விசுவாசத்தால் மட்டுமே

  • இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசம்

    நியாயப்பிரமாண உடன்படிக்கையின் காலமானது, மனுக்குலம் சுயமாய் தம்மைதாமே நியாயப்படுத்திக்கொள்ள முனையும் முயற்சிகளிலிருந்து தம் மனப்போக்கை மாற்றி ஒரு இரட்சகரின் (கிறிஸ்துவின்) தேவையை புரிந்து கொள்ளவேண்டும் என்பதைக் காட்டியது. ஆனால், நாம் இன்னும் வீழ்ச்சியுற்ற மாம்சத்தில் இருக்கும்போது, கிறிஸ்து எவ்வாறு நம்மை நியாயப்படுத்த முடியும்? பாவமன்னிப்புக்காக ஜெபிக்கும்படி கிறிஸ்து நமக்குக் கற்றுக் கொடுத்தபோது, அந்த ஜெபம் எவ்வளவுதரம் நமக்குத் தேவைப்படும் என்று சொன்னாரா? நியாயப்பிரமாணம் கிறிஸ்துவின் அவசியத்தை நமக்குக் காட்டினதென்றால், அவருடைய வருகையைத் தொடர்ந்து அதன் நிலை என்ன ஆனது? அது இன்னும் நடைமுறையில் உள்ளதா?

  • கலாச்சார சட்டம் பேசுவோர்

    இன்றைய கிறிஸ்தவ சபைகளில், எந்தவொரு பிரிவை சார்ந்த சபையாக இருந்தாலும் சரி, பெரும்பாலான இளைஞர்கள் ஏமாற்றமடைந்த நிலையில் ஈடுபாடில்லாமல் உள்ளனர். ஏனெனில் அவர்கள் சபை மக்கள் மத்தியில் பரவலாக "நான் உன்னை விட புனிதம்!" என்ற கர்வ நடத்தையையும், அடுத்தவரை குறைசொல்லி குற்றம்தீர்க்கும் மனப்பான்மையையும் அதிகமாக காண்கிறார்கள். கிறிஸ்துவின் போதனைகள் அத்தகைய மனப்பான்மையை ஆதரிக்கின்றனவா? அவரை பின்பற்றுபவர்கள் அவர்வழி செயல்படுவதா, அல்லது இயேசுவை பாவிகளோடு அடிக்கடி உணவருந்தினார் என்பதால் போஜனப்பிரியன் என்றும், குடிகாரன் என்றும் பழிசொல்லி குற்றம் சாட்டின பரிசேயர்கள் போல செயல்படவேண்டுமா?

  • பயனற்ற விசயங்கள்

    Jesus calls Tax Collector Matthew to follow him

    திருச்சபை பாவத்தை எதிர்த்து போராட அழைக்கப்படவில்லை என்றால், அப்போஸ்தலர்கள் ஏன் சில காரியங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்கள்? கொரிந்தியர்களுக்கு பவுல் எழுதுகிறார் - 'எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பயனாயிராது.' 1கொரிந்தியர் 6:12 . முதலாவதாக, கடுகளவும் குழப்பமில்லாத என்ன ஒரு துணிகர அறிவிப்பு இது! -- எல்லாவற்றையும் அநுபவிக்க திருச்சபைக்கு அதிகாரமுண்டு! ஆம், நாம் கிறிஸ்துவினால் நியாயபடுத்தப்பட்டு நீதிமான் என்று "கருதப்படுகிறோம்", அதனால் நாம் மாம்சத்தில் செய்யும் பாவத்தை தேவன் கணக்கில் கொள்வதில்லை. அதனால் எல்லாவற்றையும், எதை வேண்டுமானாலும் செய்ய நமக்கு நிச்சயம் அதிகாரம் உண்டு. ஆனால் எல்லாமும் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் நாம் ஓடுவதற்கு பயனாயிருமா?

  • விசுவாசத்தை நிரூபிப்பது

    திருச்சபையின் அழைப்பு பாவத்திற்கு எதிராக போராடுவது அல்ல என்றால், கிறிஸ்துவின்மீது வைக்கும் விசுவாசமே நமக்கு நீதியாக எண்ணப்படுகிறது என்றால், நம் விசுவாசத்தை நிரூபிக்க எதுவும் செய்யவேண்டியதில்லை என்று அர்த்தமா, என்ன? ஒரு நபர் கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்தை எவ்வாறு நிரூபிக்க முடியும்? நாம் கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் என்று அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் அதன் பொருள்தான் என்ன? இயேசு தன்னை பின்பற்றுபவர்களை என்ன செய்யும்படி கட்டளையிட்டார்?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.