எவரை வணங்குவது?

கத்தோலிக்க தலைமை வாடிகன் (Vatican) அமைப்பும், பரவலாக ப்ராட்டஸ்டண்ட் (Protestant) திருச்சபைகளும் ஏற்றுக்கொள்ளும் அதநாசியின் பிரமாணம் (Athanasian Creed) திரித்துவத்தை வணங்க வேண்டும் என்கிறது. பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி - என மூன்று நபர்களை  வணங்க வேண்டும் எனச் சொல்லி, ஆனால் அந்த மூன்று பேரும் ஒரே தேவன் எனவும் கூறுகிறது. இயேசு நாம் வணங்குவது என்னவென்று புரிதல் அவசியம் என்கிறார் (யோவான் 4:22). சரி, நாம் வேதாகமம் படித்து புரிந்து கொள்ளலாமா?

 கருப்பொருள் வசனம் இயேசு அவளிடம், “நீங்கள் புரிந்துகொள்ள முடியாததை வணங்கி வருகிறீர்கள். நாங்கள் வணங்கப்படுபவரைப் புரிந்துகொண்டிருக்கிறோம்,” என்றார். (யோவான் 4:22)

1) இன்று பரவலாக கிறிஸ்தவ தேவாலயங்கள் யாரை வழிபடுகின்றன?
கத்தோலிக்க தலைமை வாடிகன் (Vatican) அமைப்பும், பரவலாக ப்ராட்டஸ்டண்ட் (Protestant) திருச்சபைகளும் ஏற்றுக்கொள்ளும் அதநாசியின் பிரமாணம் (Athanasian Creed) இவ்வாறு உரைக்கிறது:
“தேவத்துவமுள்ளவர்களை கலவாமலும், தேவத்துவத்தைப் பிரியாமலும், ஏகதேவனை திரித்துவமாகவும்: திரித்துவத்தை ஏகத்துவமாகவும் வணங்கவேண்டுமென்பதே. பிதாவானவர் ஒருவர், குமாரனானவர் ஒருவர், பரிசுத்த ஆவியானவர் ஒருவர்.
பிதா நித்தியர் நித்தியர்
, குமாரனும் நித்தியர்: பரிசுத்த ஆவியும் நித்தியர். ஆகிலும் மூன்று  நித்திய வஸ்துக்களில்லை. நித்திய வஸ்து ஒன்றே. அப்படியே பிதா சர்வ வல்லவர், குமாரனும் சர்வ வல்லவர்: பரிசுத்த ஆவியும் சர்வ வல்லவர். ஆகிலும் மூன்று  சர்வ வல்ல வஸ்துக்களில்லை. சர்வ வல்ல வஸ்து ஒன்றே. அப்படியே பிதா தேவன், குமாரனும் தேவன்: பரிசுத்த ஆவியும் தேவன். ஆகிலும் மூன்று தேவர்களில்லை: தேவன் ஒருவரே. அப்படியே பிதா கர்த்தர், குமாரனும் கர்த்தர்: பரிசுத்த ஆவியும் கர்த்தர். ஆகிலும் மூன்று கர்த்தர்களில்லை: கர்த்தர் ஒருவரே. அம்மூவரில் ஒவ்வொருவரும் தனித்தனியாக தேவனென்றும் கர்த்தரென்றும் அறிக்கையிடவேண்டும்.. மூன்று தேவர்கள் உண்டென்றும், மூன்று கர்த்தர்கள் உண்டென்றும் சொல்லக் கூடாது.. பிதா ஒருவராலும் உண்டாக்கப்பட்டவருமல்ல. குமாரன் பிதாவினாலேயே இருக்கிறவர்: உண்டாக்கப்பட்டவருமல்ல, ஜெனிப்பிக்கப்பட்டவரே.. அன்றியும் இந்த திரித்துவத்தில் ஒருவரும் முந்தினவருமல்ல, பிந்தினவருமல்ல: ஒருவரில் ஒருவர் பெரியவருமல்ல, சிறியவருமல்ல. மூவரும் சம நித்தியரும்: சரிசமானருமாம். ஆதலால் மேற்சொல்லியபடி, எல்லாவற்றிலும்: ஏகத்துவத்தை திரித்துவமாகவும், திரித்துவத்தை ஏகத்துவமாகவும் வணங்க வேண்டும்.”
இந்த விசுவாச அறிக்கையானது நாம் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி – என மூன்று நபர்களை  வணங்க வேண்டும் எனச் சொல்லி, ஆனால் அந்த மூன்று பேரும் ஒரே தேவன் எனவும் கூறுகிறது. நிச்சயமாக, புரிந்து கொள்ள கடினமான ஓர் விசயம் தான்!

