Tag mei kristhavam

விசுவாசமும், புனிதமும்

சுவிசேஷ ஓட்டத்தை நாம் ஓடும்போது நாம் சாதிக்கின்ற அதிமுக்கியமான ஒரு காரியம் என்னவெனில் நம் விசுவாசத்தை நிரூபிக்கிறோம்! பவுல் எழுதிய நிருபங்களின்படி சுவிசேஷத்தை அறிவிப்பது என்பது ஒரு விசுவாசிக்கான அடிப்படைத் தேவையாகும். அதுவே விசுவாசத்தின் சோதனை. நற்செய்திப் பணியின் மற்றொரு முக்கிய நோக்கம் நமது ஆசாரிய கடமையை நிறைவேற்றுவதாகும். ஆம், ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனும் ஓர் ஆசாரியன் என்கிறது வேதாகமம். மேலும், இந்த ஆசாரிய கடமையை செய்வதே பரிசுத்தம் அடைவதற்கான வழியாகும்.

கெஹன்னா- நித்திய அக்கினிக்கடல்

"கெஹன்னா" என்ற கிரேக்க வார்த்தை "நரகம்" என பன்னிரண்டு தடவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கெஹன்னா நரகத்தை குறிக்கிறது எனில், உண்மையில் நாம் டிக்கெட் எடுத்து விமானம் மூலம் நரகத்திற்கு செல்ல முடியும்! ஆம், இஸ்ரவேல் நாட்டிலே மெய்யாகவே அமைந்துள்ள ஒரு நிஜ இடம் "கெஹன்னா". அது ஒரு பெயர்ச்சொல். ஒரு நிஜ இடத்தின் பெயர்! ஆகவே தான் ஒய்.எல்.டீ. (YLT) போன்ற ஆங்கில மொழிபெயர்ப்புகள் "நரகம்" என்று சொல்லாமல் எப்படி ஒரு இடப்பெயரை பயன்படுத்துவோமோ, அங்ஙனமே அதை "கெஹன்னா" (Gehenna) என்றே குறிப்பிடுகின்றன. 'கெஹன்னாவில் உள்ள அக்கினி' என்று இயேசு சொல்வது எப்படியென்றால், 'சைதாப்பேட்டையில் எரியும் தீ' என்று ஒரு சென்னை நகரவாசி சொல்வதை போன்றதே! "கெஹன்னா" என்ற பெயர் கொண்ட ஹின்னோம் பள்ளத்தாக்கு எருசலேம் நகரத்திற்கு சற்று வெளியே அமைந்துள்ளது. இயேசுவின் காலத்தில் அது அந்த நகரத்தின் குப்பையெரிக்கும் பேட்டையாக இருந்தது. குப்பையாக கொட்டப்படும் பொருட்கள் யாவற்றையும் முழுவதாக உட்கொண்டு அழிப்பதற்கென அங்கே தொடர்ந்து நெருப்பு எரியவைக்கப்பட்டுக்கொண்டே (ஒரு நித்திய அக்கினிக்கடல்!) இருக்கும்.

திரித்துவம் கிறிஸ்தவத்துள் நுழைந்த கதை

மறையியல் ஞானமார்க்க தத்துவங்கள் (Gnosticism) பரவ ஆரம்பித்தபோது அப்போஸ்தலர் யோவான் இயேசு தேவகுமாரன் என்பதையும், வல்லமை வாய்ந்த வார்த்தையானவர் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்தி பதிலளிக்கிறார். அந்த வரலாற்று சூழலின் வெளிச்சத்தில் பார்த்தால் யோவானின் புத்தகங்கள் ஒரு புது அர்த்தம்  கொள்கின்றன. அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு, ஞானமார்க்கத்திற்கு எதிர்ப்பாக சில கிறிஸ்தவர்கள் இயேசுவைப் படிப்படியாக தேவனுடைய குமாரன் என்ற ஸ்தானத்திலிருந்து தேவனுக்கே இணையாக உயர்த்துவதை வரலாறு காட்டுகிறது. பிறகு 4-ம் நூற்றாண்டில், இயேசுவை கடவுள் என்று அறிவிக்கும் ஒரு பிரமாணத்தை (Creed) நிறுவவதில் அரசியல் ஆற்றும் பங்கைக் காண்கிறோம். திரித்துவம் என்ற கோட்பாடு - அதாவது, பரிசுத்த ஆவியும் கடவுள் எனும் தத்துவம், 5-ம் நூற்றாண்டில் நுழைகிறது.

