சுவிசேஷ ஓட்டத்தின் நோக்கம்

 கருப்பொருள் வசனம்: "ஏனெனில் தேவனே தம்முடைய நல்ல நோக்கத்தின்படி, விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்." பிலிப்பியர் 2:13.

வேதாகமப்படி, கிறிஸ்துவை பின்பற்றுகிறவருடைய பரம அழைப்பு என்பது, அனைத்து மனுக்குலத்திற்கும் அவரது இராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவிக்க நம்முடைய வாழ்க்கையை முழுமையாய் அர்ப்பணிப்பதே ஆகும். இதில் எவ்வித குழப்பமும் இல்லை.

மேலோட்டமாக பார்த்தால், இது ஒரு அற்பமான விஷயம் போல தோன்றலாம். ஆனால் வேதவாக்கியங்களை நாம் வாசிக்கும்போது, நற்செய்தியை அறிவிக்கும் இந்த சுவிசேஷ ஓட்டத்தில் ஓட நம்மை நாமே ஜீவபலியாய் ஒப்புக்கொடுக்கும்படி தேவன் ஏன் கேட்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். அவரது நோக்கம் பல்வேறு சாராம்சங்களை கொண்டதாகும். முதலில் நாம் இந்த தலைப்பைப் பற்றி வேதவசனங்கள் கற்றுக்கொடுக்கும் விசயங்களை பட்டியலிடலாம், பிறகு அவற்றை ஒவ்வொன்றாக ஆழமாக படிப்போம்.

  1. கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மனிதகுலத்திற்கு அறிவிப்பதன் மூலம், தேவன் மேலும் கிறிஸ்துவின் மேலும் உள்ள நம் விசுவாசத்தை நிரூபிக்கிறோம்! இது விசுவாசத்தின் மிக அடிப்படையான ஒரு சோதனைதான்.
  2. கிறிஸ்துவை பின்பற்றும் ஒவ்வொருவரும் தேவனின் ஆசாரியர் என்று வேதம் பறைசாற்றுகிறது. நாம் தேவனின் சுவிசேஷத்தை பிரசங்கிக்கையில், நமது ஆசாரிய கடமையை நிறைவேற்றி, நாம் பரிசுத்தத்தையும் அடைகிறோம்.The Purpose of the Gospel Race
  3. இராஜ்யத்தின் சுவிசேஷத்திற்காக கிறிஸ்துவின் பாடுகளில் நாம் பங்கெடுக்கையில், இராஜ்யம் நிலைநாட்டப்படும்போது அவருடைய மகிமையிலும் அதிகாரத்திலும் நாம் ஒரு பங்கைப் பெறுவோம்.
  4. கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக வாழும் வாழ்க்கை மட்டும்தான் மனுக்குலத்திற்கு நன்மை செய்கிற ஒரே வழியாகும். அதுவே தேவனுக்கு பிரியமாய் வாழ்கின்ற நல்வாழ்வு ஆகும்.
  5. உலகிற்கு சத்தியத்தை பிரசங்கிப்பதான நம் கடமையை நிறைவேற்றவும் சுவிசேஷ வாழ்க்கை நமக்கு உதவுகிறது.
  6. உலகிற்கு நற்செய்தியை பிரசங்கிப்பதன் மூலம், தேவன் மீதும், நம் சக மனிதர் மீதும், ஏன் நமது சத்துருக்கள் மீதும் கூட நாம் காண்பிக்கவேண்டிய பிரதான கட்டளையான அன்பை நாம் நிறைவேற்றுகிறோம், அதன்மூலம் பரிபூரணத்தை அடைகிறோம்.
  7. கிறிஸ்துவுக்குள்ளான நம் சகோதர, சகோதரிகளோடு சேர்ந்து நாம் சுவிசேஷ ஓட்டத்தை ஓடும்போது, அவர்களை தாங்கி தேற்றுவதிலும், அவர்களுடைய ஓட்டத்தில் அவர்களுக்கு உதவுவதுதிலும், கிறிஸ்துவின் சரீரமான திருச்சபையின்மீது காண்பிக்கவேண்டிய அன்பான புதிய கட்டளையை நாம் நிறைவேற்றுகிறவர்களாய் இருக்கிறோம்.
  8. நாம் சுவிசேஷ வேலைகள் பார்க்கையில், வேதாகமத்தை கவனமாக படித்து, தேவனைப் பற்றியும், கிறிஸ்துவைப் பற்றியுமான அறிவில் வளர்கிறோம்.
  9. நாம் உலகிற்கு தேவனின் நற்செய்தியை அறிவிக்கப்போகையில், உலகத்திலிருந்து தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை பிடிக்கும் மீன்பிடிக்கிறவர்களாகிறோம்.
  10. கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக நம் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்வதே, நாம் கிறிஸ்துவைப்போல மாற வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள ஒரே வழி ஆகும்! ஆம், அதுவே ஒரே செயல்முறை.

இனி இவை ஒவ்வொன்றையும் நாம் சற்று ஆழமாக படிப்போம். மேலும் படிக்க: விசுவாசமும், புனிதமும்.