2) சிலர் கேட்கலாம் – ‘நாம் இதைப் புரிந்து கொள்வது அவசியமா, என்ன? புரிந்துகொள்ளமுடியாத மறைபொருளாய் அது இருக்கலாம் இல்லையா?’
ஆனால், பொருத்தமான கேள்வி என்னவெனில் – அது போன்ற ஒரு மனப்போக்கு வேதப்பூர்வமாக சரியா? இயேசுவானவர் சமாரியப் பெண்ணை வணங்குவது என்னவென்று புரிந்துகொள்ளாததற்காக கடிந்துகொண்டது உண்மை தானே! ஆம், அவர், “நீங்கள் புரிந்துகொள்ள முடியாததை வணங்கி வருகிறீர்கள். நாங்கள் வணங்கப்படுபவரைப் புரிந்துகொண்டிருக்கிறோம்’ என்றார்! (யோவான் 4:22)

3) சரி, வேதாகமத்தின்படி, யாரை நாம் வணங்கி வழிபட வேண்டும்?

  1. இயேசு தனக்கு தான் வழிபடுவது யார் எனத் தெரியும் என்றார்(யோவான் 4:22). அவர் தான் வழிபடுவது பிதாவை என்று தெளிவுபடுத்தினார் (யோவான் 4:23). எனவே நாம் பிதாவாகிய தேவனை வழிபட வேண்டும் என்று இயேசுவானவரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்.
  2. வேதம் மற்றொருவரையும் வழிபட சொல்கிறது – ஆம், இயேசு கிறிஸ்துவை.
    “தேவன், தமது முதற்பேறானவரை [இயேசுவை] உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.” எபிரேயர் 1:6.
    தேவன் அனைவரும் தன்  குமாரன் இயேசு கிறிஸ்துவிற்கு அடிபணிந்து வணங்கிட வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
    “குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.” (யோவான் 5:23)
    “படவில் உள்ளவர்கள் வந்து, “மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன்,” என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.” (மத்தேயு 14:33)

வேதாகம வசனங்கள் மனிதகுலம் யாரை வழிபடலாம் என்பதில் மிகுந்த கண்டிப்பு காண்பிக்கின்றன. தேவதூதர்கள், ஆவிகள், சக மனிதர்கள், விலங்குகள், சிலைகள் அல்லது படங்கள் – இவற்றை எல்லாம் வழிபட கூடாது என நம்மை தடுக்கின்றன.

வெளிப்படுத்தின விசேஷம் 4 & 5ஆம் அதிகாரங்கள் இதை உறுதி செய்கின்றன. தேவனையும், (தேவனின் ஆட்டுக்குட்டியான) இயேசுவையும் வணங்குவதற்கு தகுதியானவர்களாக சித்தரிக்கின்றன. சரி, தேவன் பற்றியும் இயேசு பற்றியும் மேலும் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். பரிசுத்த ஆவி குறித்தும் படிப்போம்.

மேலும் படிக்க: சர்வ வல்ல தேவன் – யார் அவர்?

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission. Scripture quotations marked (NLT) are taken from the Holy Bible, New Living Translation, copyright © 1996, 2004, 2007 by Tyndale House Foundation. Used by permission of Tyndale House Publishers, Inc., Carol Stream, Illinois 60188. All rights reserved. Scripture quotations marked HCSB are taken from the Holman Christian Standard Bible®, Copyright © 1999, 2000, 2002, 2003, 2009 by Holman Bible Publishers. Used by permission. Holman Christian Standard Bible®, Holman CSB®, and HCSB® are federally registered trademarks of Holman Bible Publishers. Wherever indicated NCV, scripture taken from the New Century Version®. Copyright © 2005 by Thomas Nelson, Inc. Used by permission. All rights reserved.

Image Credits - Praying Girl: christian-graphics.net; Hands praying by the Bible: Photo by kevin carden(creationswap.com/cardensdesign) in creationswap.com; Stars and quasar: By ESO/L. Calçada (http://www.eso.org/public/images/eso1247a/) [CC-BY-3.0], via Wikimedia Commons; Jesus' Sermon on the Mount: By Carl Heinrich Bloch [Public domain], via Wikimedia Commons; Jesus Praying in the Garden: By Waiting For The Word (www.flickr.com/photos/waitingfortheword/) [CC-BY-2.0], via flickr; Holy Spirit at the Pentecost: By Jean II Restout [Public domain], via Wikimedia Commons; Christ taking leave of the Apostles: By Duccio [Public domain], via Wikimedia Commons; Council of Nicea: By Fresco in Capella Sistina, Vatican [Public domain], via Wikimedia Commons; The Lord's Prayer: James Tissot [Public domain], via Wikimedia Commons; Transfiguration of Christ: Giovanni Gerolamo Savoldo [Public domain], via Wikimedia Commons