பெந்தெகொஸ்தே இயக்கம்

பெந்தெகொஸ்தே இயக்கம் 20-ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஓர் இயக்கம். அதன் சபைகளின் முக்கிய கவனம் அந்நிய பாஷைகளில் பேசுவது போன்ற பரிசுத்த ஆவியின் அதிசய வரங்களை அனுபவிப்பதாகும். இன்று பலர் அந்நிய பாஷை வரம் என்றால் யாருக்கும் புரிய மாட்டாத சொற்களை பேசுவது என்று நினைக்கிறார்கள், ஏனென்றால் பெந்தெகொஸ்தே சபைகளில் மக்கள் அதைத்தான் காண்கிறார்கள். ஆனால் ஆதித்திருச்சபை இந்த வரத்தை பெற்றபோது என்ன நிகழ்ந்தது? முதலாவதாக, தேவன் இந்த வரங்களை ஆதித்திருச்சபைக்கு ஏன் கொடுத்தார்? சுகமளித்தல், தனிநபர் தீர்க்கதரிசனங்கள் போன்ற அற்புத வரங்களின் நோக்கம் என்னவாக இருந்தது?

கிறிஸ்துவின் பாடுகளில் பங்கு

பவுல் எழுதுகிறார் – நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ரோமர் 8:17. இது நியாயமான விசயமாகத்தான் தெரிகிறது. கிறிஸ்துவின் பாடுகளில் நாம் பங்கெடுத்தால் மட்டுமே அவருடைய மகிமையில் பங்கெடுப்போம். இயேசு என்ன விதமான பாடுகளை சந்தித்தார்? சுவிசேஷத்திற்காக பாடுபடுவது அப்போஸ்தலர்களான பவுல், பேதுரு போன்றவர்களுக்கு மட்டும் தானா?

டார்டரூ – வீழ்ந்த தூதர் சிறை

"டார்டரூ" என்ற கிரேக்க வார்த்தை வேதாகமத்தில் ஒரே ஒருமுறைதான் வருகிறது. அது "நரகம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "பாவம் செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்தார்" (2பேதுரு 2:4). – இங்கே "நரகத்திலே தள்ளி" என்று முழு சொற்றொடரும் "டார்டரூ" என்ற ஒரே மூல கிரேக்க வார்த்தையின் மொழியாக்கம் ஆகும். சில தேவதூதர்கள் தமது உயர் கண்ணியத்தில் இருந்து வீழ்ந்து தகுதியற்ற அவமான நிலைக்கு ஆளானதையும், அதனால் தேவன் அவர்களை கீழ்நிலைப்படுத்தினதையும் அது குறிக்கிறது. விழுந்துபோன தூதர்களையும், பாவிகளையும் நித்திய காலமாக பிடித்துவைக்க ஒரு பாதாள நரக உலகம் இருக்கிறது என்று பிரசங்கிக்கும் பொருட்டு சிலர் இந்த வசனத்தை தவறாக பயன்படுத்துவது உண்டு. ஆனால், வசனம் நமக்கு என்ன காண்பிக்கிறது?

இது அவ்வளவு முக்கியமா?

'பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்' எனவும் (1கொரிந்தியர் 8:6), அந்த தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்' எனவும் (யோவான் 3:16) வேதவாக்கியங்கள் அறிவிக்கின்றன. நம் கர்த்தராகிய (எஜமானாகிய) இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை (எபேசியர் 1:17) நாம் தொழுதுகொண்டு, பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தர் (எஜமான்) என்று அறிக்கைபண்ண வேண்டும் (பிலிப்பியர் 2:11). ஆனால் இதன் முக்கியத்துவம் என்ன?

