கலாச்சார சட்டம் பேசுவோர்

 கருப்பொருள் வசனம்: இயேசு, "நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்," என்றார். மாற்கு 2:17.

1) இன்றைய காலங்களில் அனைத்து "கிறிஸ்தவப்" பிரிவுகளிலும் காணப்படும் பொதுவான ஒரு விசயம் என்ன?
இன்றைய கிறிஸ்தவ சபைகளில் பெரும்பாலான இளைஞர்கள் ஏமாற்றமடைந்த நிலையில் ஈடுபாடில்லாமல் உள்ளனர். ஏனெனில் அவர்கள் சபை மக்கள் மத்தியில் பரவலாக "நான் உன்னை விட புனிதம்!" என்ற கர்வ நடத்தையையும், அடுத்தவரை குறைசொல்லி குற்றம்தீர்க்கும் மனப்பான்மையையும் அதிகமாக காண்கிறார்கள். இந்த குழுக்களில் பெரும்பாலானவை என்ன நினைக்கின்றனவென்றால் ஏதோ உலகமே பாவத்தில் மூழ்கி கூத்தடித்து கொண்டிருப்பதாகவும், தாங்கள் மட்டும் ஒரு பரிசுத்தமான, தூய, கண்டிப்பான வாழ்க்கை வாழ்வதாகவும் எண்ணுகின்றனர். எனவே அவர்கள் தம்மைத்தாமே உலக மக்களைவிட மேலானவர்கள் என கருதிக்கொண்டு, மனிதரை நரகத்திற்குக் கண்டனம் செய்வதிலும், மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கட்டுப்படுத்த முயல்வதிலும் இறங்குகிறார்கள். தாம் 'கிறிஸ்தவர்களாய்' இருப்பதினால் தாங்கள் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள் என நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் பிரச்சினை என்னவென்றால் – எந்தவொரு நல்ல மனிதரும் தாம் ஒழுக்கத்தில் உயர்ந்தவர் என்று கோரமுடியும். பெரும்பாலான நாத்திகர்கள்கூட மனிதநேயவாதிகளே!

2) மெய் கிறிஸ்தவம் மற்றவரை குறைசொல்லி குற்றம்தீர்க்கும் அத்தகைய மனப்பான்மையை ஆதரிக்கிறதா?
உண்மையில் இல்லை. பரிசேயர்கள் மட்டுமே அத்தகைய மனப்பான்மையைக் காட்டினார்கள். இயேசு பாவிகளோடு அடிக்கடி உணவருந்தினார் என்பதால் அவர்கள் இயேசுவை போஜனப்பிரியன் என்றும், குடிகாரன் என்றும் பழிசொல்லி குற்றம் சாட்டினார்கள் (மத்தேயு 9:11, 11:19). ஆனால் இயேசுவோ அவர்களிடம் கிண்டலாக, "நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்," என்றார் (மாற்கு 2:17).
ஆம், ஆதாமின் வம்சத்தில் பிறந்த எல்லோருமே பாவிதான். நாம் மற்ற எவரையும்விட ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள் அல்ல. தங்களை நீதிமான்கள் என்று கூறிக்கொண்டவர்கள்மேல் தனக்கு எந்தவொரு ஆர்வமும் இல்லை என்பதை இயேசு தெளிவுபடுத்தினார். மாறாக, மனுக்குலத்தின் வீழ்ந்துபோன நிலையையும் தாம் பாவி என்பதையும் ஒப்புக்கொண்ட பணிவான மனம் கொண்டவர்களிடம் பேசுவதற்கே அவர் வந்தார்.

மேலும் படிக்க: வாக்குத்தத்த வியாபாரிகள்