ஆதியில்லா கேள்வி

திரித்துவக் குழுக்கள் கடவுளும், இயேசுவும் ஆதி (தொடக்கம்) இல்லா ஒரு நித்திய தன்மை (அநாதித்தன்மை) கொண்டவர்கள் என்ற ஒரு கோட்பாட்டை ஊக்குவிக்க முயல்கின்றன. இயேசுவும், சர்வ வல்ல தேவனும் (கடவுளும்) இனி நித்தியத்திற்கும் நிலைத்திருப்பார்களா என்பதுதான் கேள்வி என்றால், வேதாகமத்தின்படி அதன் பதில் ஆம், நிச்சயமாக! ஆனால் கடவுள், இயேசு இருவரும் ஆதியில்லாதவர்களா (அநாதியானவர்களா) என்பது பற்றி கேள்வி எழுந்தால், அதற்குரிய பதில் வேதாகமத்திலிருந்து ஒழுங்காக ஆராயப்பட வேண்டும். இந்த தலைப்பில் சில வசனங்களை பார்க்கலாம். மேலும், 'பிதா', 'குமாரன்' என்ற சொற்பதங்களே இந்த விசயத்தை எளிதாக புரிந்து கொள்ள உதவுகின்றன.

சர்வ வல்ல தேவன் (கடவுள்) பற்றியும், இயேசு கிறிஸ்து பற்றியும் நாம் படித்தோம். சரிசமானத்துவ கேள்வி குறித்தும் ஆராய்ந்தோம். ஆனால் திரித்துவ அதநாசியின் பிரமாணம் (Athanasian Creed) கூறும் “சம நித்தியர்” கூற்று வேதப்படி உண்மையா?
இயேசுவும், சர்வ வல்ல தேவனும் (கடவுளும்) இனி நித்தியத்திற்கும் நிலைத்திருப்பார்களா என்பதுதான் கேள்வி என்றால், வேதாகமத்தின்படி அதன் பதில் ஆம், நிச்சயமாக!
ஆனால், திரித்துவக் குழுக்கள் கடவுளும், இயேசுவும் ஆதி (தொடக்கம்) இல்லா ஒரு நித்திய தன்மை (அநாதித்தன்மை) கொண்டவர்கள் என்ற ஒரு கோட்பாட்டை ஊக்குவிக்க முயல்கின்றன.

  1. நாம் வேதாகம வசனங்களில் தேடும்போது, இந்த ஆதி இல்லாத நித்தியத்தன்மை (அநாதித்தன்மை) கடவுளைப் பொறுத்தவரையில் உண்மையாக இருப்பது உறுதிப்படுத்துகிறது. ஆனால் இயேசுவுக்கு அது பொருந்தவில்லை.
  2. இயேசு ‘தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறவர்’ என்றும் (வெளிப்படுத்துதல் 3:14), ‘சர்வ சிருஷ்டிக்கும் முந்தின முதற்பேறுமானவர்’ (கொலோசெயர் 1:15) என்றும் வேதவாக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன.
    ஆக, இயேசுவிற்கு ஓர் ஆரம்பம் (ஆதி) இருந்தது. அதனால் அவர் அநாதியானவர் இல்லை.
  3. மேலும், இயேசு தேவனுடைய குமாரனென்று நாம் அறிந்திருக்கிறோம். ‘குமாரன்’ என்ற சொற்பதமே அவர் பிதாவானவரால் ஒரு காலக்கட்டத்தில் படைக்கப்பட்டு வெளிக்கொண்டுவந்திருக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது அல்லவா?
    எனவே, கடவுள் (பிதா) மட்டும் தனியாக இருந்த ஒரு முந்தின காலம் இருந்திருக்க வேண்டும்.

ஆக, கடவுளும் (பிதாவும்), இயேசுவும் சமநித்தியர் அல்ல.

மேலும் படிக்க: பரிசுத்த ஆவி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission. Scripture quotations marked (NLT) are taken from the Holy Bible, New Living Translation, copyright © 1996, 2004, 2007 by Tyndale House Foundation. Used by permission of Tyndale House Publishers, Inc., Carol Stream, Illinois 60188. All rights reserved. Scripture quotations marked HCSB are taken from the Holman Christian Standard Bible®, Copyright © 1999, 2000, 2002, 2003, 2009 by Holman Bible Publishers. Used by permission. Holman Christian Standard Bible®, Holman CSB®, and HCSB® are federally registered trademarks of Holman Bible Publishers. Wherever indicated NCV, scripture taken from the New Century Version®. Copyright © 2005 by Thomas Nelson, Inc. Used by permission. All rights reserved.

Image Credits - Praying Girl: christian-graphics.net; Hands praying by the Bible: Photo by kevin carden(creationswap.com/cardensdesign) in creationswap.com; Stars and quasar: By ESO/L. Calçada (http://www.eso.org/public/images/eso1247a/) [CC-BY-3.0], via Wikimedia Commons; Jesus' Sermon on the Mount: By Carl Heinrich Bloch [Public domain], via Wikimedia Commons; Jesus Praying in the Garden: By Waiting For The Word (www.flickr.com/photos/waitingfortheword/) [CC-BY-2.0], via flickr; Holy Spirit at the Pentecost: By Jean II Restout [Public domain], via Wikimedia Commons; Christ taking leave of the Apostles: By Duccio [Public domain], via Wikimedia Commons; Council of Nicea: By Fresco in Capella Sistina, Vatican [Public domain], via Wikimedia Commons; The Lord's Prayer: James Tissot [Public domain], via Wikimedia Commons; Transfiguration of Christ: Giovanni Gerolamo Savoldo [Public domain], via Wikimedia Commons