வெளி 20:5 - விஷமமாக செருகப்பட்ட தாமதம்

 கருப்பொருள் வசனம் – (மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.) இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். வெளி 20:5

சிக்கல்

1) வரவிருக்கும் கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு இராஜ்யத்தைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது?

2) வெளிப்படுத்துதல் 20:5-இன் உரையால் ஏற்படும் பிரச்சினை என்ன?
கேள்விக்கு உட்பட்ட வசனம் கீழ்க்கண்ட இரு பகுதிகளைக் கொண்டுள்ளது:
  5.a - (மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை)
  5.b - இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.

இதன் முதல் பகுதி 5.a பைபிளின் மற்ற பகுதிகளுக்கு, குறிப்பாக வரவிருக்கும் ஆயிர ஆண்டுகால இராஜ்யத்தின் நோக்கத்தை விவரிக்கும் அனைத்து வேதவசனங்களுக்கும், முரணாக உள்ளது.

ஆகவே, வெளி 20:5a-ஆம் வசனம் வேதாகம ஒத்திசைவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சிக்கலை முன்வைக்கிறது - நிறைய திடமான வசனங்களுடன் முரண்படுவதோடு மட்டுமல்லாமல், பூமியில் வரவிருக்கும் கிறிஸ்துவின் இராஜ்யத்தின் அதிமுக்கிய நோக்கத்தையும் அடிப்படையில் அழித்துப் போடுகிறது.

கர்த்தராகிய இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு, "தேடுங்கள், கண்டடைவீர்கள்" என்று அறிவுறுத்தியது போல, எழுதப்பட்ட வேதவசனங்களில் சத்தியத்தை தேடுவதில் நேரத்தை செலவிடுவது உண்மையில் பயனுள்ளது. வெளிப்படுத்துதல் 20:5-இன் சூழலைப் (Context) பார்க்கும்பொழுதும், வெளிப்படுத்துதல் உரையின் ஆதிகால மூல கைப்பிரதிகளைத் தேடும்போதும், இது சம்பந்தமாக சில சுவாரஸ்யமான விடைகளை நாம் கண்டடைகிறோம்.

1.   சூழல்

வெளிப்படுத்துதல் 20:5-ஐச் சுற்றியுள்ள சூழலை வழங்கும் வசனங்கள் பின்வருமாறு உள்ளன.
  வெளிப்படுத்துதல் 20
   4 - அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
   5.a - (மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.)
   5.b - இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
   6 - முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்;

ஆக, மேற்கண்ட 20:4-6 வசனங்கள் அடிப்படையில் முதலாம் வகை உயிர்த்தெழுதலின் ஒத்திசைவான விளக்கத்தை அளிக்க முயல்வதை காண்கிறோம். இப்போது 5.a பகுதியில் கவனம் செலுத்துவோம்.

2.   மூல கையெழுத்துப் பிரதிகள்

வெளி 20:5.a - (ஆயிரம் ஆண்டுகள் முடியும் வரை மீதமுள்ள இறந்தவர்கள் உயிர்ப்பிக்கவில்லை.)
ஆதிகால மூல கையெழுத்துப் பிரதிகளைத் தேடும்போது, பின்வரும் விசயங்களை கண்டுபிடிக்கிறோம்:

ஆக, கையெழுத்துப் பிரதிகளை நாம் சரிபார்க்கும்போது, 'ஆயிரம் ஆண்டுகள் முடியும் வரை மீதமுள்ள இறந்தவர்கள் உயிர்ப்பிக்கவில்லை' என்று சொல்லும் இந்த பகுதி உண்மையில் மூல பைபிளில் இல்லை என்பதை நாம் காண்கிறோம். யாரோ ஒருவர் பிற்கால கையெழுத்துப் பிரதிகளில் ஏதோ உள்நோக்கத்துடன் இந்த பகுதியை செருகியிருக்கிறார்கள் என்ற விசயம் இதன்மூலம் நமக்கு புரிகிறது.

3.   செருகப்பட்ட வரலாறு

தீர்வு

டி.டி. வேடன் (D.D. Whedon) தனது ‘புதிய ஏற்பாட்டின் வர்ணனை’ (‘Commentary on the New Testament’) புத்தகத்தில்  வெளிப்படுத்துதல் 20:5a-ஐ பற்றி பின்வருமாறு எழுதுகிறார்:

