யோபு 14:12-13). எபிரேய மொழி வல்லுநர் எவரைக் கேட்டாலும் "ஷியோல்" என்றால் "சவக்குழி" என உறுதி செய்வார்கள். வேதாகமம் உண்மையில் "ஷியோல்" எப்படிப்பட்ட இடம் என்பதை விவரிக்கிறது!

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.