ஞானஸ்நானம்

  • ஆவிக்குரியனவும், மாம்சத்திற்குரியனவும்

    Jesus in Gethsemane

    “அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள், ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்”. ரோமர் 8:5-6.மாம்ச சிந்தனை என்பது பாவத்தை குறிக்கிறது என்று பலர் நினைக்கின்றனர். மாம்சத்தின் செயல்கள் பாவம் மட்டுந்தானா? இல்லை, நாம் உலக வாழ்வில் செய்யும் அனைத்து விசயங்களுமே மாம்சத்திற்குரியவைதான்.

  • உங்கள் பரம அழைப்பு - நீங்கள் செய்ய வேண்டியது

    இயேசு ஆதாமிற்காக சிலுவையில் செலுத்திய மீட்பின் கிரயம் பற்றின உண்மையான நற்செய்தியை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? மனுக்குலம் அனைத்தும் மறுபடி பூமியில் உயிரோடு எழும்பி கிறிஸ்துவின் ஆட்சியின்கீழ் நீதி கற்றுக்கொள்ளவிருக்கும் தேவனின் மகிமையான இராஜ்யம் குறித்து நீங்கள் உற்சாகமடைகிறீர்களா? நீங்கள் அப்பொழுது கிறிஸ்துவுடன் ஆட்சி செய்ய விரும்புகிறீர்களா? மெய் கிறிஸ்தவத்தின் வேதாகம அஸ்திபாரங்களை நீங்கள் தெரிந்துகொண்டீர்களா? நீங்கள் தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பின்பற்ற விரும்புகிறீர்களா? சரி, அப்படியென்றால் நீங்கள் இப்போது செய்ய வேண்டியது என்ன?

  • ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும்

    "ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” எபிரெயர் 9:27. பெரும்பாலான மக்கள் இந்த வசனத்தை படிக்கும்போது, ஒவ்வொரு மனிதனின் தற்போதைய வாழ்க்கையும் நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் ஒருவிதமான பரீட்சை என்றும், அதன் முடிவில் நாம் மரித்து நம் வாழ்வில் நாம் புரிந்த செயல்களுக்கு ஏற்ப பரிசோ தண்டனையோ பெற கடவுள்முன் நிற்க நேரிடும் என்று அர்த்தப்படுத்துகிறார்கள். இது வேதப்பூர்வமான அர்த்தமா? வேதவசனங்களின்படி நியாயத்தீர்ப்பு என்றால் என்ன?

  • ஞானஸ்நானம்

    இரண்டாம் நூற்றாண்டு முதல், தண்ணீர் ஞானஸ்நானம் கடந்தகால பாவங்களை சுத்திகரித்து கடவுளுடன் ஓர் உறவை நிலைநாட்டும் ஒரு சடங்காக பயன்படுத்தப்படு வருகிறது. கிறிஸ்துவின் அப்போஸ்தலரால் கொடுக்கப்பட்ட மெய்  ஞானஸ்நானத்தின் நோக்கம் அதுதானா? கிறிஸ்துவின் பெயரால் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்திற்கும் யோவான் ஸ்நானகன் கொடுத்த ஸ்நானத்திற்கும் என்ன வித்தியாசம்? ஏன் அது  ஒரு 'மறுபிறப்பு' என எண்ணப்படுகிறது? இந்த அடையாளப்பூர்வ செயல் அவசியம்தானா? குழந்தைகள்  கிறிஸ்துவிற்குள் ஞானஸ்நானம் பெறமுடியுமா? ஒரு நபர் ஞானஸ்நானம் எடுக்கும்போது என்னதான் நடக்கிறது?

  • திருச்சபை

    புதிய ஏற்பாட்டில் 'திருச்சபை' (Church) என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினது இயேசுதான். இன்று பெரும்பான்மை மக்கள் திருச்சபைகள் என்றால் தேவாலய கட்டடங்கள் என்று நினைக்கின்றனர். உண்மையில் வேதாகமப்படி, திருச்சபை என்றால் என்ன?  'திருச்சபை' என்ற வேதாகம கிரேக்க மூலச்சொல்லானது எக்கலீசியா (ekklesia) ஆகும். அதன் பொருள் என்ன? ஆதி திருச்சபைகளை வேதாகமம் எவ்வாறு விவரிக்கிறது? இயேசு கிறிஸ்துவின் திருச்சபையில் ஒரு அங்கமாக ஒருவர் எப்படி சேர்வது? அதற்கென செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட காரியங்கள் உள்ளனவா?

  • தேர்ந்தெடுக்கப்பட்டோரின் அழைப்பு

    அப்போஸ்தலனாகிய பவுல் முன்னறிவித்ததைப் போல, கிறிஸ்தவர்களுக்குள்ளிருந்தே கொடிதான ஓநாய்கள் எழும்பி, வேதாகம சத்தியங்களை திரித்து, பெரும்பாலான விசுவாசிகளை ஏமாற்றினர். இந்த பரவலான வஞ்சனையானது அந்திக்கிறிஸ்துவின் 1260 வருட போப்பாண்டத்துவ ஆட்சிக்காலம் முழுவதும் நீடித்து, புராட்டஸ்டன்ட் சீர்திருத்த திருச்சபைகளிலும்கூட பல வடிவங்களில் தொடர்ந்து, பல நூற்றாண்டுகளாக நிலைத்து, இன்றும்கூட பரவலாக உள்ளது. அதனால்தான் இன்று காணப்படும் அனைத்து ஜனரஞ்சகமான கிறிஸ்தவ பிரிவுகளும் ஆதியிலிருந்த மெய் கிறிஸ்தவத்தின் அஸ்திபார நம்பிக்கைகளுக்கு எதிராகச் செல்லும் பல்வேறு கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. அப்படியானால், ஒரு மெய்யான வேதாகாமப்பூர்வமான விசுவாசி இந்த காலத்தில் என்னதான் செய்ய வேண்டும்?

  • பரிசுத்த ஆவியின் அபிஷேகம்

    'நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.' 1கொரிந்தியர் 12:13. இதன் அர்த்தம் என்ன? ஞானஸ்நானத்தின் போது பரிசுத்த ஆவி ஏன் நமக்கு கொடுக்கப்படுகிறது? தேவனின் பரிசுத்த ஆவியின் இந்த அபிஷேகத்தின் நோக்கம் குறித்து இயேசு என்ன குறிப்பிட்டார்? பரிசுத்த ஆவியானாலான ஞானஸ்நானத்திற்கும் அக்கினியினாலான ஞானஸ்நானத்திற்கும் என்ன வித்தியாசம்?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.