பரிசுத்த ஆவி

  • பரிசுத்த ஆவி

    திரித்துவத்தின் மூன்றாம் பங்கு - பரிசுத்த ஆவி - வேதாகமத்தில் எங்குமே தேவன் என சொல்லப்படவில்லை. 5-ஆம் நூற்றாண்டில்தான் அது தேவன் என்று ஒரு கோட்பாடு (Creed) மூலம் அறிவிக்கப்பட்டது (அதன் முழு வரலாறு பின்னர் படிப்போம்) . பரிசுத்த ஆவி பற்றி வேத வசனங்கள் மூலம் நாம் என்ன அறிகிறோம்? முதலில் ஆவி என்றால் என்ன? அது ஏன் பரிசுத்தமாக அழைக்கப்படுகிறது? பரிசுத்த ஆவியின் தாக்கம் என்ன? ஆவி பற்றி இயேசு என்ன சொன்னார்? இந்த கேள்விகளுக்கான பதில்களுடன் சேர்த்து, சிறிது கிரேக்க இலக்கணமும் கற்போம்!

  • ஆவிக்குரியனவும், மாம்சத்திற்குரியனவும்

    Jesus in Gethsemane

    “அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள், ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்”. ரோமர் 8:5-6.மாம்ச சிந்தனை என்பது பாவத்தை குறிக்கிறது என்று பலர் நினைக்கின்றனர். மாம்சத்தின் செயல்கள் பாவம் மட்டுந்தானா? இல்லை, நாம் உலக வாழ்வில் செய்யும் அனைத்து விசயங்களுமே மாம்சத்திற்குரியவைதான்.

  • எவரை வணங்குவது?

    கத்தோலிக்க தலைமை வாடிகன் (Vatican) அமைப்பும், பரவலாக ப்ராட்டஸ்டண்ட் (Protestant) திருச்சபைகளும் ஏற்றுக்கொள்ளும் அதநாசியின் பிரமாணம் (Athanasian Creed) திரித்துவத்தை வணங்க வேண்டும் என்கிறது. பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி - என மூன்று நபர்களை  வணங்க வேண்டும் எனச் சொல்லி, ஆனால் அந்த மூன்று பேரும் ஒரே தேவன் எனவும் கூறுகிறது. இயேசு நாம் வணங்குவது என்னவென்று புரிதல் அவசியம் என்கிறார் (யோவான் 4:22). சரி, நாம் வேதாகமம் படித்து புரிந்து கொள்ளலாமா?

  • ஞானஸ்நானம்

    இரண்டாம் நூற்றாண்டு முதல், தண்ணீர் ஞானஸ்நானம் கடந்தகால பாவங்களை சுத்திகரித்து கடவுளுடன் ஓர் உறவை நிலைநாட்டும் ஒரு சடங்காக பயன்படுத்தப்படு வருகிறது. கிறிஸ்துவின் அப்போஸ்தலரால் கொடுக்கப்பட்ட மெய்  ஞானஸ்நானத்தின் நோக்கம் அதுதானா? கிறிஸ்துவின் பெயரால் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்திற்கும் யோவான் ஸ்நானகன் கொடுத்த ஸ்நானத்திற்கும் என்ன வித்தியாசம்? ஏன் அது  ஒரு 'மறுபிறப்பு' என எண்ணப்படுகிறது? இந்த அடையாளப்பூர்வ செயல் அவசியம்தானா? குழந்தைகள்  கிறிஸ்துவிற்குள் ஞானஸ்நானம் பெறமுடியுமா? ஒரு நபர் ஞானஸ்நானம் எடுக்கும்போது என்னதான் நடக்கிறது?

  • பரிசுத்த ஆவியின் அபிஷேகம்

    'நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.' 1கொரிந்தியர் 12:13. இதன் அர்த்தம் என்ன? ஞானஸ்நானத்தின் போது பரிசுத்த ஆவி ஏன் நமக்கு கொடுக்கப்படுகிறது? தேவனின் பரிசுத்த ஆவியின் இந்த அபிஷேகத்தின் நோக்கம் குறித்து இயேசு என்ன குறிப்பிட்டார்? பரிசுத்த ஆவியானாலான ஞானஸ்நானத்திற்கும் அக்கினியினாலான ஞானஸ்நானத்திற்கும் என்ன வித்தியாசம்?

  • பெந்தெகொஸ்தே இயக்கம்

    பெந்தெகொஸ்தே இயக்கம் 20-ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஓர் இயக்கம். அதன் சபைகளின் முக்கிய கவனம் அந்நிய பாஷைகளில் பேசுவது போன்ற பரிசுத்த ஆவியின் அதிசய வரங்களை அனுபவிப்பதாகும். இன்று பலர் அந்நிய பாஷை வரம் என்றால் யாருக்கும் புரிய மாட்டாத சொற்களை பேசுவது என்று நினைக்கிறார்கள், ஏனென்றால் பெந்தெகொஸ்தே சபைகளில் மக்கள் அதைத்தான் காண்கிறார்கள். ஆனால் ஆதித்திருச்சபை இந்த வரத்தை பெற்றபோது என்ன நிகழ்ந்தது? முதலாவதாக, தேவன் இந்த வரங்களை ஆதித்திருச்சபைக்கு ஏன் கொடுத்தார்? சுகமளித்தல், தனிநபர் தீர்க்கதரிசனங்கள் போன்ற அற்புத வரங்களின் நோக்கம் என்னவாக இருந்தது?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.