Tag கடவுள்

எவரை வணங்குவது?

கத்தோலிக்க தலைமை வாடிகன் (Vatican) அமைப்பும், பரவலாக ப்ராட்டஸ்டண்ட் (Protestant) திருச்சபைகளும் ஏற்றுக்கொள்ளும் அதநாசியின் பிரமாணம் (Athanasian Creed) திரித்துவத்தை வணங்க வேண்டும் என்கிறது. பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி - என மூன்று நபர்களை  வணங்க வேண்டும் எனச் சொல்லி, ஆனால் அந்த மூன்று பேரும் ஒரே தேவன் எனவும் கூறுகிறது. இயேசு நாம் வணங்குவது என்னவென்று புரிதல் அவசியம் என்கிறார் (யோவான் 4:22). சரி, நாம் வேதாகமம் படித்து புரிந்து கொள்ளலாமா?

சர்வ வல்ல தேவன் யார்?

திரித்துவம், திரித்துவ தெய்வம் என்ற வார்த்தைகள் வேதாகமத்தில் காணப்படவில்லை. திரித்துவக் கோட்பாடில் பயன்படுத்தப்படுகிற தலைப்புகள் - 'பிதாவாகிய தேவன்', 'குமாரனாகிய தேவன்', 'பரிசுத்த ஆவியானவராகிய தேவன்' - நாம் பைபிளில் தேடும்போது, இவற்றில் ஒன்றை மட்டுமே காணலாம் - 'பிதாவாகிய தேவன்'. வேதாகமத்தில் 'தேவன்' என்ற வார்த்தை 3500+ தரம் நிகழ்கிறது. கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் சர்வ வல்ல தேவனை (கடவுளை) குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் சில இடங்களில் 'தேவன்' என்ற வார்த்தை வேறுவிதமாக பயன்படுத்தப்படுவதையும் காண்கிறோம். அதனால்தான் பவுல் கூறுகிறார் - 'வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டு.' (1 கொரிந்தியர் 8:5). வேதாகமத்தில் வேறே தேவர்களை எங்கு காண்கிறோம்?

ஆதியில்லா கேள்வி

திரித்துவக் குழுக்கள் கடவுளும், இயேசுவும் ஆதி (தொடக்கம்) இல்லா ஒரு நித்திய தன்மை (அநாதித்தன்மை) கொண்டவர்கள் என்ற ஒரு கோட்பாட்டை ஊக்குவிக்க முயல்கின்றன. இயேசுவும், சர்வ வல்ல தேவனும் (கடவுளும்) இனி நித்தியத்திற்கும் நிலைத்திருப்பார்களா என்பதுதான் கேள்வி என்றால், வேதாகமத்தின்படி அதன் பதில் ஆம், நிச்சயமாக! ஆனால் கடவுள், இயேசு இருவரும் ஆதியில்லாதவர்களா (அநாதியானவர்களா) என்பது பற்றி கேள்வி எழுந்தால், அதற்குரிய பதில் வேதாகமத்திலிருந்து ஒழுங்காக ஆராயப்பட வேண்டும். இந்த தலைப்பில் சில வசனங்களை பார்க்கலாம். மேலும், 'பிதா', 'குமாரன்' என்ற சொற்பதங்களே இந்த விசயத்தை எளிதாக புரிந்து கொள்ள உதவுகின்றன.

பரிசுத்த ஆவி

திரித்துவத்தின் மூன்றாம் பங்கு - பரிசுத்த ஆவி - வேதாகமத்தில் எங்குமே தேவன் என சொல்லப்படவில்லை. 5-ஆம் நூற்றாண்டில்தான் அது தேவன் என்று ஒரு கோட்பாடு (Creed) மூலம் அறிவிக்கப்பட்டது (அதன் முழு வரலாறு பின்னர் படிப்போம்) . பரிசுத்த ஆவி பற்றி வேத வசனங்கள் மூலம் நாம் என்ன அறிகிறோம்? முதலில் ஆவி என்றால் என்ன? அது ஏன் பரிசுத்தமாக அழைக்கப்படுகிறது? பரிசுத்த ஆவியின் தாக்கம் என்ன? ஆவி பற்றி இயேசு என்ன சொன்னார்? இந்த கேள்விகளுக்கான பதில்களுடன் சேர்த்து, சிறிது கிரேக்க இலக்கணமும் கற்போம்!