"இந்த வாக்கியத்தைக் கொண்ட பிரதிகளில் சந்தேகத்திற்குரிய எண்ணிக்கையிலான வேறுபாடுகள் உள்ளன. கிரேக்க மொழியில் 'ஆனால் மற்றவர்கள்' என்ற சொற்கள் இந்த பிரதிகளில் மூன்றுவித வேறுபாடுகளில் காணப்படுகின்றன; 'உயிரடையவில்லை' என்ற வார்த்தை மூன்றுவித வேறுபாடுகளிலும்; 'அளவும்' என்ற சொல் இரண்டுவித வேறுபாடுகளிலும் காணப்படுகின்றது;... இந்த வாக்கியம், ஒரு இடைச்செருகல் போல, கருத்துநடையின் ஓட்டத்தில் குறுக்கிடுகிறது. இந்த வாக்கியம் தனக்கு அடுத்துவரும் 'இதுவே' என்ற வார்த்தைக்கும், அந்த வார்த்தையின் உறுதிமொழி குறிக்கும் விசயம் காணப்படும் தனக்கு முன்வந்த வரிக்கும் இடையில் புகுந்து கருத்தோட்டத்தை உடைக்கிறது. இந்த வாக்கியமானது உரையில் மிகவும் அலங்கோலமான இடத்தில் செருகப்பட்ட ஏதோ ஒரு நகலெடுப்பாளரின் விளக்கக் குறிப்பைப் போல தோன்றுகிறது… எந்தவொரு விவிலிய அறிஞரும் தற்போது இதனை நம்பத்தகுந்ததாக கருத மாட்டார்கள்..”

உண்மையில், நாம் 5.a-ஐ தவிர்த்துவிட்டு, 4, 5.b மற்றும் 6-ஆம் வசனங்களை படிக்கும்போது, தொடர்ச்சியான ஒத்திசைவான விவரிப்பை பார்க்கிறோம். ஆனால் 5.a பகுதியோ ஓர் இரணமான கட்டைவிரலைப் போல தனித்து நிற்கிறது, கருத்தின் விவரிப்புக்கு இடையூறு செய்கிறது. என்.ஐ.வி (NIV) போன்ற ஆங்கில பைபிள் பதிப்புகள் அந்த பகுதியை அடைப்புக்குறிக்குள் வைக்கின்றன. இவற்றிற்கெல்லாம் ஒரு தெளிவான காரணம் இருக்கிறது. அது ஒரிஜினலில் இல்லை. அது பைபிளில் இல்லை.

ரோமானியப் பேரரசின் பெயரில் கிறிஸ்துவின் பேரரசை தனக்காகக் கையகப்படுத்த சாத்தான் தைரியமாக முயன்றான். அந்த முயற்சியின் பகுதியாக, கிறிஸ்துவுக்கு பல நூற்றாண்டுகள் பின்னர் வந்த வேதபாரகர்கள் தீய நோக்கத்துடன் போலியான முறையில் இதனை பைபிளின் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் செருகினர். அத்தகைய செயல்களைப் பற்றி அந்த புத்தகமே கூறும் கடுமையான எச்சரிக்கைகளை (வெளி 22:18) புறக்கணித்தனர்.

ஒரிஜினல் பைபிளின் படி, வெளிப்படுத்துதல் 20:4-6 வசனங்களை பின்வருமாறு படிக்க வேண்டும்:
   4 - அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
   5.b - இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
   6 - முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்.

ஆம், உண்மையில் இரண்டு வகையான உயிர்த்தெழுதல்கள் உள்ளன, ஆனால் அவை ஆயிரம் ஆண்டுகளால் பிரிக்கப்படவில்லை. முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவர்கள் - அதாவது நிரூபிக்கப்பட்ட விசுவாசிகள் - கிறிஸ்துவுடன் சிம்மாசனங்களில் அமர்ந்து, இரண்டாவது உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவர்களுக்கு - அதாவது மனிதகுலத்தின் மற்றவர்களுக்கு - நீதி கற்பிப்பதற்காக அவர்கள் மீது ஆட்சி செய்யும் பாக்கியம் பெறவிருக்கிறார்கள். அதுவே இந்த இரண்டு உயிர்த்தெழுதல்களுக்கும் உள்ள வித்தியாசம்!

கிறிஸ்துவின் ஆயிர ஆண்டுகால இராஜ்யம் ஒரு மகிமையான நோக்கத்தைக் கொண்டிருக்கும். கிறிஸ்து மற்றும் அவரது உயிர்த்தெழுந்த சீடர்களின் பரலோக ஆட்சியின் கீழ் உயிர்த்தெழுப்பப்பட்ட மனிதகுலத்தின் மறுவாழ்வும் மறுசீரமைப்புமே அதன் உன்னத நோக்கம். இயேசுவானவரே அதனை "எல்லாவற்றையும் புதுப்பிக்கும் காலம்" (“Renewal of All Things”) என்றழைத்தார் (மத்தேயு 19:28). பேதுரு அதனை  "எல்லாவற்றையும் மறுசீரமைக்கும் காலம்" (“Times of Restitution of All Things”) என்று கருதினார் (அப்போஸ்தலர் 3:20-21 ஆங்கில பைபிள்கள் பார்க்கவும்).

ஆமென், நாம் ஜெபிப்போம் - “உம்முடைய இராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலங்களிலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக!"