கலாச்சார சட்டம் பேசுவோர்

இன்றைய கிறிஸ்தவ சபைகளில், எந்தவொரு பிரிவை சார்ந்த சபையாக இருந்தாலும் சரி, பெரும்பாலான இளைஞர்கள் ஏமாற்றமடைந்த நிலையில் ஈடுபாடில்லாமல் உள்ளனர். ஏனெனில் அவர்கள் சபை மக்கள் மத்தியில் பரவலாக "நான் உன்னை விட புனிதம்!" என்ற கர்வ நடத்தையையும், அடுத்தவரை குறைசொல்லி குற்றம்தீர்க்கும் மனப்பான்மையையும் அதிகமாக காண்கிறார்கள். கிறிஸ்துவின் போதனைகள் அத்தகைய மனப்பான்மையை ஆதரிக்கின்றனவா? அவரை பின்பற்றுபவர்கள் அவர்வழி செயல்படுவதா, அல்லது இயேசுவை பாவிகளோடு அடிக்கடி உணவருந்தினார் என்பதால் போஜனப்பிரியன் என்றும், குடிகாரன் என்றும் பழிசொல்லி குற்றம் சாட்டின பரிசேயர்கள் போல செயல்படவேண்டுமா?

உண்மை சொல்லி நன்மை செய்!

தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். 1பேதுரு 4:19. நாம் நன்மை செய்ய வேண்டும் என்று பேதுரு கூறுகிறார். ஆனால் இவ்வுலகத்தின் நன்மைகள் என அழைக்கப்படுபவை எல்லாம் மாயை, அர்த்தமற்றவை என வேதாகமம் கருதுகிறது (பிரசங்கி 1:14; 2:1). அப்படியிருக்க ஒருவருக்கு நாம் உண்மையிலேயே என்ன நன்மைதான் செய்ய முடியும்? மேலும் சிலர் கேட்கலாம் – ஏன் நாம் உலகிற்கு இப்போதே சொல்ல வேண்டும்? எப்படியும் இராஜ்யத்தில் கேட்கத்தானே போகிறார்கள்? பெரும்பாலோர் தற்போது நற்செய்தியை நிராகரிக்கத்தான் செய்கிறார்கள், இல்லையா?

அழுகையும் பற்கடிப்பும்

அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் இடம் பற்றி இயேசு பேசினாரே, அது என்ன? மொத்தம் ஏழு வசனங்களிலே இந்த "அழுகையும், பற்கடிப்பும்" வாசகத்தை காண்கிறோம் - மத்தேயு 8:12; 13:42,50; 22:13; 24:51; 25:30; லூக்கா 13:28. இந்த ஏழு வசனங்களிலுமே இயேசு இந்த சொற்றொடரை உவமைகளிலும், அடையாள கூற்றுகளிலும் மட்டுமே பயன்படுத்துகிறார்; எனவே இது ஒரு அடையாளமே என்பது தெளிவாகிறது. சந்தர்ப்ப சூழலை பொறுத்து அதன் அர்த்தம் மாறுபடுகிறது. எனினும் எல்லா இடங்களிலும் அதன் பொதுவான அர்த்தமானது என்னவெனில் தேவனின் பார்வையில் தவறு செய்த ஒரு மக்கள் கூட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட காலம்வரை நீடிக்கும் ஒரு குறிப்பிட்ட தண்டனை/சோதனைக்காலம் என்பதே ஆகும்.

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission. Scripture quotations marked (NLT) are taken from the Holy Bible, New Living Translation, copyright © 1996, 2004, 2007 by Tyndale House Foundation. Used by permission of Tyndale House Publishers, Inc., Carol Stream, Illinois 60188. All rights reserved. Scripture quotations marked HCSB are taken from the Holman Christian Standard Bible®, Copyright © 1999, 2000, 2002, 2003, 2009 by Holman Bible Publishers. Used by permission. Holman Christian Standard Bible®, Holman CSB®, and HCSB® are federally registered trademarks of Holman Bible Publishers. Wherever indicated NCV, scripture taken from the New Century Version®. Copyright © 2005 by Thomas Nelson, Inc. Used by permission. All rights reserved.