யோவான் 1:1 – வார்த்தையும் தேவனும்

யோவான் 1:1 கூறுகிறது, 'ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனுடன் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது'. இவ்வசனம் வார்த்தை கடவுளுடன் இருந்ததாகவும், அதே சமயத்தில் அதுவே கடவுளாகவும் இருந்ததாகவும் சொல்கிற மாதிரி தெரிகிறது. கூட பரிசுத்த ஆவிபற்றி  குறிப்பிடாத பற்றாக்குறை இருப்பினும், இவ்வசனம் திரித்துவத்தை நிரூபிக்க மேற்கோள் காட்டப்படுவது வழக்கம். யோவானின் மூல வார்த்தைகளை கிரேக்க மொழியில் படித்துப் பார்ப்போம். வார்த்தை (லோகாஸ்) பற்றியும் தேவன் பற்றியும் அவர் உண்மையில்  என்ன சொல்கிறார் என்பது பற்றி தெளிவான புரிதல் கிடைக்கும்.

திரித்துவம் கிறிஸ்தவத்துள் நுழைந்த கதை

மறையியல் ஞானமார்க்க தத்துவங்கள் (Gnosticism) பரவ ஆரம்பித்தபோது அப்போஸ்தலர் யோவான் இயேசு தேவகுமாரன் என்பதையும், வல்லமை வாய்ந்த வார்த்தையானவர் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்தி பதிலளிக்கிறார். அந்த வரலாற்று சூழலின் வெளிச்சத்தில் பார்த்தால் யோவானின் புத்தகங்கள் ஒரு புது அர்த்தம்  கொள்கின்றன. அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு, ஞானமார்க்கத்திற்கு எதிர்ப்பாக சில கிறிஸ்தவர்கள் இயேசுவைப் படிப்படியாக தேவனுடைய குமாரன் என்ற ஸ்தானத்திலிருந்து தேவனுக்கே இணையாக உயர்த்துவதை வரலாறு காட்டுகிறது. பிறகு 4-ம் நூற்றாண்டில், இயேசுவை கடவுள் என்று அறிவிக்கும் ஒரு பிரமாணத்தை (Creed) நிறுவவதில் அரசியல் ஆற்றும் பங்கைக் காண்கிறோம். திரித்துவம் என்ற கோட்பாடு - அதாவது, பரிசுத்த ஆவியும் கடவுள் எனும் தத்துவம், 5-ம் நூற்றாண்டில் நுழைகிறது.

இது அவ்வளவு முக்கியமா?

'பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்' எனவும் (1கொரிந்தியர் 8:6), அந்த தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்' எனவும் (யோவான் 3:16) வேதவாக்கியங்கள் அறிவிக்கின்றன. நம் கர்த்தராகிய (எஜமானாகிய) இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை (எபேசியர் 1:17) நாம் தொழுதுகொண்டு, பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தர் (எஜமான்) என்று அறிக்கைபண்ண வேண்டும் (பிலிப்பியர் 2:11). ஆனால் இதன் முக்கியத்துவம் என்ன?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission. Scripture quotations marked (NLT) are taken from the Holy Bible, New Living Translation, copyright © 1996, 2004, 2007 by Tyndale House Foundation. Used by permission of Tyndale House Publishers, Inc., Carol Stream, Illinois 60188. All rights reserved. Scripture quotations marked HCSB are taken from the Holman Christian Standard Bible®, Copyright © 1999, 2000, 2002, 2003, 2009 by Holman Bible Publishers. Used by permission. Holman Christian Standard Bible®, Holman CSB®, and HCSB® are federally registered trademarks of Holman Bible Publishers. Wherever indicated NCV, scripture taken from the New Century Version®. Copyright © 2005 by Thomas Nelson, Inc. Used by permission. All rights reserved.